மார்ச் 24, 2008


 • FNO Expiry வாரம்
 • பதினோரு மாதங்களில் இல்லாத பணவீக்கம்
 • வெளியாகியிருக்கும் Advance Tax விவரங்கள்
 • நமது  சந்தைகள் Oversold நிலமைகளில் இருப்பது

இவையே இந்த வாரத்தின் போக்கினை தீர்மானிக்கும் காரணிகளாய் இருக்கும்….

ஆரம்பத்திலேயே சொல்லிவிட வேண்டும்….இந்த வாரம் நிறைய ஆச்சர்யங்களை வைத்திருக்கிறது. எத்தகையது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்….அடிப்படை நன்றாக உள்ள பங்குகளை அவசரப்பட்டு வாரத்தின் துவக்கத்தில் விற்று விட வேண்டாம்….இதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இன்றைய சந்தையில் தேசிய நிஃப்டியில் 4625 மிக முக்கியமான நிலையாக இருக்கும். இந்த நிலையில் Selling pressure உருவாகலாம்….அவ்வாறான பட்சத்தில் நிஃப்டி மளமளவென 4508 -4488 -4448 என சரியும் வாய்ப்புகள் இருக்கிறது…..கவனம் தேவை.

வாரத்தின் நெடுகில் தேசிய நிஃப்டி 4800 – 5000 ங்களில் பிரவேசிப்பதை பார்க்க முடியும். இத்தகைய Relief rallyகள் த்ற்காலிகமானதே….சந்தை மீண்டுவிட்டதாக நினைத்து புதிய முதலீடுகள் எதையும் செய்ய வேண்டாம். வரும் நாட்களில் விலை உயரும் போது கைவசமுள்ள AUTO, REALTY, METALS, OIL, GAS பங்குகளை விற்றுவிடுவதே சிறந்த உத்தியாக இருக்கமுடியும்.

இந்த வருடத்தின் துவக்கத்தில் இருந்து நமது சந்தைகள் சற்றேறக்குறைய 30% வரை சரிந்திருக்கின்றன.இன்னமும் 6%-8% சரிவுகள் மீதமிருப்பதாகவே படுகிறது….இதன் பிறகே சந்தை மீள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த நிகழ்வுகள் எத்தனை நாட்களில் ஏற்படுகிறது என்பதுதான் இப்போதைய மிகப்பெரிய எதிர்பார்ப்பு. அடுத்த மூன்றிலிருந்து ஆறு மாதங்களுக்கு சந்தை பலவீனமாய் மேடுபள்ளங்களுடன் பக்கவாட்டில் நகர்வதற்கான கூறுகளே அதிகம் காணப்படுகின்றன.

கடந்த வாரயிறுதியில் நமது சந்தையின் Technical indicators அனைத்தும் Oversold ஆக இருப்பது உடனடியாக ஒரு Technical bounce க்கு காரணமாய் அமையும் என்றாலும், அமெரிக்க சந்தையில் தலைகீழான நிலை அதாவது Overbought ஆக இருக்கிறது. அனேகமாய் நாளை முதல் அமெரிக்க சந்தைகள் கீழிறங்க ஆரம்பிக்கலாம்….நிச்சயமாய் இது நமது சந்தைகளில் எதிரொலிக்க துவங்கும்….எனவே FNO வில் வர்த்தகம் செய்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இன்றைய நமது சந்தைகள் Gap up ஆக துவங்கும் என எதிர்பார்க்கிறேன்.

காலையில் துவங்கியுள்ள ஆசிய சந்தைகளின் போக்கு தெளிவின்றி குழப்பத்துடன் காணப்படுகின்றன. தற்போதைய நிலவரத்தின் படி ஜப்பானிய சந்தைகள் Flat ஆகவும், சீன சந்தைகள் கீழிறங்கியும், சிங்கப்பூர் சந்தைகள் மேலேறியும் காணப்படுகின்றன

இன்றைய சந்தையில்….

தேசிய நிஃப்டி 4448 – 4640 க்குள் ஊடாடும்

மும்பை சென்செக்ஸ் 14500 – 15480 க்குள் ஊடாடும்.

நடுத்தர மற்றும் நீண்டகால முதலீட்டாளர்கள் இந்த இனைப்பினை பார்க்கவும்….


விளம்பரம்

Get $6.00 Welcome Survey After Free Registration!

About these ads

6 thoughts on “மார்ச் 24, 2008

 1. GOOD MORNING SIR
  HOW DO YOU IDENTIFY THE SELLING PRESSURE?
  IF I WANT TO ANALYSE THE FUNDEMENTAL OF A COMPANY?
  WHAT ARE THINGS I NEED? INWHICH ITEM I MAY GIVE MUCH IMPORTANT? (for exampe: net profit, sales, like that). I dont know other things better. at the same time i want to know the relation ship between the ratios and other activities of the company and the policies of goverment,gold,rbi like that. Sir i have lots of doubts like this ifyou have enough time to give the answers please please give and teach to me.

 2. now i learnt little about technical analysis through your answers and your daily letter. so for the next step i want to know about the fundemental of a company to identify the good company to invest at the righttime.

 3. Respected Sir

  We are still now waiting for your details pls. kindly mail me in your cell nos if any pls i would like have appoint with you pls..we need in your valuable service our customers pls.

  with regards

  yours sincerely
  E.Murugan

 4. Dear Sir,

  When I open Recommendation in PaisaPower site it shows ” Sign in and apply for membership or contact the owner” Even I sined up. I could not open this page. please advice.

  Thanks & regards,
  A.Basheer

 5. Hi,
  Your tips are pretty useful. Keep up the good work. In this down trend market, you are not talking much about the short selling. Why so? I think that’s yet another option to make money in this downtrend…

  Regards,
  Lenin

 6. தங்கத்தின் விலை எட்டா உயரத்துக்கு சென்றதற்கு என் நண்பர் சொல்லும் ஒரு காரணம். வெளிநாட்டு சேமிப்பாளர்களில் ஒரு பகுதியினர் தங்கம் ஒரு பவுண் 12000 க்கு சென்று விடும் என வதந்தியை பரப்பி சந்தையில் தங்கள் கையிருப்பு தங்கத்தை விற்று சென்று விட்டனர்(profit booking) என்பது உண்மையா?-nellaikanna

Comments are closed.