ஏப்ரல் 08, 2008


ஆசிய சந்தைகளின் தாக்கம், நேற்றைய சந்தை காளைகளின் கையில்….

இம்மாதிரியான குறைந்த Volume களுடன் ஏற்படும் உயர்ச்சிகள் எப்போதுமே நிரந்தரமானவையோ அல்லது சுவாரஸ்யமானவையோ அல்ல…அடுத்த இரு தினங்களுக்கு இதன் தாக்கம் நீடிக்கலாம். இத்தனை உயரங்களையும் ஒரே நாளில் தொலைக்கும் வாய்ப்புகளை சமீபத்தில் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். அநேகமாய் வியாழன் அல்லது வெள்ளியன்று இத்தகைய வீழ்ச்சியினை பார்க்க இயலுமென நினைக்கிறேன்.

முந்தைய பதிவுகளில் சொல்லி வந்த மாதிரியே தேசிய நிஃப்டி 4954 என்ற இலக்கினை கடக்காதவரையில் பெரிதாய் மகிழ்ச்சியடைய ஏதுமில்லையென்பேன். கடந்த நான்கு வாரங்களாய் இந்த இலக்கு தேசிய நிஃப்டிக்கு சிம்ம சொப்பனமாய் இருந்து வருகிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

இன்றைய சந்தையினை பொறுத்தவரையில் தேசிய நிஃப்டி 4833 நிலைகளில் தடுமாறும். சர்வதேச சந்தைகளின் புண்ணியத்தால் இந்த நிலைகளை கடந்துவிட்டால் அதிகபட்சமாய் இன்றைய நிஃப்டி 4920 வரை உயரும் வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே இந்த உயரங்களில் கையிருப்புகளை விற்றுவிட்டு அடுத்த சரிவிற்கு காத்திருக்கலாம்.

முடிவடைந்திருக்கும் அமெரிக்க சந்தைகள்  Flat ஆகவும், தற்போது துவங்கியிருக்கும் ஆசிய சந்தைகள் அதனையொட்டியுமே இருக்கின்றன.

இன்றைய சந்தையில்

தேசிய நிஃப்டி 4700 – 4920 க்குள் ஊடாடும்.

மும்பை சென்செக்ஸ் 15540 -16400 க்குள் ஊடாடுமென எதிர்பார்க்கிறேன்.

தின்வர்த்தக குறிப்புகள் *இங்கே…


*- எனது தமிழ் மற்றும் ஆங்கில வ்லைப்பதிவினை பயன்படுத்துவோருக்கான வர்த்தக குறிப்புகளுக்கென தனியே http://paisaavasool.blogspot.com என்கிற புதிய வலைபதிவினை ஏற்படுத்தியிருக்கிறேன். இனி வரும் நாட்களில் எனது வர்த்தக பரிந்துரைகள் இந்த தளத்தில் இடம்பெறும். பிற இடங்களில் இருந்து பெறப்படும் தகவல்கள் ஆங்கில வலைப்பதிவில் வழமை போல பகிர்ந்து கொள்ளப்படும். இந்த வலைபதிவுகளில் இடம்பெற்றிருக்கும் விளம்பரங்களை நீங்கள் சொடுக்கி பார்வையிடுவதன் மூலம் ஈட்டப்படும் விளம்பர வருவாய் என்னை மேலும் உற்சாகப்படுத்தும். ஒத்துழைப்பிற்கு நன்றி.

விளம்பரம்

Get $6.00 Welcome Survey After Free Registration!

About these ads

10 thoughts on “ஏப்ரல் 08, 2008

 1. Thank you sir
  Dr chandramohan

 2. நண்பரே,

  உங்களின் கணிப்பு மிக அருமை … நன்றி..
  for f/o எனது வலைப்பூவினை பார்க்கவும்..

 3. Top10shares…

  உங்கள் வலைப்பூவின் முகவரி?

 4. sir
  what is the high rate of essaroil. Please tell me sir.

 5. top10shares.wordpress.com ல் எனது பதிவுகள் இடம் பெற்று உள்ளன.

 6. sir,

  I have 50 GMR infrastructure shares @148, it keeps on decreasing day by day.. shall i hold/sell?

 7. தான் வாழ்ந்தால் போதும்….
  அடுத்தவரை விட தான் மட்டும் உயரே இருக்க வேண்டும்..
  மற்றவர் பொருளாதார ரீதியில் துன்புறுவதை கண்டு உள்ளுக்குள் மகிழும் கலாசாரம் உடைய இச்சமூகத்தில் பொருளாதார ரீதியாக வழிகாட்டக்கூடியவர் லட்சத்தில் சிலரே……… ஆம் சரவணக்குமாரும்

 8. Sir I read ur valuable opinions. They r very useful to me and my friends. Thanking u

 9. உஷா…

  http://www.moneycontrol.com/india/messageboardblog/19/30/viewtopicmessages/246617

  இந்த் இனைப்பை பாருங்கள்…சில தெளிவுகள் கிடைக்கும்.

  என்னை கேட்டால் நீண்டகால முதலீடு என்றால் வைத்துக் கொள்ளுங்கள், குறுகிய கால முதலீட்டாளர் எனில் அடுத்த வாரத்தின் மத்தியில் விலை உயரும் போது கணிசமான லாபத்துடன் வெளியேறிவிடுங்கள்.

  நட்டத்தில் ஒருபோதும் விற்காதீர்கள்.

 10. sir which one is best for intra? on line trading or off line

Comments are closed.