புத்தாண்டு வாழ்த்துகள்….


புதிய நிதியாண்டின் முதல் நாள், போன வருடத்தின் இழப்புகளை ஈடுகட்டி புதிய லாபங்களை பெற்றுத்தரும் வருடமாய் அமைய வேண்டி என் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறேன்.

கடந்த மூன்று மாதங்களாய் தொடர்ந்து வலியுறுத்திவரும் சந்தையின் பலவீனம் நேற்று மீண்டும் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சிறிய உயரத்திற்கு பின்னர் பெரிய சரிவு வருவது தொடர்கதையாகிவிட்டது. கடந்த மாதத்தில் மட்டும் ஐந்து பெரிய சரிவுகளை சந்தித்திருக்கிறது. இத்தனை வலுவான அடிக்கு பின்னரும் நமது சந்தைகள் பிழைத்திருப்ப்து வலுவான நமது அடிப்படைகளினால்தால் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

வெள்ளியன்றைய சந்தையின் கடைசி நேர நிகழ்வுகள் ஆப்பரேட்டர்களின் நாடகமே என்பதை நேற்றைய சந்தைகள் உணர்த்தியிருக்கும். சந்தையின் போக்கில் இவர்களின் விளையாட்டை அனுமானிக்க தெரிந்தாலே நாம் பாதி தேறிவிட்டதாய் கொள்ளலாம். உங்களுக்கு திறமையிருந்தால் அவர்களின் விளையாட்டில் நீங்களும் இனைந்து ஆதாயம் பெறலாம்.

நேற்றைய பதிவில் குறிப்பிட்டதைப் போல அடுத்த இரு தினங்களுக்கு பின்னரே சந்தையின் போக்கினை தீர்மானிக்க இயலும். தறபோதைய நிலையில் தேசிய நிஃப்டியில் 4654 மற்றும் 4791 என்கிற இரண்டு நிலைகளில் கவனமாய் இருங்கள். இதில் ஏதாவது ஒரு நிலையை சந்தை மீறும் போதுதான் சந்தையின் திசையினை தீர்மாணிக்க இயலும்.

தொடர்ந்து உயர்ந்துவரும் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக மத்திய அரசு உடனடியாக சில நடவடிக்கைகளை எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. உணவு மற்றும் ஸ்டீல் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை குறைப்பு, REPO RATE ல் மாறுதல் போன்றவைகளுக்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் விவரங்கள் இங்கே

தொடர்ச்சியான மூன்று நாள் சரிவிற்கு பின்னர் நேற்று அமெரிக்க சந்தைகள் Flat with positive signals ஆக முடிவடைந்திருக்கின்றன. தற்போது துவங்கியிருக்கும் ஆசிய சந்தைகளும் இதே போக்கினை கொண்டிருக்கின்றன. பொதுவில் இன்றைய நமது சந்தைகள் நேற்றைய இழப்பினை ஓரளவிற்கு ஈடுசெய்யுமென எதிர்பார்க்கலாம்.

இன்றைய சந்தையில்…

தேசிய நிஃப்டி 4615 – 4830 க்குள் ஊடாடுமென எதிர்பார்க்கலாம்.

மும்பை சென்செக்ஸ் 15400-15900 க்குள் ஊடாடுமென எதிர்பார்க்கலாம்.

*தினவர்த்தக குறிப்புகள் இங்கே….


*- எனது தமிழ் மற்றும் ஆங்கில வ்லைப்பதிவினை பயன்படுத்துவோருக்கான வர்த்தக குறிப்புகளுக்கென தனியே http://paisaavasool.blogspot.com என்கிற புதிய வலைபதிவினை ஏற்படுத்தியிருக்கிறேன். இனி வரும் நாட்களில் எனது வர்த்தக பரிந்துரைகள் இந்த தளத்தில் இடம்பெறும். பிற இடங்களில் இருந்து பெறப்படும் தகவல்கள் ஆங்கில வலைப்பதிவில் வழமை போல பகிர்ந்து கொள்ளப்படும். இந்த வலைபதிவுகளில் இடம்பெற்றிருக்கும் விளம்பரங்களை நீங்கள் சொடுக்கி பார்வையிடுவதன் மூலம் ஈட்டப்படும் விளம்பர வருவாய் என்னை மேலும் உற்சாகப்படுத்தும். ஒத்துழைப்பிற்கு நன்றி.

விளம்பரம்

Get $6.00 Welcome Survey After Free Registration!

About these ads

7 thoughts on “புத்தாண்டு வாழ்த்துகள்….

 1. nice thanks

 2. good sir ! but all ur calls hit sl .. i think so ..anyway good premarket calls thank u

 3. புதிய நிதியாண்டின் முதல் நாள், போன வருடத்தின் இழப்புகளை ஈடுகட்டி புதிய லாபங்களை பெற்றுத்தரும் வருடமாய் அமைய வேண்டி என் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறேன்.

 4. thank u,

 5. dear friend,

  the information what you providing here is very useful to us. keep it up. why you are using another blog for recmntns. why u can place google add in wordpress or what?? becaouse wordpress.com looks very nice compare to others

  thanks

 6. புத்தாண்டே வருக வளமைகளை தருக

 7. dear friend,

  we are all cliking the add and survay sites ok but we would like to know they are real one or fake
  example a.w.survey and rupeemail. in future if you provide some additional information for those kind of add it will more help full to others
  thanks

Comments are closed.