தொடர்ச்சியாய் ஐந்தாவது வாரமும் சந்தை சரிவினை சந்தித்திருக்கிறது.பிஃப்ரவரி முதல் வாரத்திலிருந்து நேற்றுவரை சந்தை 15% சரிந்திருக்கிறது.
அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்கள் கையிருப்புகளை விற்று வருவதும், பரஸ்பர நிதியங்கள் தங்களால் இயன்றவரை பங்குகளை வாங்கிச் சேர்த்துவிட்ட நிலையில் பெரிதும் பாதிப்புக்குள்ளானதும், ஆகப்போவதும் தனி நபர் முதலீட்டாளர்கள்தான்.
பணவீக்கம் தற்போதைய 6.1%ல் இருந்து 6.31% ஆக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பணவீக்கம் 3.86% என்ப்து குறிப்பிட தக்கது.
வரும் வாரமும் பெரிதாய் நம்பிக்கையளிப்பதாய் இல்லை. பணவீக்கம் தற்போதுள்ள நிலையில் இருந்து மேலும் உயரும் என்கிற அச்சம், சர்வதேச சந்தைகளின் தடுமாற்றம்…குறிப்பாய் அமெரிக்க, ஜப்பானிய மற்றும் சீன சந்தைகளில் உருவாகியுள்ள நெருக்கடிகள். வளரும் சந்தைகளில் இருந்து பெருமளவு பணம் வெளியேறிக்கொண்டிருப்பது போன்ற சர்வதேச காரணிகளும் நமது சந்தையின் வாய்ப்புகளை முடக்கலாம்.
வரும் வாரத்தில் அமெரிக்க பெடரல் வங்கி மற்றும் Bank of Japan புதிய கொள்கை முடிவுகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயமாய் இது காளைகளுக்கு உகந்த செய்தியாக இருக்காது.
நேற்று சந்தையில் பட்டியலிடப்பட்ட Page Industries, Raj TV இரண்டுமே அறிமுக விலையில் இருந்து முறையே 25%, 12% சரிந்திருக்கின்றன. சமீபத்தில் பட்டியலிடப்பட்ட பங்குகளில் MindTree Consulting,Idea Cellular தவிர அனைத்து பங்குகளுமே அறிமுக விலையில் இருந்து கீழே இறங்கியுள்ளது குறிப்பிடதக்கது.
Arcelor Mittal நிறுவனம் மூன்றாவது பெரிய இரும்பு உற்பத்தியாளரான தென்கொரியாவின் Posco வை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருப்பதாக வந்த செய்திகளை தென்கொரிய நிறுவனம் மறுத்திருக்கிறது.ஆனால் இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை மிட்டல் குழுமம் துவக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை என்றே நினைக்கிறேன்.
ICRA, தனது 26% பங்குகளை IPO மூலம் சந்தைக்கு கொண்டு வருகிறது. மும்பை மற்றும் தேசிய சந்தையில் பட்டியலிடப்போகும் இந்த பங்குகளின் விலைபட்டை Rs275-330 என நிர்ணயிக்கப்பட்டிருக்க்கிறது. இந்த வகையில் மொத்தம் 25.81 லட்சம் பங்குகள் ஒதுக்கப்பட இருக்கிறது. துணிந்து முதலீடு செய்யலாம்.
Dear Sir,
Your All Old Postings are very useful for me.
எழுதியவர் Sakthivel நாள் நவம்பர் 16, 2009
நேரம் 4:27 பிற்பகல்