மார்ச் 27, 2008


நேற்று சர்வதேச சந்தைகளின் தாக்கத்தினால்….மேடு பள்ளங்களுடன், பெரிதான நிகழ்வுகள் ஏதுமில்லாத சாதாரண வர்த்தக தினம். Market Breadth சாதகமாய் இருந்தாலும் தேசிய நிஃப்டி 48 புள்ளிகளையும், மும்பை சென்செக்ஸ் 130 புள்ளிகளையும் இழந்து முறையே 4828,16086 நிலைகளில் முடிவடைந்திருக்கின்றன.

செவ்வாயன்றைய சந்தையின் தாக்கத்திற்கு நேற்று தேசிய நிஃப்டி 4974 ஐ எளிதாக எட்டியிருக்க வேண்டும். தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்த நிலையை தக்கவைக்க இயலாதது, சந்தையின் பலவீனத்தை மேலும் உறுதி செய்கிறது.

இன்று இந்த நிலைகளை சந்தை கடக்கும் பட்சத்தில் அடுத்து 5032 முக்கியமான தடையாக இருக்கும். இந்த இடத்தில் Selling pressure உருவாவதை தவிர்க்க இயலாதென்றே நினைக்கிறேன். அதே நேரத்தில் 4790 மிக முக்கியமான நிலையாக இருக்கும், இந்த நிலைக்கு கீழ் சந்தை நழுவும் பட்சத்தில் அவரவர் நிலைகளில் இருந்து வெளியேறுவதே உத்தமம்.

இன்று FNO Expiry ஆகையால், சந்தை Wild swing எனப்படும் மேடுபள்ளங்களுடன் இருக்கும். கவனம் தேவை…Nifty futures ல் காணப்படும் High premium கவலைதரும் அம்சமே மற்றபடி இன்றைய சந்தைகளும் பக்கவாட்டில் நகர்வதற்கான சாத்தியங்களே உள்ளன.

இன்றைய நமது சந்தையில்….

தேசிய நிஃப்டி 4800 -5033 க்கு இடையில் ஊடாடும்.

மும்பை சென்செக்ஸ் 15500 – 16458 க்கு இடையில் ஊடாடும்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக அமெரிக்க சந்தைகளில் தடுமாற்றம் தொடர்கிறது. நாளின் முடிவில் அமெரிக்க சந்தைகள் 0.71% -0.88% வரை சரிந்திருக்கின்றன.தற்போது துவங்கியிருக்கும் ஆசிய சந்தைகளும் மந்தகதியிலேயே உள்ளன.

தினவர்த்தக குறிப்புகள்….

Buy SUZLON @ 230, SL – 225.50, T1-236, T2-240
Sell TATACOMM @ 559. SL – 568, T1- 549.50, T2-542
Sell BHARTIARTL @ 810. SL – 824, T1- 783, T2-772
Sell HCLTECH @ 282. SL – 289, T1- 267, T2-260


விளம்பரம்

Get $6.00 Welcome Survey After Free Registration!


About these ads

4 thoughts on “மார்ச் 27, 2008

 1. Hi, can u please suggest me which demat account is better?. i have ICICI account. i am waiting for response. Thank you

 2. கார்த்திகேயன்…

  ICICI DIRECT, SHAREKHAN, ANANDRATHI, CHONA என நாலு இடத்தில் கணக்கு வைத்திருக்கிறேன்…இதில் Anandrathi ல் மட்டும் தரகுத்தொகை குறைவு.மற்ற மூவரும் ஏறத்தாழ ஒரே மாதிரித்தான்…..

  நண்பர்கள் சிலர் Reliance money நன்றாக இருப்பதாக கூறுகின்றனர்.

  எல்லோரிடமும் நிறையும் இருக்கிறது, குறையும் இருக்கிறது.நீங்கள் தினவர்த்தகராய் இல்லாத நிலையில் தற்போதைய கணக்கினையே தொடரலாம்.

 3. sir, ur site is very useful to me.i suggest to my friends also. keep writing. thank u.

 4. நண்பரே தங்களது அறிவுரைக்கு நன்றி. நான் சமீபமாய் உங்கள் வலை தளத்தினை உபயோகப்படுத்தி வருகிறேன். என்னை போல உள்ளவர்களுக்கு உங்களின்
  இடுகைகள் மிகவும் உபயோகமாய் உள்ளன. தங்களின் பங்கு வணிகம் பற்றிய கூற்றுகளை வாசகர்களாகிய எங்களுக்கு பகிர்ந்தளிக்கும் உங்கள் செயல்பாடுகள் மென்மேலும்
  சிறந்து விளங்க வாழ்த்துகின்றேன். நன்றி.

Comments are closed.