மார்ச் 17, 2007


 • அதிகரித்துவரும் பணவீக்க விகிதம்
 • உயர்ந்துவரும் கச்சா எண்ணை விலை
 • சரியும் தொழில்வளர்ச்சி குறியீடுகள்
 • வாரத்தின் நெடுகில் வெளியாகும் நிறுவனங்களின் Advance tax விவரங்கள்
 • நாளைய அமெரிக்க பெஃடரல் வங்கி கூட்டமும் அதன் முடிவுகளும்

 

இவையெல்லாம் இந்த வாரத்தைய சந்தையின் போக்கினை முடிவு செய்யும் காரணிகளாய் இருக்கும்.வெள்ளியன்று அமெரிக்க சந்தைகளின் வீழ்ச்சி இன்றைய ஆசிய சந்தைகளில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கலாம்.

நாளை நடைபெறவிருக்கும் அமெரிக்க பெஃடரல் வங்கிக் கூட்டத்தில் 0.75%-1% வரை வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாமென்கிற எதிர்பாப்புகள் இருக்கின்றன. பலவீனமான அமெரிக்க சந்தைகளுக்கு இத்தகைய அறிவிப்புகள் தற்காலிக நிவாரணமாய்த்தான் இருக்க முடியும். இதன் தாக்கம் ஒன்றிரண்டு நாட்கள்/வாரங்களுக்கு நீடிக்கலாம்….அதன் பின்னர் சரிவுகள் தொடருமென்றே நினைக்கிறேன்.

நமது சந்தைகளை பொறுத்த வரையில் இந்த வாரத்தில்,நிறுவனங்கள் செலுத்திய காலாண்டு Advance tax விவரங்கள் வெளியாகும்…இவை எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இடது சாரிகளின் எதிர்ப்பினை மீறி மத்திய அரசு அனுசக்தி ஒப்பந்தத்தினை செயலாக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஒரு வேளை அத்தகைய நடவடிக்கைகள் துவங்கும் பட்சத்தில் இடதுசாரிகளி ஆதரவினை இழப்பதை விட தேர்தலை சந்திக்கவே காங்கிரஸ் விரும்பும்….இத்தகைய குழப்பமான அரசியல் நிலவரம் நமது சந்தைகளை பொறுத்தவரையில் வெந்த புண்னில் வேல் பாய்ச்சுவதை போன்றதே….

நமது சந்தைகள் மிக முக்கியமான Technical indicatorகளான 50, 200,400 DAY EMAS, 50 WEEK EMA க்களுக்கு கீழ் சந்தை நழுவியிருப்பது மிகவும் ஆபத்தான ஒரு நிலைப்பாடு, தற்போதைய சூழலில் தேசிய நிஃப்டி 5600 களை கடந்தால் மட்டுமே ஆபத்தான கட்டத்தினை சந்தைகள் தாண்டியதாக ஒப்புக்கொள்வேன்…குறைந்த பட்சம் 4960 ஐ ஆவது கடக்க வேண்டும். தற்போதைய நிலவரங்களில் அது அத்தனை சாத்தியமில்லை என்பதே நிஜம்.

இதே போக்கு தொடருமானால்,குறைந்த பட்சம் இந்த மாத இறுதிக்குள்ளாகவோ அதிகபட்சமாய் ஏப்ரல் மாதத்தின் மூன்றாம் வாரத்திற்குள்ளாகவோ தேசிய நிஃப்டி மற்றும் மும்பை சென்செக்ஸ் முறையே அக்டோபர் 2006 நிலைகளான 3600 , 12500 நிலைகளுக்கு கீழிறங்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்கள் ஓரளவிற்கு உங்களுக்கு விளக்கும் என நம்புகிறேன்.
z.png
sark1.jpg

இன்றைய நமது சந்தைகளில்…

தேசிய நிஃப்டி 4700-4820 க்குள் ஊடாடும்

முமபை சென்செக்ஸ் 15003-16422 க்குள் ஊடாடும்.

தற்போது துவங்கியிருக்கும் ஆசிய சந்தைகள் Gap down open ஆகியிருக்கிறது….நமது சந்தைகளிலும் இதே போக்கு எதிரொலிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இம்மாதிரியான சந்தைகளில் குறுகிய கால முதலீடு, நீண்ட கால முதலீடு என்றெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதை விட….சந்தையில் சீரியஸாய் பணம் செய்ய விரும்புபவர்கள் தினவர்த்தகத்தினை மேற்கொள்ளலாம். மற்ற முறைகளை விட தினவர்த்தகம் மிகவும் ஆபத்தானதுதான் என்றாலும் சரியான திட்டமிடல் மற்றும் வழிகாட்டுதலுடன் செய்தால் மிகையான லாபம் இருக்கிறது என்பதும் உண்மை.

இதையொட்டியே கடந்த வாரத்தில் சில பங்குகளை உங்களின் பார்வைக்கு வைத்திருந்தேன்…அதிலும் சில நண்பர்கள் லாபம் ஈட்டியிருந்ததாக குறிப்பிட்டிருந்தனர். இன்றைக்கும் சில பங்குகளை தருகிறேன்…அவற்றில் நுழையும், வெளியேறும், நட்டத்தினை நிறுத்தும் விலையினை கவனமாய் பாருங்கள்…..

மிக கடுமையாக நட்டத்தினை நிறுத்தும் விலையை பின்பற்றவும்…….மிகவும் முக்கியமான குறிப்பு…உங்களுக்கு திருப்தியிருந்தால் மட்டுமே, உங்களின் சுய முடிவுடன் இந்த குறிப்புகளை பயன்படுத்துங்கள்…..இன்றைக்கே வர்த்தகம் செய்ய வேண்டுமென்கிற அவசியம் இல்லை….கீழே கொடுத்துள்ள விலை விவரங்களை சந்தைகள் நாளின் நெடுகில் எவ்வாறு கையாளுகிறது என்பதை கவனியுங்கள்….வர்த்தகம் செய்ய விரும்புவோர் சிறிய அளவில் சோதனை ரீதியாக செய்து பார்க்கவும்…நம்பிக்கையேற்படும் பட்சத்தில் முழுமூச்சாய் இறங்கலாம்.

Buy  ABB @ opening, If opens below 1134 | SL 1108 |T1-1169, T2-1199

Sell  ABB @ opening, If opens above 1134 | SL 1.61% *|T1-1100, T2-1070

Buy  GUJNRECOKE @ opening, If opens below 154 | SL 146 |T1-158, T2-162

Sell  GUJNRECOKE @ opening, If opens above 154|SL1.61%* |T1-145, T2-136

Sell  GODREJIND @ opening | SL297 |T1-268, T2-250

 *உள்நுழையும் விலையில் இருந்து 1.61% விலைக்கு கீழ்/மேல் போகும் பட்சத்தில் உடனடியாக வெளியேறிவிடவும்.தயக்கம் காட்ட வேண்டாம்.

About these ads

19 thoughts on “மார்ச் 17, 2007

 1. மிகவும் அருமையான பரிந்துரைகள். இன்று ஆசிய பங்குசந்தைகளில் இரத்த ஆறு ஓடுகின்றது. நமது பங்குசந்தை ரத்த கடலாக இருக்குமோ? என்ற அச்சம் தோன்றுகிறது

 2. i cant understand last 2 lines (* 1.61) can you please explain it after some time.

 3. நன்றி சுதாகர்…

  இம்மாதிரியான சந்தைகளில்தான் ஆப்பரேட்டர்களின் விளையாட்டு மிகுதியாக இருக்கும்…

  அவர்கள் நினைத்தால் ஆச்சர்யங்களையும், அதிர்ச்சிகளையும் தரமுடியும்….

  மிகுந்த எச்சரிக்கை மற்றும் கவனத்துடன் செயல்பட வேண்டிய தினமிது…

 4. உள்நுழையும் விலையில் இருந்து 1.61% விலைக்கு கீழ்/மேல் போகும் பட்சத்தில் உடனடியாக வெளியேறிவிடவும்…………..u r very right…………………..1.61% profit comes…………….then one should/must exit in this unsafe Occasion

 5. தாஸ்…

  மிகவும் எளிமையாக சொலல்வேண்டுமானால்…நீங்கள் 100 ரூபாக்கு வாங்குகிறீர்கள் என்றால் ரூ.96.78 உங்களின் Stoploss, அதாவது 1.61%

  முயற்சித்துப் பாருங்கள்…

  வாழ்த்துக்கள்…

 6. Thank you

 7. nice thanks

 8. thank you sir. and sorry for the disturbance
  sir i am confused little more (100-1.61%)=98.39
  i dont know how and why 96.78 comes and also why that particular number(1.61)

 9. Respected sir

  We thanks with your all the tips today.Shall we get in touch with you pls? Pls try to send me your cell nos if any pls we will get back to you..

  with regards

  yours sincerely
  E.Murugan

 10. useful tips,thanks

 11. I am a longterm Investor. I have invested only in Blue Chips. On January 20 th I have a profit of 50% on my investment. Now I have a loss of 35%. What can I do? Whether I have to quit the market at this rate or wait and average. whether market will improve in one year time to the old level. kindly advice.

 12. thank you for your advice

 13. Dear Sudhagar please give me our email ID and cell No.

 14. useful tips,thanks

 15. Daily very good idea & guid

  you are very good analizer

  Thanks Lot

 16. My heartly Congratulations to Mr. Saravanan…

  I really wondered this type of website through in Tamil and I got lot of information thoroughly in your site.
  Your determination towards keep writing this blog is really great thing for entire Tamil community. Very excellent. Keep going kumar.
  I don’t know, how to write in Tamil, pls. Guide me to write in Tamil.
  Nandri & valtukkal.
  Hearty Best Wishes and Thanks.

 17. அருமையான விளக்கம்

 18. thx this is very good info

 19. thank you for advice

Comments are closed.