மார்ச் 07, 2008


 • மூன்றாண்டுகளில் இல்லாத பணவீக்கம்
 • அதிகரிக்கும் உணவு பற்றாக்குறை
 • எகிறும் சிமெண்ட் மற்றும் ஸ்டீல் விலைகள்
 • பணவீக்கத்தை எதிர்த்து போராடும் மத்திய அரசு
 • வெளியாக இருக்கும் Infosys முடிவுகள்

இப்படியாக உள் நாட்டு பிரச்சினைகளையே முன் வைத்து துவங்கும் வாரமிது…சர்வதேச சாதக பாதகங்களை விட உள்நாட்டு விவகாரங்கள் தீவிரமடைந்துள்ளதால், இந்த வாரத்தில் நமது சந்தைகள் சர்வதேச சந்தைகளை எந்த அளவிற்கு பிரதிபலிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கடைசி மூன்று நாட்களாய் பக்கவாட்டில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டிருக்கும் அமெரிக்க சந்தைகளில் Dow 12800 களை தாண்டும் பட்சத்தில் காளைகளின் ஆதிக்கம் மேலோங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

நமது சந்தைகளை பொறுத்த வரையில் அடுத்த இரு வாரங்களில் வெளியாகவிருக்கும் நிறுவனங்களின் ஆண்டிறுதி முடிவுகள் எதிர்பார்த்து இந்த வாரத்தில் சந்தைகள் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவோ அல்லது மிச்சமிருக்கும் சரிவுகளை சந்தித்து விட்டு அடுத்து வரும் இரு வாரங்கள் காளைகளிடம் விட்டுவிடுவது என்கிற் இரு சாத்தியங்களை கொண்டிருக்கின்றன.

வெள்ளிக்கிழமைய சந்தை நிலவரங்களை பார்க்கும் பொழுது அடுத்த இரு தினங்களில் தேசிய நிஃப்டி ஜனவரி 22ம் தேதிய நிலையான 4448 ஐ எட்டும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. Volume மிகக்குறைவாக உள்ள சந்தை சூழலில் பெரிய நிறுவனங்களின் பங்குகளே சந்தையின் திசையினை நிர்ணயிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. நிஃப்டி பங்குகளின் போக்கினை கவனித்து அதன் போக்கில் வர்த்தக முடிவுகளை எடுப்பது நல்லது.

இனி கீழேயுள்ள Chart ஐ கவனியுங்கள்….திரு.நடராஜனின் சந்தேகத்திற்கான பதில் இதில் இருக்கிறது.

இது கடந்த பதினெட்டு மாதங்களுக்கான தேசிய நிஃப்டியின் Weekly chart, இதில் மறைந்திருக்கும் அபாயத்தினை கவனியுங்கள்… மிக அழகான Head and Shoulder pattern உருவாகிக் கொண்டிருப்ப்தை கவனிக்த்தீர்களா. தற்போதைய நிலையில் கழுத்துப் பகுதியில் நமது சந்தைகள் இருக்கின்றன.

பணவீக்க விகிதம் கட்டுக்குள் வர குறைந்தது இரண்டு மூன்று வாரங்களாவது ஆகும். வெளி வரவிருக்கும் ஆண்டு முடிவுகள் எதிர்பார்ப்புகளை விட குறைவாக இருக்கும் பட்சத்தில் மள்மளவென சரிவதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை.கடந்த வார முடிவில் 200 Weekly EMA 4189 ஆக இருக்கிறது. இந்த நிலையே தற்போதைக்கு வலுவான Support level ஆக இருக்கும்…இதை மீறினால் 3500-3700 வரை சரிந்தபின்னரே சந்தை மீளும் வாய்ப்புகள் இருக்கின்றன.

தெய்வாதீனமாக ஏதாவது அற்புதங்கள் நிகழ்ந்து தேசிய நிஃப்டி 5600 கடந்தால் இந்த ஆபத்தில் இருந்து தற்காலிகமாய் தப்பிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.மற்றபடி நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பதுதான் நமது சந்தைகளின் தலைவிதியாக இருக்கும்.

குறுகிய கால முதலீட்டாளர்கள் ESSAROIL பங்குகளை கவனிக்க ஆரம்பியுங்கள், அடுத்த வாரத்தின் இறுதியில் இந்த பங்கு Breakout ஆக வாய்ப்புகள் இருக்கின்றன.

தற்போது துவங்கியிருக்கும் ஆசிய சந்தைகள் Flat ஆகவே இருக்கின்றன….

இன்றைய சந்தையில்…

தேசிய நிஃப்டி 4540 – 4740 க்கு இடையில் ஊடாடும்.

மும்பை சென்செக்ஸ் 15090 – 15720 க்கு இடையில் ஊடாடும்.

தினவர்த்தக குறிப்புகள் *இங்கே…


*- எனது தமிழ் மற்றும் ஆங்கில வ்லைப்பதிவினை பயன்படுத்துவோருக்கான வர்த்தக குறிப்புகளுக்கென தனியே http://paisaavasool.blogspot.com என்கிற புதிய வலைபதிவினை ஏற்படுத்தியிருக்கிறேன். இனி வரும் நாட்களில் எனது வர்த்தக பரிந்துரைகள் இந்த தளத்தில் இடம்பெறும். பிற இடங்களில் இருந்து பெறப்படும் தகவல்கள் ஆங்கில வலைப்பதிவில் வழமை போல பகிர்ந்து கொள்ளப்படும். இந்த வலைபதிவுகளில் இடம்பெற்றிருக்கும் விளம்பரங்களை நீங்கள் சொடுக்கி பார்வையிடுவதன் மூலம் ஈட்டப்படும் விளம்பர வருவாய் என்னை மேலும் உற்சாகப்படுத்தும். ஒத்துழைப்பிற்கு நன்றி.

விளம்பரம்

Get $6.00 Welcome Survey After Free Registration!

About these ads

8 thoughts on “மார்ச் 07, 2008

 1. நாளின் பிற்பாதியில் சந்தைகள் சரியும் வாய்ப்புகள் இருக்கின்றன….கவனம் தேவை.

 2. thank u very much sir

 3. sir,

  I have 50 Indian Hotel shares, how to get the right issue offer, to whom i need to contact for this?

 4. உஷா…

  Ask ur broker…he will guide u

 5. Shortterm call….

  Buy ICICI around 795-805 , sl around 770, Target 825, 860

 6. Short term call

  Buy REL 1195-1205, SL 1160, Target 1260

 7. வணக்கம் தங்களின் சார்ட் விளக்கம் அருமை தொடரட்டும் உங்கள் சேவை…….நன்றி

Comments are closed.