மார்ச் 25, 2008


பெரிதான நிகழ்வுகள் இல்லாத நாளாய் நகர்ந்த நேற்றைய சந்தையின் சாதகமான அம்சம் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் கணிசமாய் பங்குகளை வாங்க துவங்கியிருப்பதுதான். கடந்த பதினைந்து நாட்களில் நேற்றுதான் நிஃப்டியின் Volume மிக குறைவாக இருப்பதை கவனத்தில் கொள்ளவும்…இது அத்தனை நல்ல செய்தியில்லை.

இதை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் அமெரிக்க சந்தைகள் 1.97% – 3.27% வரை உயர்ந்திருக்கின்றன, அடுத்த இரு தினங்களில் அமெரிக்க Dow இந்த வருடத்தின் உயரங்களை தொட வாய்ப்பிருப்பதனால் அதன் தாக்கம் சர்வதேச சந்தைகளில் எதிரொலிப்பதை தவிர்க்க இயலாது.

காலையில் துவங்கும் ஆசிய சந்தைகள் இதே போக்கினை பிரதிபலிக்கும் பட்சத்தில் நமது சந்தைகள் தற்காலிகமாய் பிழைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. தற்போதைய நிலையில் தேசிய நிஃப்டியில் அடுத்த தடைக்கல் 4700 ஆக இருக்கும் இந்த நிலைகளை கடந்தால் 4730 மிகவும் முக்கியமான நிலை…இந்த நிலையில் சந்தை தடுமாறினால் நேற்றைய சந்தையின் ஆகக்குறைவான நிலைகளுக்கு நிஃப்டி நழுவிட வாய்ப்பிருக்கிறது.

எது எப்படியாக இருந்தாலும் இந்த வார இறுதிக்குள் தேசிய நிஃப்டி 4800 களை தொடும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. அதன் பின்னர் சரிவுகள் தவிர்க்க இயலாத ஒன்று என்பதால் இந்த வாய்ப்பினை தின வர்த்தகர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

இன்றைய சந்தையில்…

தேசிய நிஃப்டி 4540 – 4800 க்கு இடையில் ஊடாடும்.

மும்பை சென்செக்ஸ் 15000 – 15999 க்கு இடையில் ஊடாடும்.

தினவர்த்தக குறிப்புகள்….

Buy GLENMARK @ 465, SL-449, T1-476, T2-489
Buy INDHOTEL @ 111, SL-106, T1-118, T2-124
Buy NATIONALUM @ 482, SL-467, T1-503, T2-524


Get $6.00 Welcome Survey After Free Registration!

About these ads

12 thoughts on “மார்ச் 25, 2008

 1. thank u

 2. thank you sir

 3. Thank You Sir

 4. thank u sir.veryuseful for me. please continue.

 5. எது எப்படியாக இருந்தாலும் இந்த வார இறுதிக்குள் தேசிய நிஃப்டி 4800 களை தொடும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. அதன் பின்னர் சரிவுகள் தவிர்க்க இயலாத ஒன்று*************************THAT IS THE ONE I TOO AGREE SIR,.

 6. It is nice to see your webpage in color with scenary. However, while retreival it takes longer time.

 7. why there is diff between previous day closing rate and todays opening rate? If i try to buy on opening time the rate is higher than the previous day also if i wait for 1 hour means the rate is in flat how can i get gain in this time for day trading?Plz explain me …………..

 8. பதிவுகள் பிரமாதம்

 9. thenk u

 10. thank you

 11. Quote
  ஆரம்பத்திலேயே சொல்லிவிட வேண்டும்….இந்த வாரம் நிறைய ஆச்சர்யங்களை வைத்திருக்கிறது.
  Unquote

  The said surprise has been happened today. Great prediction sir. How come this possible for you?

  Regards
  Prabhu

 12. your opinion 100% correct. i am daily watch and trade with profit… thankyou.

Comments are closed.