விளக்கங்களை பகிர்தல்…


நேர நெருக்கடியின் காரணாமாய் அன்றாடம் பின்னூட்டம் வாயிலாக நண்பர்களால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் குறித்தான எனது பார்வையை பகிரவே இந்த பதிவு….

முதலில் பின்னூட்டமிடும் அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றிகள்….இத்தகைய ஊக்குவிப்பே என்னை தொடர்ந்து எழுதச்செய்கிறது என்பதுதான் உண்மை.

பலருக்குக்கு வலைதளத்தில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்பதுதான் பெரிய கேள்வியாக இருக்கிறது…தற்போதைய நிலமையில் இருப்பதிலேயே எளிதான காரியம் தமிழில் தட்டச்சு செய்வதுதான்….இந்த இனைப்பில் கிடைக்கும் இலவச மென்பொருட்களை உங்கள் கணிணியில் தரவிறக்கி எளிதாய் தமிழில் தட்டச்சு செய்யலாம்.

உங்களுக்கு சொந்தமான வலைத்தளத்தினை பெறுவதும், நிர்வகிப்பதும் கூட எளிதான காரியம்தான்…www.Blogger.com, http://www.wordpress.com போன்ற தளங்களில் இலவசமாய் உங்கள் தளத்தினை உருவாக்கி, உங்களின் எண்ணங்களையும் செயல்களையும் அதில் பதிவதன் மூலம் உலகமெங்கும் பரவியிருக்கும் ஆயிரக்கணக்கான வலைத்தள வாசகர்களை சென்றடைய முடியும்.

இனி பங்கு சந்தை குறித்த பொதுவான சில கேள்விகள் தொடர்பான எனது பார்வைகள்…

பங்கு வர்த்தகம் பிற தொழில்களை போல ஒரு தொழில்தானே தவிர அது நிச்சயமாய் சூதாட்டமோ, அதிர்ஷ்ட்ட சக்கரமோ இல்லை….எல்லா தொழில்களில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளைப் போல இந்த தொழிலுக்கான தனித்துவமான் நெளிவு சுழிவுகள் உண்டு.

தினமும் பங்குகள் உயர்வதும், வீழ்வதும் நடக்கத்தான் செய்கிறது. நாம் உள்ளே நுழைவதும் வெளியேறுவதிலும்தான் மொத்த சூட்சுமமும் இருக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் தவறான நேரத்தில் உள் நுழைந்து தவறான நேரத்தில் வேறு வழியில்லாமல் வெளியேறி நஷ்ட்டப்படுகிறோம் என்பதுதான் உண்மை.இதற்கு இரண்டே இரண்டு காரணங்கள்தான் உள்ளது.

மிதமிஞ்சிய ஆசை, மிதமிஞ்சிய பீதி….இந்த மிதமிஞ்சிய என்கிற வார்த்தையை எடுத்துவிட்டோமானால் நாம் நிஜத்தை புரிந்து கொண்டவர்களாவோம்.

அடுத்த சில வாரங்களுக்கு நமது சந்தைகளில் முதலீடு செய்வதற்கு ஏற்றவையாக இல்லை என்பதும். இதுவரை இழந்த பணத்தினை இங்கேதான் எடுக்க வேண்டும்….எடுக்க முடியும் என்பது மட்டுமே உண்மை.

இதுவரை நீங்கள் இழந்த பணம் எவ்வளவு….கையிருப்பு எவ்வளவு என்பதை முதலில் தெளிவாக கணக்கிடுங்கள்…..

அதாவது…

இழப்புகள் ஆயிரங்களில்…கையிருப்பும் ஆயிரங்களில்
இழப்புகள் ஆயிரங்களில்…கையிருப்பு லட்சங்களில்…
இழப்புகள் லட்சங்களில்…கையிருப்பு ஆயிரங்களில்….
இழப்புகள் லட்சங்களில்….கையிருப்பும் லட்சங்களில்….

வரும் நாட்களில் நமது திட்டமிடல் முழுவதும்…இழப்புகளை சரிசெய்வதும், கையிருப்புகளை காப்பாற்றுவதுமாகவே இருக்க வேண்டும்….இந்த அளவில் உறுதியாக இருந்தீர்களானால் நீங்கள் நிஜங்களை புரிந்து கொண்டவர்களாகவும்…பதட்டமில்லாத வர்தகராகவும் மாறிவிட்டதன் முதல்படி…..

வரும் நாட்களில் எனது பதிவுகளில் தொடர்ச்சியாக இந்த நான்கு பிரிவினருக்குமான வர்த்தக குறிப்புகளை தரமுயல்கிறேன்….உங்களுக்கு ஏற்புடைய பட்சத்தில் மிகக்கடுமையாக அத்திட்டத்தினை பின்பற்றினால் சந்தை மீளும் சமயத்திற்குள் ஓரளவிற்கேனும் உங்களது இழப்புகளும் சரிப்பட்டிருக்கும்…அதைவிட மிக முக்கியமாய் உங்களின் தன்னம்பிக்கை அதிகரித்திருக்கும்.

அதனால் இழப்புகளை குறித்து புலம்புவதை காட்டிலும் அடுத்தகட்டத்திற்கு திட்டமிடுவதே சரியாக யுக்தியாக இருக்கமுடியும். எனது வேலை நெருக்கடி காரணாமாகவே தனிப்பட்ட தொடர்புகளை தவிர்த்துவிடுகிறேன்….தவறாக நினைக்க வேண்டாம்…

உங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஏதேனும் விளக்கம் தேவைப்படின்…இந்த பதிவில் பின்னூட்டமாய் இடுங்கள்…அடுத்த மூன்று தினங்கள் இந்த பதிவில் வரும் அனைத்து பின்னூட்டங்களுக்கும், என்னால் இயன்ற வரையில்…..எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ள தயாராய் இருக்கிறேன்…..


About these ads

39 thoughts on “விளக்கங்களை பகிர்தல்…

 1. hi,

  how about the monday? is it Black or Grey or Red or Blue Monday?

  josh

 2. Dear sir,
  I want to know more about insurance policy. Is there any web site which can guide me to know more about it?? Kindly help..

 3. my questions
  1.please explain any abnormal growth(annual return to the order of 50 to 60 %) in any sector is good for nation?
  2.in many countries this ghost trend finally collapses the entire economy.
  3.please suuggest steps to avod such occurance in our country whose fundamental are very strong(as said by our fm).
  4.it is learnt that central public sector companies (navaratnas/minratnas) are permitted to invest their surplus funds in mutual funds.further even provident funds/pension of govt.employees are also going to be investeed in shares.
  5.steps to chck great “harsat methas”
  6.influence of other (vested) people/country to change the entire trend in market( steps to control).

 4. i have 180 adlabfilms @ 700 rs. 40 rajesh exports@ 780 rs.rajesh exports” s bonus shares igot it. but splits are not received. split & bonous are given same date. what can i do. plz advice me.

 5. dear raju,

  u should have 240 shares in ur demat a/c now. spliti shares credited. i got it. plz check it.

  josh

 6. Dear Sir,

  Based on ur recom I am unable to short/long in day trade because of volatility AT the opening bell itself the market go up/down heavily . Shall we place short or long order before opening bell based on previous day’s us market trend and asian market trend in the morning.
  Thanks
  Siva

 7. Joseph….

  வியாழனன்று முடிவடைந்திருக்கும் அமெரிக்க சந்தைகள் 2.16-2.39 % வரை உயர்ந்திருக்கின்றன.

  நமது பணவீக்கம் கடந்த பதினோரு மாதத்தில் இல்லாதவகையில் உயர்ந்திருக்கின்றன.இது பலவீனமான செய்தி.

  திங்கட் கிழமை துவங்கும் ஆசிய சந்தைகள் நம்பிக்கையுடன் துவங்கும் பட்சத்தில் நமது சந்தைகள் நம்பிக்கையுடன் துவங்கி…நாளின் நெடுகில் சரியும் வாய்ப்புகளே இருக்கின்றன.

 8. நெல்லை கண்ணா…

  அர்த்தம் பொதிந்த கேள்விகள்….இது தொடர்பான கருத்துக்களை இங்கே பின்னூட்டத்தில் விளக்குவதை காட்டிலும் தனியொரு பதிவாக இட முயற்சிக்கிறேன்.

 9. ராஜு…

  திரு.ஜோசப் சொல்வதை போல்,இன்னேரம் உங்கள் கணக்கிற்குள் வந்திருக்கவேண்டும். வரவில்லையெனில் உடனடியாக சம்பந்தபட்டவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.

 10. சிவா…

  இந்த கேள்வி நிறைய பேருக்கு இருக்கிறது…..என்னை பொறுத்த வரையில் தினவர்த்தகத்தில் நீங்கள் ஒரு தேர்ந்த வர்த்தகராக இல்லாத பட்சத்தில், சந்தை எந்த பக்கம் போனாலும் முதல் 45 நிமிடங்கள் வேடிக்கை பார்ப்பதுதான் நல்லது…..

  அதன் பிறகே உங்களின் வர்த்தகத்தினை தீர்மானியுங்கள்….தின வர்த்தகம் செய்வது குறித்து தனியே விரைவில் எழுதுகிறேன்.

 11. sir
  I hve lost so much of money kindly advise me to come out from the loss. is it the right time to invest?

 12. அருமையான க்ணிப்புகள்…

  Will wait for you comments…..on

  அதாவது…

  இழப்புகள் ஆயிரங்களில்…கையிருப்பும் ஆயிரங்களில்
  இழப்புகள் ஆயிரங்களில்…கையிருப்பு லட்சங்களில்…
  இழப்புகள் லட்சங்களில்…கையிருப்பு ஆயிரங்களில்….
  இழப்புகள் லட்சங்களில்….கையிருப்பும் லட்சங்களில்….

  இதில் என் ரகம் – 1….எனவே உங்கள் பின்னூட்டத்திற்காக காத்திருக்கிறேன்.

 13. hi,

  thanks for the feedback,mate. i appreciate it. if u don’t mind, i’ll give two dark horses.
  Varun Shipping currently trading at 60’s. cmp at below 50. this stock’s dividend rec is impressive.

  Exide Ind. u knew too well about the stock. cmp below 50.

  the above two stocks are not for intra. delivery only. buy at 3800 level.

  josh

 14. தங்களின் அந்த முக்கிய பதிவுக்காக விருப்பமுடன் காத்திருக்கிறேன்
  நன்றிகளுடன்,
  நெல்லைகண்ணா
  21-03-2008

 15. மிக்க நன்றி நண்பரே. உங்களின் கணிப்புகளை நான் தொடர்ந்து பின் பற்றி வருகிறேன். என்ன ஒன்று, சில சமயம் நீங்கள் சொல்லியது போல், மிதமிஞ்சிய ஆசை / பயம் இரண்டும் காலை வரை விட்டு விடுகிறது. இப்பொழுது எல்லாம், ஆசை இல்லை. ஆனால், பயம் இருக்கிறது. தொடர்ந்து தாருங்கள். உங்களால், அதிகமானோர் பயணடைகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. நன்றிகள்

 16. வணக்கம்,
  நான் தற்போது icicidirect ல் டிரேடிங் கணக்கு வைத்துள்ளேன். அதில் brokerage அதிகமாக் இருப்பதால் வேறு ஒரு நிறுவணத்தில் கணக்கு ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். சிலர் ரிலையண்ஸ் மணி சிபாரிசு செய்கிறார்கள்.
  வருடத்திற்கு 500 ரூபாய் கட்டணம்.
  நீங்கள் சிபாரிசு செய்வது எது?
  நன்றி.

 17. DEAR MR.SARAVANAN,
  Heartful wishes to you for your fabulous work and thinkings about the investors who met loses in market trading.Keep it up please.Kindly adviced me in the following scrips which are all hold by me.
  1.paracables-500@Rs.33/-
  2.Alps industries-850@Rs.74/-
  3.Berger paints- 1000@Rs.58/-
  4.Elgi equipments-500@Rs.80/-
  5.Fiem industries-500@Rs.92/-
  6.Gabriel(india)Ltd-1000@Rs.27/-
  7.Kanoria chemicals-150@Rs.32/-
  8.Petronet LNG-300@Rs.80/-
  9.Sterlite Technologies-100@Rs.350/-
  10.TIIL-500@Rs.84/-
  11.West coast paper-500@Rs.96/-
  I am facing lot of losses in now a days market trend and rates.Kindly rescue me from heavy loses and dameges.
  Expect your valuable advices Mr.Saravanan.

 18. DEAR MR.SARAVANAN,
  Kindly advice me about my scrips which were all writen by me in previous mail.

 19. dear sir,
  Kindly try to answer and advice to my prior responses in between your tight shedule and valuable time.

 20. திரு.ராஜாங்கம்….

  தற்பொழுதுதான் உங்களின் பின்னூட்டத்தினை பார்த்தேன்….விவரஙகளை விரவில் தருகிறேன்….

 21. ராஜாங்கம் அவர்களே….

  பெரும்பாலான பங்குகளை ஜனவரி மாத நிலமைகளில்/அதற்கு முன்னர் வாங்கியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். உங்களுடைய பங்குகள் தற்போதைய நிலையில் 25%-50% பின்னடைவில் இருக்கின்றன.

  paracables பற்றிய விவரங்கள் தெரியவில்லை…பெயர் சரிதானவென பாருங்கள். .Gabriel(india)Ltd-1000@Rs.27/-,Kanoria chemicals-150@Rs.32/- குறுகிய காலத்திற்கு ஏற்றவை அல்ல….அவற்றின் அடிப்படைகளும் அத்தனை சுகமாய் இல்லை.

  நீங்கள் எத்தகைய முதலீட்டாளர் என்பது தெரியாத பட்சத்தில் பங்குகளை வைத்திருப்பது மற்றும் வெளியேறி வேறு பங்குகளில் நுழைந்து லாபமீட்டுவது குறித்து ஆலோசனை தரவியலாது.

  நீண்ட கால முதலீட்டாளராக இருந்தால் இந்த பங்குகளை தொடர்ந்து வைத்திருக்கலாம்.
  1.Alps industries-850@Rs.74/-/34.45
  2.Berger paints- 1000@Rs.58/-/34.55
  3.Elgi equipments-500@Rs.80/-/47.25
  4.Fiem industries-500@Rs.92/-/56.60
  5.Petronet LNG-300@Rs.80/-/63.75
  6.TIIL-500@Rs.84/-/46.50
  7.West coast paper-500@Rs.96/-/ 64/

  இழப்புகளை சரிசெய்ய வேண்டும், அதுவும் குறுகிய காலத்தில் சரிசெய்ய விரும்பினால் பெரும்பாலான பங்குகளில் இருந்து வெளியேறி வேறு நல்ல பங்குகளை தற்போது விலைகுறைவாக வாங்கி வைக்க முயற்சியுங்கள்…உதாரணத்திற்கு ABAN, PUNJLLOYD மாதிரியான பங்குகள்…குறுகிய காலத்தில் 40% – 80% வரை ஆதாயம் தரவல்ல பங்குகள்.

  இந்த விளக்கம் இறுதியானது அல்ல….இந்த கூறுகளை முன் வைத்து உங்கள் யுக்தியினை வடிவமைக்கலாம்.

 22. sir,please give me suggettions about my holdings
  gmr infra 350 shares@rs231 ,
  rpl 500shares@rs 256,and gail50shares@rs474
  can i hold the shares or not and iam a long time
  invester.

 23. கார்த்திகேயன்…

  நீங்கள் நீண்ட கால முதலீட்டாளர் எனும் பட்சத்தில் இந்த பங்குகளை தொடர்ந்து வைத்திருக்கலாம்.பணமிருந்தால் விலை குறைந்த இச்சமயத்தில் மேலதிக பங்குகளை தயங்காமல் வாங்கிடுங்கள்.

 24. DEAR MR.SARAVANAKUMAR,
  THANK YOU VARY MUCH FOR YOUR GOOD AND TIMELY GUIDLINES. PARACABLES IS THE COMPANY KNOWN AS PARAMOUNT COMMUNICATION.
  I DONT WANT TO COME OUT FROM THE SHARES WITH THE RESULT OF LOSS AND FAILIURE.
  ARE THAT COMPANIES GIVE ME GOOD RETURNS,IF I WILL HOLD THESE COMPANIES MORE THAN A YEAR? PLEASE SUGGEST ME.
  THANK YOU MR.SARAVANAN.

 25. HELLO,
  SARAVANAN UNGAL MUYARCHICKU NANDRI.
  NEENGAL ENTHA COMPANYIL VELAI SEIKRIRGAL ENRU THERINDAL NANRAGA IRUKKUM.UNGAL VALAI PATHIVAI ENGAL
  KSNSUPERMARKET.WORDPRESS.COM ENRA MUGAVRIYIL INAIKA NANAGAL ENNA SEEYUA VENDUM .UNGAL MUYARCHI PALAPERUDAYA LOSS SARIKATAVENDUM.
  UNGALMUYARCHI EN MANAMARNTHA NANRIKALUDAN
  S.SHIVAPRAKASAM.

 26. ராஜாங்கம் அவர்களே…

  பொதுவில்
  1.Alps industries-850@Rs.74/-/34.45
  2.Berger paints- 1000@Rs.58/-/34.55
  3.Elgi equipments-500@Rs.80/-/47.25
  4.Fiem industries-500@Rs.92/-/56.60
  5.Petronet LNG-300@Rs.80/-/63.75
  6.TIIL-500@Rs.84/-/46.50
  7.West coast paper-500@Rs.96/-/ 64/

  நல்ல பங்குகளே….மேலும் சில பங்குகளை குறித்த விளக்கங்கள் இந்த இனைப்பில் காணலாம்….உங்களுக்கு உதவும் பட்சத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

  http://paisapower.blogspot.com/2008/03/recomendations.html

 27. சிவபிரகாசம்…

  நான் முழுநேர பங்கு வர்த்தகனோ ஆலோசகனோ இல்லை…எனக்கு சொந்தமாய் வேறு தொழில்கள் இருக்கின்றன.

  என்னுடைய வலைத்தளத்தினை தாரளாமாய் உங்கள் வலைதளத்தில் இனைத்துக்கொள்ளலாம்.

  வருகைக்கு நன்றி நண்பரே….

 28. enakku kidatha sila thoukpilrunthu,
  market very weak

  think and decide

  Nifty future 4542-4526 to 4476 -4460

  colgate Watch ….Every Blue Channel will cover this stock !!

  -Technically………..only Hotttest Buy !!

  Grab it & Forget for 4 days

  Today TARGETS :Rs.418—–434 & there after watch Historic move !!

  ispat,nagarajuna fertilizer,orchid chemical very weak
  Three Consecutive close below 15109…

  …Will take to 14441-14218 level in hrs only.

  (Already closed below 15109 for 3 days )

  Hurdles : 7 DEMA !!

  7DEMA :15372

  Today…..If trades below 15017 will take to 14868-14818 level.

  If breaks 14818…….expect PANIC in mkt !!

  colgate

  Last Week……It was HLL and its turn to catch and hold this MNC for next 4 sessions !!

  Expect this above mentioned level…..very soon ,Count days on your finger )
  target 522
  Today if trades above Rs.399 level in Future.

  *Next Target on your trading screen Rs.418 level.

  *And there after expect price of Rs.431.

  -Now……once crosses and closes above 431…..Watch poweful explosion upto Rs.522 level……..Nonstop rally.

  cmc On Wednesday closed @ Rs.770.

  (This was our BTST call for our HNI )

  Technically……….RIPE for explosion.Grab @ opening bell.Stock will zoom to kiss 785-802 level.

  Now…….once starts trading above 793 with volumes.Grab in truck load………and watch nonstop rally upto Rs.853 in minutes.

 29. DEAR MR.SARAVANAN,
  THANK YOU FOR YOUR IMMEDIATE RESPONSE FOR MY QUESTIONS. I HEARTLY CONGRATS FOR YOUR LOSS RESCUE EFFORT TO PEOPLE THOSE WHO ARE ALL IN HEAVY LOSS IN MARKET. I AM PRAYING GOD FOR YOUR GOOD HEALTH AND GOOD THOUGHTS.
  BYE

 30. Dear Sir/Madam,
  I am a book trader, selling the Share Marcket, F&O & Mutual Funds related books including TAMIL version also.
  Please Contact,
  9840500751

 31. thank u for ur kind advice

 32. Sir,
  I would like to invest in LIC’s unit linked policies.” minimum 3years lockin period. you don’t worry about the present ups and downs.” is the agents advice. it is correct or not. can I invest in this ULIP policies.please give me the clue.

 33. A good way for sharing information about share market

 34. பங்குச் சந்தையின் இன்றய நிகழ்வு(31.03.2008) தங்கள் சொன்னதுபோல் 700 புள்ளிக்கு மேல் கீழே இறங்கி கரடியாரின் ஆட்சியே தொடர்கிறது.பணவீக்கம்(close to 7 %) அரசையே கலக்கதில் ஆக்கியுள்ளது போல் செய்திகள் வருகின்ற்ன.6 வது சம்பள கமிட்டி அறிக்கை(6th central government employees’s pay commission report) முழுவதுமகா ஏற்கப்பட்டாலும் ஏற்கபடாவிட்டாலும் அதன் தாக்கம் சந்தையை புரட்டிபோடும் என கணிக்கப்படுகிறது( உண்மையா?).
  உண்வுப் பொருள்களின் கடுமையான விலை(அரிசி,கோதுமை,எண்ணை,பருப்பு,காய்கறி வகைகள்) ஏற்றதிற்கு காரணம் on line trading தான் என சில அரசியல் கட்சிகள் (ruling( சிலர்) and opposition parties) அதற்கு தடை கோரும் போரட்டம் தொடங்கும் போல் தெரிகிறது (தேர்தல் நெருங்குவது ஒரு காரணம்).உங்கள் பதிவுகள் நேர்மையான(அளவான ஆசையுடன்) முதலிட்டாரர்களை காப்பாற்றும்.நன்றி.
  1-04-2008

 35. I need information how join this marketing

 36. SIR,

  Please tell me about your “MY BEST DAY TRADING SET UP”.

  and also please tell how to fix the stoploss .

  Regards,

  Manoranjitham

 37. SIR,

  Please tell me about your “MY BEST DAY TRADING SET UP”.

  and also please tell how to fix the stoploss .

  Regards,

  Manoranjitham

 38. So Interested in Car insurance or Auto Insurance in India. Now just insure your used car or new car at very affordable prices. Ask for quotes online from different car Insurance companies at a single place and buy instantly any Car Insurance

Comments are closed.