நேற்றைய பதிவில் குறிப்பிட்டவாறே தேசிய நிஃப்டி 4840-4880 க்களில் Selling pressure தாளாமல் சரிந்தது. சர்வதேச சந்தைகளின் தாக்கம் இத்தனை வலுவாயிருந்தும் நமது சந்தைகள் ஈடுகொடுக்க இயலாதது நமது பலவீனத்தினை மேலும் உறுதி செய்கிறது.
தற்போதைய நிலையில் தேசிய நிஃப்டியில் 4954 என்கிற இலக்கு மிக முக்கியமானதாக இருக்கும். இந்த நிலையை கடக்காதவரையில் சந்தையில் எவ்வித முன்னேற்றத்திற்கும் வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை. சந்தையின் பலவீனம் ஊர்ஜிதப்படுத்தப் பட்ட நிலையில் இன்று ஆப்பரேட்டர்கள் எனும் சூதாடிகள் சந்தையை உயர்த்திக் காட்டி சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களை கபளீகரம் செய்யும் வாயப்புகளை மறுப்பதற்கில்லை. கவனம் தேவை…
ஒவ்வொரு சிறிய உயரமும் மோசமான சரிவுகளை தருமென்பதால், உயரங்களில் கையிருப்புகளை விற்று கீழிறங்கும் போது வாங்குவதே புத்திசாலித்தனமான உத்தியாக இருக்கும்.
தற்போதைய நிலையில் தினவர்த்தகம் மட்டுமே சாத்தியம்…..அதுவும் மிக கவனமாய் செய்யப்படுதல் அவசியம். சிறிய மற்றும் துவக்க நிலை வரத்தகர்கள் இன்றைக்கு விலகியிருப்பதே நல்லது. Wild swing எனப்படும் மேடுபள்ளங்களை இன்றைய சந்தைகள் சந்திக்க வாய்ப்பிருக்கிறது.
அமெரிக்க சந்தைகள் கடந்த இரு தினங்களில் மட்டும் 5% வரை உயர்ந்திருக்கின்றன, DOW பொறுத்தவரையில் 12600 என்பது மிக முக்கியமான நிலை, இந்த நிலையில் Selling pressure உருவாகுமென எதிர்பார்க்கிறேன்…அவ்வாறானால் அடுத்த இரு தினங்களில் அமெரிக்க சந்தைகள் சரியும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை.
எதிர்பார்த்ததை போலவே அமெரிக்க Dow 12600 களில் சுணங்கியிருக்கிறது. முடிவடைந்திருக்கும் அமெரிக்க சந்தைகள் flat wiith -ve signals எனலாம். தற்போது துவங்கியிருக்கும் ஆசிய சந்தைகளும் இதே போக்கினை தொடர்கின்றன.
இன்றைய சந்தையில்….
தேசிய நிஃப்டி 4615 – 4830 க்குள் ஊடாடும்.
மும்பை சென்செக்ஸ் 15090 -16040 க்குள் ஊடாடும்.
*தினவர்த்தக குறிப்புகள் இங்கே…..
(இம்மாதிரியான அசாதாரன சூழ்நிலகளில் சந்தையின் கட்டுக்குள் அடங்கும் வர்த்தக குறிப்புகளை மட்டும் பயன்படுத்தவும். நிலைகளை மீறிய குறிப்புகளை தவிர்க்கவும்.)
மார்க்கெட் நிலையற்று இருப்பது சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இல்லை என்பதை தங்களின் ஆய்வு உறுதி செய்கிறது
S பஷீர் அஹமது
எழுதியவர் உலக பங்குச்சந்தைகள் நாள் ஏப்ரல் 3, 2008
நேரம் 9:22 மு.பகல்
Dear sir,
How to find out FII activity In
certain script in every day.Do you suggest any website.
எழுதியவர் G.rajendran நாள் ஏப்ரல் 3, 2008
நேரம் 10:08 மு.பகல்
CAIRN T1achived
ITC T1 achived
எழுதியவர் panguvaniham நாள் ஏப்ரல் 3, 2008
நேரம் 10:12 மு.பகல்
yesbank T1 achived
REL T1,T2 achived
jindalstel T1achived
forget jswsteel
எழுதியவர் panguvaniham நாள் ஏப்ரல் 3, 2008
நேரம் 11:28 மு.பகல்
நண்பரே,
தங்கள் ஆலோசனை மிகவும் சரியாக உள்ளது.
நன்றி
எழுதியவர் RAVISHANKAR நாள் ஏப்ரல் 3, 2008
நேரம் 4:27 பிற்பகல்
சிறு முதலீட்டாளர்களை காப்பாற்றும் உங்கள் பணி பாராட்டுக்குரியது.உங்கள் பதிவை தொடர்ந்து படித்து வந்தாலே ஒரளவுக்கு நட்டங்களை தவிர்க்கலாம்
எழுதியவர் nellaikanna நாள் ஏப்ரல் 3, 2008
நேரம் 6:15 பிற்பகல்
தரவுகளில் ஏராளமான வழிகாட்டுதல்கள் இருக்கினறன
thanks lot
SBA
எழுதியவர் உலக பங்குச்சந்தைகள் நாள் ஏப்ரல் 3, 2008
நேரம் 6:33 பிற்பகல்
sir, i want to know how do you guess(calculate) the selling pressure at a correct level. could you please tell us. (what is selling pressure?, What are the things we need to calculate the selling pressure? for eg: you say in 1840 (how it is possible to find the correct number)
எழுதியவர் doss நாள் ஏப்ரல் 3, 2008
நேரம் 7:36 பிற்பகல்
தாஸ்…
அதை கணிப்பது பெரியவேலையில்லை…மிகவும் எளிதுதான்…இங்கே பின்னூட்டத்தில் விளக்குவதை காட்டிலும் அதை தனியொரு பதிவாக இடுகிறேன்…எதிர்காலத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்….
எழுதியவர் panguvaniham நாள் ஏப்ரல் 3, 2008
நேரம் 8:11 பிற்பகல்
தங்கள் ஆலோசனைக்கு நன்றி!
எழுதியவர் Faizal நாள் ஏப்ரல் 3, 2008
நேரம் 9:16 பிற்பகல்
வணக்கம்,நண்பர் தாஸ் அவர்களுக்கு ஏற்பட்ட கேள்வி என்னுள்ளும் உள்ளது தங்களது பதிவுக்காக காத்திருக்கிறேன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,நன்றி
எழுதியவர் balakeethai நாள் ஏப்ரல் 4, 2008
நேரம் 12:23 மு.பகல்
Thank you sir.
எழுதியவர் doss நாள் ஏப்ரல் 4, 2008
நேரம் 8:20 மு.பகல்
Dear friend iam having 20 hdfc @1406 what can i do plz suggest me …
எழுதியவர் Rajkumar நாள் ஏப்ரல் 4, 2008
நேரம் 10:42 மு.பகல்