panguvaniham எழுதியவை | ஏப்ரல் 1, 2008

தினவர்த்தக குறிப்புகள் – சில விளக்கங்கள்

தினவர்த்தக குறிப்புகளை பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை குறித்த சில நண்பர்களின் கேள்விகளையொட்டியதே இந்த பதிவு…..

இங்கே தரப்படும் ஒவ்வொரு தினவர்த்தக குறிப்பினையும் நன்கு ஆராய்ந்தே தருகிறேன், எனது அனுபவத்தில் எனது குறிப்புகள் 80-95 விழுக்காடு உறுதியான முடிவுகளை தந்திருக்கின்றன. இங்கே தரப்படும் குறிப்புகளில் எவ்வித வர்த்தக நோக்கமும் இல்லை, என்னுடைய பயன்பாட்டிற்காய் நான் தயாரிக்கும் குறிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவே….

புதியவர்கள் முதலில் Paper trade செய்து பார்க்கவும்….நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே நேரடியாக களத்தில் இறங்கவும்.

எந்த நிலைகளில் உள் நுழைய வலியுறுத்தப்பட்டிருக்கிறதோ அந்த விலைகளில் மட்டுமே நிலைகளை எடுங்கள்.(ஒன்றிரண்டு ரூபாய் முன் பின் இருந்தால் தவறில்லை.). அதே மாதிரி Stoploss மிகக்கடுமையாய் அனுசரிக்க வேண்டும். முதல் இலக்கினை எட்டியவுடன் உங்கள் கையிருப்பில் 60-75 விழுக்காட்டினை விற்று/வாங்கி விடுங்கள். அதன் பிறகு முதலாவது இலக்கே உங்களின் stoploss ஆக இருக்க வேண்டும்.

சந்தை ஆரம்பித்தவுடனே இலக்குகளை எட்டிவிடுகிறது அல்லது Stoploss தொட்டு விடுகிறது என கவலைப்பட வேண்டாம், பொறுமையாய் கவனியுங்கள், சந்தையின் திசையும் உங்கள் கையிலிருக்கும் குறிப்புகளும் ஒரே திசையில் இருந்தால் நாளின் நெடுகில் விலைகள் அந்த நிலைகளில் வரும் போது வர்த்தகம் செய்ய தயங்காதீர்கள்.

அதிகபட்ச ஆசையே தேவையில்லாத பீதியினை உண்டாக்கும். எனவே ஆரம்பகட்ட வர்த்தகர்கள் முதல் இலக்குகளில் வெளியேறிவிடுவது உத்தமம். ஆரம்பத்தில் சிறிய அளவில் பங்குகளை வாங்கி/விற்று பழகுங்கள். நுணுக்கங்கள் பழக பழக உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

லாபமோ, நஷ்டமோ தினவர்த்தக பங்குகளை அன்றே கணக்கு தீர்த்துக் கொள்ளுங்கள். எக்காரணத்தை கொண்டும் அடுத்த நாளைக்கு வைத்துக் கொள்ளாதீர்கள்.

வர்த்தக நோக்கோடோ அல்லது விளம்பர வருவாயை முன்னிறுத்தியோ இந்த வலைப்பதிவினை ஆரம்பிக்கவில்லை என்பதை புதிய நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.தற்போதைக்கு அம்மாதிரியான எண்ணங்கள் ஏதுமில்லை. என்னுடைய பார்வையை பகிர்ந்து கொள்ளவும், பலருக்கு இந்த பதிவுகள் பயனுள்ளதாய் இருப்பதை உணர்ந்ததால் மட்டுமே சிரமங்கள் பல இருந்தாலும் இந்த பதிவினை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

வர்த்தக குறிப்புகளுககென தனிதளம் துவங்க காரணம் என்னுடைய பரிந்துரைகளை தனியே சேமித்து வைக்கவும் பின்னாளில் எனது ஆய்வுக்கு உதவியாக இருக்கும் என்பதற்காகத்தான்.

பங்குவணிகத்தில் இருப்பவர்கள் தமிழில் இம்மாதிரியான முயற்சிகளில் ஈடுபடவேண்டுமென எதிர்பார்க்கிறேன். அவ்வாறு நடந்தால் மகிழ்ச்சியுடன் வலைபதிவுகளில் இருந்து விடைபெறுவேன்.


மறுவினைகள்

  1. hi,

    i would be obliged if i heard your views about Axis Bank? what would be it’s tomorrow target?
    thx

    josh

  2. sir just a month i see your site. But i give you a great place in my heart. Because i know it is your desire to serve for tamil community. we always need your thoughts and guidance so please dont let us alone anna.

  3. நண்பரே..
    உங்களின் கருத்துக்கள் அருமை..அழகான தமிழில் எளிய முறைகள் விளக்கும் முறை அனைவருக்கும் புரிவதாக உள்ளது உங்கள் பனி சிறக்க என் வாழ்த்துக்கள்.என்னுடைய.. சின்ன வேண்டுகோள் Technical அனலிசிஸ் எப்படி செய்வது என்பது பற்றி ஒரு கட்டுரை எழுதினால் என் போன்ற எளியோருக்கு உதவியா இருக்கும்…
    கண்டிப்பா உதவுவீர்கள் என்று நம்புகிறேன்…நீங்கள் படித்த எதாவது நல்ல வலை பதிவை கூட எனக்கு அனுப்பினால்.. நன்றாக இருக்கும் நன்றி..
    இப்படிக்கு
    P.சாரதா கங்காரம்.

  4. sir i follow your tips every day i am earn minimum 2000 thank you sir continue sir

  5. //வர்த்தக நோக்கோடோ அல்லது விளம்பர வருவாயை முன்னிறுத்தியோ இந்த வலைப்பதிவினை ஆரம்பிக்கவில்லை என்பதை புதிய நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.//

    Why blood?

    //பங்குவணிகத்தில் இருப்பவர்கள் தமிழில் இம்மாதிரியான முயற்சிகளில் ஈடுபடவேண்டுமென எதிர்பார்க்கிறேன். அவ்வாறு நடந்தால் மகிழ்ச்சியுடன் வலைபதிவுகளில் இருந்து விடைபெறுவேன்.//

    வலைப்பூ நல்லது கெட்டது சேர்ந்தது. தமிழ் வலைப்பூக்களை உங்களை போன்றவர்கள் புதிய தளத்திற்க்கு எடுத்து சென்றிருக்கிறீர்கள். உங்கள் சேவை கட்டாயம் தேவை.

  6. It looks like you are disappointed from something. Your words here shows that somebody might have hurt you. Please ignore them and never ever think about exiting this process. It helps many people.

  7. Sir really u done a great service to us , I really appreciate your help

  8. தமிழில் தங்கள் சேவை என்றென்றும் தொடர விரும்புகிறேன்………..அன்பு நண்பன்

  9. Really we need your service..It’s very helpful for me..Now your blog is my exxential morning reading. Please continue….

  10. நான் உங்கள் பதிவுகளைப்பார்த பின்தான் முதல்முறையாக இலாபங்களைப் பார்த்து இருக்கிரேன் நன்றி

  11. Thalaiva Super Thaliva

  12. நன்பரே

    ஏன் இந்த கொலைவெறி

    யார் மீது இவ்வளவு கோபம்…

    உங்கள் சேவை … இங்கு அனைவருக்கும் தேவை.. அப்படியே எனது பூவையும் பார்க்கவும்

    தங்களது ஆலோசனைகளை தெரிவிக்கவும்… எந்த மதிரியான தகவல்கள் எழுதலாம் என்ற அபிப்ராயத்தையும் தெரிவிக்கவும்

  13. Your blog is very useful for many plz continue….
    Thank you.

  14. Sir,
    Your tips are very useful,Please continue your useful service to all.
    Thank u verymuch.

  15. please suggest me a book in tamil for trading in F&O

  16. really very nice advices,
    i was away from the market watch since more than 7 years (due to live in abroad).after read ur advices and tips,i plan to be back
    please advice me some on line brokers website,as well as related market watch sites
    thank u very much

  17. sir,

    please suggest me books on intraday trading in
    Tamil and English. your comments are very useful sir. Daily I am visiting this site to view your comments.

  18. Dear Sir, Thank you for your tamil panguvaniham.wordpress.com. I am first time visit your site very very nice and tamil vaniham news give to you very very good sir. How to thanks said to you? Your advice are very useful, Please continue your useful service to all.
    Thank you verymuch.

    S.Saravanan

  19. சரவணன் என்ற பெயரில் நிறைய நண்பர்கள் உள்ளனர்….. வாழ்க!!

    பதிவுகள் அருமை தொடருங்கள்..

    சரவணன்

  20. sharemarket joint

  21. Hello Sir,

    Please Tell Me The Full Details About the share Mrket


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்