panguvaniham எழுதியவை | மார்ச் 31, 2008

மார்ச் 31, 2008

கடந்த வாரத்தில் மட்டும் நமது சந்தைகள் 8% – 9.2% வரை உயர்ந்திருக்கின்றன.  வெள்ளியன்று கடைசி மணிநேரத்தில் ஏற்பட்ட உயர்வானது, பரஸ்பர நிதியங்கள்  பெருமளவு பங்குகளை வாங்கியதால் ஏற்பட்டது.இதனால் மட்டுமே நமது சந்தைகள் இன்று முதல் காளைகளின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் என்கிற மாதிரியான செய்திகளை நம்பவேண்டாம்.

என் வரையில் இது ஆப்பரேட்டர்கள் எனப்படும் சூதாடிகளால் சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள்/வர்த்தகர்களுக்கு விரிக்கப்பட்ட வலையாகவே பார்க்கிறேன்.இன்றைய சந்தை பெரிய Gap up உடன் துவங்கினால் இது உறுதிசெய்ப்படும்.

தற்போதைய சந்தையின் மீட்சியினை Relief rally என்ற அளவில் மட்டுமே பார்த்திட வேண்டும். தேசிய நிஃப்டியில் 20DMA(Daily Moving Average) வான 4845 வலுவான Support level ஆக இருக்கும். அதே வகையில் 50DMA(Daily Moving Average)  5082 , மற்றும் 200DMA(Daily Moving Average)  5103 இந்த நிலைகள்  மிகவும் வலுவான  Resistance level ஆக இருக்கும்.

ஒரு வேளை தேசிய நிஃப்டி 5082 களில் தடுமாறினால் தேசிய நிஃப்டி கடந்தவாரத்தின் குறைவு நிலையான 4,540 நோக்கி சரியும் அபாயம் இருக்கிறது. 5100 க்கு மேல் நிலைப்படுமானால் வரும் நாட்களில் சந்தை மேலும் உயரங்களை எட்டிடும் வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது.

அடுதத இரண்டு மூன்று தினங்களுக்கு சந்தைகள் இந்த நிலைகளை எப்படி கையாளுகிறது என்பதை பொறுத்தே சந்தையின் அடுத்த கட்ட நகர்வினை தீர்மானிக்க இயலும். இதுதான் நிதர்சனம்.

வெள்ளியன்று முடிவடைந்த அமெரிக்க சந்தைகள் அத்தனை சுகமில்லை. தற்போது துவங்கியிருக்கும் ஆசிய சந்தைகள் கீழிறங்கியே காணப்படுகின்றன. நாளின் நெடுகில் இவை உயரலாம்.

இன்றைய சந்தையில்….

தேசிய நிஃப்டி 4780 – 5033 க்குள் ஊடாடுமென எதிர்பார்க்கலாம்.

மும்பை சென்செக்ஸ் 15870 – 17171 க்குள் ஊடாடுமென எதிர்பார்க்கலாம்.

நீண்ட கால முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை துவங்க இது சரியான தருணமாய் இருக்கும்….தாங்கள் முதலீடு செய்ய உத்தேசித்துள்ள தொகையில் முதல் 25% விழுக்காட்டினை இந்த வாரத்தில் செய்யலாம். நீண்ட கால முதலீட்டு குறிப்புகளை *இங்கே காணலாம்.

தினவர்த்தக குறிப்புகள்* இங்கே

இன்று இந்த நிதியாண்டின் கடைசி நாள், மிகப்பெரிய சோதனைகளை தந்த ஆண்டு. புதிய ஆண்டினை நாளை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்….வாழ்த்துகள்


*- எனது தமிழ் மற்றும் ஆங்கில வ்லைப்பதிவினை பயன்படுத்துவோருக்கான வர்த்தக குறிப்புகளுக்கென தனியே http://paisaavasool.blogspot.com என்கிற புதிய வலைபதிவினை ஏற்படுத்தியிருக்கிறேன். இனி வரும் நாட்களில் எனது வர்த்தக பரிந்துரைகள் இந்த தளத்தில் இடம்பெறும். பிற இடங்களில் இருந்து பெறப்படும் தகவல்கள் ஆங்கில வலைப்பதிவில் வழமை போல பகிர்ந்து கொள்ளப்படும். இந்த வலைபதிவில் இடம்பெற்றிருக்கும் விளம்பரங்களை நீங்கள் சொடுக்கி பார்வையிடுவதன் மூலம் ஈட்டப்படும் விளம்பர வருவாய் என்னை மேலும் உற்சாகப்படுத்தும். ஒத்துழைப்பிற்கு நன்றி.

விளம்பரம்

Get $6.00 Welcome Survey After Free Registration!


மறுவினைகள்

  1. I dont know how to write comments in tamil. please help me anyone.

  2. Dear Saravanan Thank you for your reply also let me know at what time i should start for Day Trading?

  3. வணக்கம் நண்பரே தங்களின் காணொளி அருமை தமிழில் இதை போல் உள்ளதா ……………

  4. DONOT OPEN DEMAT ACCOUNT IN RELIANCEMONEY LTD. THEIR COMPUTERS SERVERS ARE NOT WORKING PROPERLY THEY DONT MAINTENENCE LEDGER BALANCE PROPERLY

  5. DONOT OPEN DEMAT ACCOUNT IN RELIANCEMONEY LTD. THEIR COMPUTERS SERVERS ARE NOT WORKING PROPERLY THEY DONT MAINTENENCE BALANCE PROPERLY

  6. DO NOT OPEN DEMAT AC. IN RELIANCEMONEY. THEIR COMPUTERS SERVERS ARE NOT WORKING PROPERLY . THEY DONT MAINTENENCE BALANCE MONEYPROPERLY

  7. நண்பர்களே,

    தற்போது சந்தைகள் கீழே நழுவிக்கொண்டிருக்கின்றன. பணவீக்கத்தினை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை நாளின் பிற்பகுதியில் அறிவிக்கலாமென எதிர்பார்க்கப் படுகிறது. எனவே இன்று வர்த்தகம் செய்வதை விட விலகியிருந்து வேடிக்கை பார்ப்பதே மேல்….

  8. மார்க்கெட்டிற்கு இடையிலும் தகவல்களை தந்து எங்களை போன்ற சிறு முதலீட்டாளர்களுக்கு உதவுவது தங்களின் பெருந்தன்மையை காட்டுகிறது

    S பஷீர் அஹமது

  9. wwtr

  10. bad

  11. பங்கு சந்தையின் இந்த போக்கு ஒரு நாட்டையே வீழ்த்திவிடுமோ?

  12. பங்குச் சந்தையின் இன்றய நிகழ்வு தங்கள் சொன்னதுபோல் 700 புள்ளிக்கு மேல் கீழே இறங்கி கரடியாரின் ஆட்சியே தொடர்கிறது.பணவீக்கம்(close to 7 %) அரசையே கலக்கதில் ஆக்கியுள்ளது போல் செய்திகள் வருகின்ற்ன.6 வது சம்பள கமிட்டி அறிக்கை(6th central government employees’s pay commission report) முழுவதுமகா ஏற்கப்பட்டாலும் ஏற்கபடாவிட்டாலும் அதன் தாக்கம் சந்தையை புரட்டிபோடும் என கணிக்கப்படுகிறது( உண்மையா?).
    உண்வுப் பொருள்களின் கடுமையான விலை(அரிசி,கோதுமை,எண்ணை,பருப்பு,காய்கறி வகைகள்) ஏற்றதிற்கு காரணம் on line trading தான் என சில அரசியல் கட்சிகள் (ruling( சிலர்) and opposition parties) அதற்கு தடை கோரும் போரட்டம் தொடங்கும் போல் தெரிகிறது (தேர்தல் நெருங்குவது ஒரு காரணம்).உங்கள் பதிவுகள் நேர்மையான(அளவான ஆசையுடன்) முதலிட்டாரர்களை காப்பாற்றும்.நன்றி.
    1-04-2008


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்