ஏப்ரல் 04, 2008


தொடர்ச்சியாக இரண்டாவது நாளாய் சந்தை தன்னை பக்கவாட்டில் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. தற்போதைய சந்தையை மதில் மேல் பூனைக்கு ஒப்பாய் சொல்லலாம். எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சந்தை பாய்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

தற்போதைக்கு சந்தை மேலே உயர்வது Heavy weights எனப்படும் நிஃப்டி பங்குகளின் கையில்தான் இருக்கிறது. வரும் நாட்களில் வெளியாகும் நிறுவனங்களின் நிதியறிக்கைகள் சந்தையை மேலே உயர்த்தும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதுவும் மாதத்தின் இரண்டாம் பாதியில்தான் இதை எதிர்பார்க்க இயலும். ஆனால் அதற்கான சாத்தியங்கள் நிறையவே இருக்கிறது. எது எப்படியாகிலும் தேசிய நிஃப்டி 4954 என்கிற நிலையை தாண்டினால் மட்டுமே சாத்தியம்.

இன்று வெளியாகும் பணவீக்க விகிதம், சர்வதேச சந்தைகளின் தாக்கம் போன்ற காரணிகள் சந்தையில் பின்னடைவினை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருக்கின்றன. பொதுவில் இன்றைய சந்தைகள் Flat ஆக முடிவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எக்காரணத்தினை கொண்டும் புதிய முதலீடுகளை செய்யவேண்டாம். தினவர்த்தகம் மட்டுமே சாத்தியமான சந்தை சூழலில் இருக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். சந்தையின் Volume குறைவாக இருப்பதும் கவலைதரும் அம்சம்.

முடிவடைந்திருக்கும் அமெரிக்க சந்தைகள் Flat with positive signals உடன் முடிவடைந்திருக்கின்றன. தற்போது துவங்கியிருக்கும் ஆசிய சந்தைகள் கீழ்முகமாய் துவங்கியிருக்கின்றன. நமது சந்தைகளிலும் பெரிதாய் நகர்வுகள் இருக்காதென்றே எதிர்பார்க்கிறேன்.

இன்றைய சந்தையில்….

தேசிய நிஃப்டி 4615 – 4830 க்குள் ஊடாடும்.

மும்பை சென்செக்ஸ் 15400 – 16040 க்குள் ஊடாடும்.

*தினவர்த்தக குறிப்புகள் இங்கே….(சிறிய அளவில் வர்த்தகம் செய்ய முயற்சியுங்கள், Stoploss தீவிரமாய் அனுசரிக்கவும்)


*- எனது தமிழ் மற்றும் ஆங்கில வ்லைப்பதிவினை பயன்படுத்துவோருக்கான வர்த்தக குறிப்புகளுக்கென தனியே http://paisaavasool.blogspot.com என்கிற புதிய வலைபதிவினை ஏற்படுத்தியிருக்கிறேன். இனி வரும் நாட்களில் எனது வர்த்தக பரிந்துரைகள் இந்த தளத்தில் இடம்பெறும். பிற இடங்களில் இருந்து பெறப்படும் தகவல்கள் ஆங்கில வலைப்பதிவில் வழமை போல பகிர்ந்து கொள்ளப்படும். இந்த வலைபதிவுகளில் இடம்பெற்றிருக்கும் விளம்பரங்களை நீங்கள் சொடுக்கி பார்வையிடுவதன் மூலம் ஈட்டப்படும் விளம்பர வருவாய் என்னை மேலும் உற்சாகப்படுத்தும். ஒத்துழைப்பிற்கு நன்றி.

விளம்பரம்

Get $6.00 Welcome Survey After Free Registration!

About these ads

11 thoughts on “ஏப்ரல் 04, 2008

 1. வணக்கம்
  ஓராண்டுக்கும் மேலாக தன்னலமற்ற சேவை செய்து வர தொண்டுள்ளம் கொண்டவர்களால் மட்டுமே முடியும் இச்சேவை முதலீட்டாளர்களுக்கு மட்டுமல்ல தமிழனத்திற்கே செய்யப்படும் சேவையாகும்

  நன்றி

  S பஷீர் அஹமது

 2. பஷீர்….

  சேவை, தொண்டுள்ளம் என்பதெல்லாம் பெரிய வார்த்தை…நான் அதற்கு தகுதியானவனும் இல்லை….

  தங்களின் அன்பிற்கு நன்றி…

 3. no sir. just now i see your reply. what you are doing is really a great thing.
  one day when i didn’t know what to do, at that time i saw your site. from that day it gives me light to my market life. Now i have confident about the share market and i am learning about market through you, without your permission. (now you are my “manaseega guru”. Whenever i dont know about any thing, i want to ask to you. you may answer it or not it is not a problem to me. But i want to ask to you and get your answer and i learn more. so you are eligible for the words of mr. bashir.
  by your student or thambi doss

 4. thankyou. your tips are very useful to us. ur prediction is wonderful. i gave ur web add to many friends.i came to know by ananda vikadan.so thank u and a.v.

 5. Hi sir,

  I have RPL 50 shares @155
  GMR infra 50 shares @148
  Power grid 50 shares @100
  NTPC shares 50 shares @ 189
  Ashok Leyland 100 shares @35
  Indian Hotels 50 shares @112.50

  Tell me which shares should i hold/sell..??

 6. காஞ்சி…

  தற்போதைக்கு எதையும் விற்க வேண்டாம். ஒரு இரண்டு வாரம் பொறுங்கள்…..ஆண்டு முடிவுகள் வெளியாகும் போது சொல்கிறேன்…அப்போது யோசிக்கலாம்.

 7. Dear friend iam having 20 hdfc bank @1406
  plz tell me can i hold or sell?

 8. ராஜ்குமார்…

  முந்தைய பதில் உங்களுக்கும் பொறுந்தும்…பொறுத்திருங்கள்.

 9. Thank you very much for your service I read your book ELLAKATHE that give me a clear knowledge about market but still now i have some doubt wheather market & mutual fund is a good fundamental invesment like gold real estate & F D Iam not meaning about the returns of profit I meaning about the basic fundamental of the share market

 10. ராஜ் பாண்டியன்….

  ‘இழக்காதே’ என்னுடைய புத்தகமில்லை. அது திரு.செல்லமுத்து குப்புசாமி அவர்கள் எழுதியது. அவரும் சக பதிவர்தான்…அவரது வலைமுகவரி…

  http://panguvanigam.blogspot.com

  உங்களது வாழ்த்துகளையும், நன்றிகளையும் அங்கே பதிவுசெய்யுங்கள் செல்ல முத்து மகிழ்ச்சியடைவார்….

Comments are closed.