திமிங்கில வேட்டை : எங்கே என் தேவதை….


திமிங்கில வேட்டை – பாகம் இரண்டு

எங்கே என் தேவதை…

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தொடர்கிறேன்….

பங்கு சந்தைகளின் அடிப்படைகள், பங்குகளின் வகைகள், பங்குகளின் பரிவர்த்தனைகள் பற்றியெல்லாம் முந்தைய பதிவின் இனைப்பில் இருந்து தெரிந்துகொண்டிருப்பீர்கள் என்கிற நம்பிக்கையில் தொடர்கிறேன்….அது குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால் பின்னூட்டமிடுங்கள்…..

சரி, இனி பங்கு வர்த்தகத்தில் நுழைவதை பார்ப்போம்……

நீங்கள் ஒரு Demat account துவங்கி அதில் கொஞ்சமே கொஞ்சமாய் காசு போட்டு வைத்திருக்கிறீர்கள் என நினைத்துக் கொண்டு துவங்குகிறேன். ஏனெனில் இப்பொழுதெல்லாம் இந்த கணக்கை துவங்க வேண்டுமென நீங்கள் நினைத்தால் போதும் உங்களை தூக்கிக் கொண்டுபோய் கணக்கு ஆரம்பித்துக் கொடுக்குமளவிற்கு ஆட்களும் அவர்களிடையே போட்டியும் இருக்கிறது. இதில் இவர்தான் சிறந்தவர் என்று எவரும் இல்லை….எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். நிறையும் குறையும் கலந்தேயிருக்கிறது, அதனால் உங்களுக்கு பிடித்தவரிடம் அல்லது உங்களை பிடித்தவரிடம் கணக்கை துவங்கி கொள்ளுங்கள்.

அடுத்த கட்டம் தயாரிப்புகள்…..எதையும் செய்வதற்கு முன்னால் கொஞ்சம் முன் தயாரிப்புகள் இருப்பது நல்லதுதானே….

பங்கு சந்தையை ஆராய்வோமென கிளம்பினால் இரண்டு வார்த்தைகளை   அடிக்கடி கேட்க முடியும்…..

1.Fundamental Analysys
2.Technical Analyss

இப்போது ஒரு கதை, இதில் நீங்களதான் கதாநாயகன், கொள்ளை அழகுடன் தேவதையொருத்தி கடந்து போக உங்களுக்குள் மின்சாரம் பாய்கிறது…காதல் பித்து தலைக்கேறி……எப்படியாவது அந்த தேவதையின் கடைக்கண் பார்வையையையும், அவளின் காதலையும் பெற துடிக்கிறீர்கள். உங்களுக்கோ இதுதான் முதல் அனுபவம், அவசரப்பட்டு அரைவேக்காட்டுத்தனமாய் முயற்சித்து முதலுக்கே மோசமாகி விடக்கூடாதென்கிற பயமும் வந்துவிடுகிறது.

உங்கள் நண்பர் ஒருவரோ இதில் கரை கண்டவர், ஆலோசனை கேட்கிறீர்கள். அவரின் முதல் கேள்வி, அவளை பற்றி உனக்கு என்ன தெரியும்?,.உங்களுக்கோ உங்கள் தேவதையை பற்றி எதுவுமே தெரியாது…..என்ன ஒரு துரதிர்ஷ்டம்…

நண்பர் சொல்கிறார்…”முதலில் அவளை பற்றி விசாரித்துவிட்டு வா, நானும் என் வட்டத்தில் விசாரிக்கிறேன் என அனுப்பிவிடுகிறார்….நீங்களும் மாங்கு மாங்கென அவள் வீடு , தந்தை யார்?, என்ன செய்கிறார்கள், கூடப்பிறந்தவர்கள் இருக்கிறார்களா,எப்படி பட்ட குடும்பம், உங்களின் தகுதியும் அவர்களின் தகுதியும் எப்படி என உங்களுக்கு கிடைக்கிற விவரங்களை சேகரித்து அதெல்லாம் உங்களுக்கு திருப்தியாக படவே ஒன்றுவிடாமல் நணபரிடம் ஒப்பிக்கிறீர்கள்……

பொண்ணை பற்றி விசாரிச்சிட்டு வரச்சொன்னால் அவளின் குடும்பத்த பத்தி வந்து சொல்றீயேடா என சலித்துக்கொண்டே, அவர் பக்க தகவல்களை சொல்கிறார்….உங்களின் தேவதை முன் கோபி, பச்சை கலரும், அஜீத்தும்,பூனைக்குட்டியும் அவளுக்கு உயிர், இத்தனாம் நம்பர் பஸ்ஸில் இத்தனை மணிக்கு அவளை பார்க்கலாம், எந்த தருணத்தில் அவளை அனுகினால் சாதகமான பலன் கிடைக்குமென கூறி, அதற்கான வழி வகைகளையும் சொல்லி வாழ்த்தி அனுப்புகிறார்.

இந்த இடத்தில் கதையை முடித்துக்கொள்வோம்…வேறொரு சந்தர்ப்பத்தில் இந்த கதையை தொடர்வோம்…..

இந்த கதையின்….

தேவதைதான்…நீங்கள் வாங்க விரும்பும் பங்கு(Stock/Share)

நீங்கள் சேகரித்த குடும்பத்தின் தகவல்கள்தான் அடிப்படைகளின் ஆய்வு (Fundamental Analysys)

உங்கள் நண்பர் கூறிய தேவதையின் குணாதிசயங்கள்தான் நுட்பங்களின் ஆய்வு (Technical Analysys)

உங்களின் நண்பர்தான்….உங்களின் நுட்ப ஆய்வாளர் (Technical Analyst)

அதாவது…..வேண்டாம், நீங்கள் புரிந்து கொண்டதை பின்னூட்டமிடுங்கள்….

தொடர்வோம்…….

About these ads

31 thoughts on “திமிங்கில வேட்டை : எங்கே என் தேவதை….

 1. மீணடும் திமிங்கல வேட்டையை தொடர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது
  S பஷீர் அஹமது

 2. Hi ,

  Please suggest me some shares on longterm.

 3. hi very nice

 4. ஹாஹா

  வித்தியாசமான விளக்கம். தேவதைய பத்தி டெக்னிகல் அனாலிசிஸா என் மைண்ட்ல என்னென்னவோ க்ராப் ஓடுதே!!!!

  :))))))))

 5. சிவா….

  தப்பேயில்லை…உங்க வயசு அப்படி

  :-)))

 6. மீணடும் திமிங்கல வேட்டையை தொடர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது

 7. I think you are that FREIEND (Technical Anlyst)

 8. dear sir,
  vanakkam.your explanation about the fundamental and technical analysis is fine and it will be edcative for new comers like me to share market.i read in today’s deccan chronicle mr. hemani a stock broker has predicted that the sensex going down to 12000 and recover to 15000. what is your opinion about it?
  what will happen to those who bought shares when the sensex was as high as 19000/2000

 9. கனகவேல்…

  நான் Technical analyst என்றால் நீங்கள் Fundamental analyst….புரிகிறதா…?

  நிறைய தேவதைகளின் அருள் கிடைக்க வாழ்த்துகிறேன்….

 10. நடராஜன்…

  இதன் சாத்தியங்களை திங்கட்கிழமைய பதிவில் தருகிறேனே….

 11. பங்கு மார்கெட்டை அழகான பெண்ணுக்கு (சீமான் வீட்டு செல்லம்)ஒப்பிட்டு எழுதியுள்ளது எல்லாருக்கும் எளிதாக புரியும். பங்கு வணிகத்தில் நடை பெறும் ஏற்ற இறக்கங்கள் fundamental/technical வல்லுனர்களை சில சமயம் ஏமாற்றி விடுகிறேதே
  இது எப்படி?
  யார் காரணம்?
  தவிர்ப்பது எப்படி?
  குழப்புவர்கள் யார்?
  விளக்கவும்

  .

 12. Superb!
  Thank you
  Dr Chandramohan

 13. YOOMBA பயண்படுத்த எளிதாக உள்ளதே VOICE TIPS உதவுமே

  BASHEER S

 14. hi,

  in your love story, please don’t forget the American Villain.

  josh

 15. Sir,
  I want to learn more abt fundamendal analyis. is there any good web site available for teaching us (both tamil and in english)

 16. VERY NICE MR.SARAVANAN,
  KEEP IT UP.IF THE MARKET GOING UP AND UP ALL ARE SAYING MORE AND MORE UPWARDS. IF VICEVERSA ALL ARE SAYING THE SAME MORE AND MORE DOWNWARDS. INCLUDING ALL TECHNICAL AND FUNDAMANTEL ANALYSITS ALSO THE SAME WORDS.SO THINK POSITIVELY AND ACT POSITIVELY AND PRAY POSITIVELY FOR BETTERMENT.

 17. Sir
  fundamendal analyis is needed for the person who wants to marry her .( for long term investment )

  Technical analysis is needed for the person who wants to love her for just like that.(day trading /
  short term investing )
  AM I CORRECT ?

 18. À½ Å£ì¸ò¨¾ ¸ðÎôÀÎò¾ ¿ÁÐ Áò¾¢Â Åí¸¢ ÅðÊ Å¢¸¢¾ò¨¾ ¯Â÷òÐÁ¡? «øÄÐ «¾üìÌ ÓýÀ¡¸ ¿¢¾¢Â¨Áõ À½ Å£ì¸ò¨¾ ¸ðÎÀÎòÐÁ¡?

 19. பரமசிவம் எழுதிய முந்தைய பின்னூட்டம்….

  “பண வீக்கத்தை கட்டுப்படுத்த நமது மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துமா? அல்லது அதற்க்கு முன்பாக நிதியமைச்சகம் பண வீக்கத்தை கட்டுபடுத்துமா?”

  அடுத்த இரண்டு மூன்று வாரங்களுக்கு பிறகே மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கான பலன் தெரிய ஆரம்பிக்கும்…அதுவரை ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளுக்கு வாய்ப்பில்லை….

 20. ஆறுமுகம்…

  நீங்கல் சொல்வது சரிதான்…

 21. மகேஷ்…

  உங்க்ளின் தேவைக்கு கூகிளாண்டவரை(Google) சரணடையுங்கள்…அள்ளி அள்ளி தருவார்.

 22. பணவீக்கத்தை கட்டுப்படுத்த நமது மத்தியவங்கி வட்டி
  விகிதத்தை உயர்த்துமா? அல்லது நிதியமைச்சகம் பணவீக்-
  கத்தை கட்டுப்படுத்துமா?

 23. பரவமசிவம்…

  முந்தைய பின்னூட்டத்தினை பார்க்கவும்.

 24. திமீஙல வேட்டை மிகவும் நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதவும்,தேவதை நல்ல உதாரணம், வாழ்த்துக்கள்

  முருகேசன்
  அபுதாபி

 25. You have given an easy, common example to startwith…glad that u have continued writing on Thimingala Vettai…I hope to learn more about stock markets through this article…
  Thank you.

 26. மீண்டும் திமிங்கல வேட்டையை தொடர்ந்தற்கு நன்றி..எப்பொழுதும் போல மற்றவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு எழுத வாழ்த்துக்கள்

 27. very informative articles .

  thank you very much

 28. Really helpful to the entrants…kindly keep it up

 29. Expecting more infos from you through “Thimingalam”

 30. என் நல்லநேரம். நான் இன்று உங்களை, உங்கள் எழுத்துகளை சந்தித்த நாள். உங்கள் எழுத்துகள் அனைத்தும் அற்புதமானவை . தொடருங்கள் உங்கள் அற்புதங்களை. வணங்குகிறேன் .

Comments are closed.