panguvaniham எழுதியவை | ஏப்ரல் 10, 2008

ஏப்ரல் 10, 2008

எதிர்பார்ப்புகளையொட்டியே நகரும் சந்தைகள்….ஆப்பரேட்டர்களின் விளையாட்டு தொடர்கிறது. நேற்று நாளின் கடைசி அரைமணி நேர சந்தையை கவனித்தவர்களுக்கு இது புரியும். காலாண்டு முடிவுகள் வெளியாக துவங்கியிருக்கின்றன. இதுவரை வந்த முடிவுகள் எதுவும் பாதகமில்லை. வரும் செவ்வாய் கிழமையன்று வெளியாகும் Infosys முடிவுகளே சந்தையின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு அடிப்படையாக இருக்குமென எதிர்பார்க்கிறேன்.

ஆண்டிறுதி முடிவுகளின் எதிர்பார்ப்பினால் சந்தைகள் அடுத்த இரு தினங்களுக்கு மேலே உயரும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. இன்றைய சந்தை Gap up ஆக துவங்கும் பட்சத்தில் உடனடியாக ஒரு சரிவு வருவது தவிர்க்க இயலாதென நினைக்கிறேன். இதை தின வர்த்தகர்கள் கவனத்தில் கொள்ளவும்.

அமெரிக்க சந்தைகள் தொடர்ச்சியாக பக்கவாட்டில் தன்னை நிலைநிறுத்திக்க் கொண்டிருக்கின்றன.அதாவது Flat with negative signals. ஆசிய சந்தைகளும் இதே போக்கினை கொண்டிருக்கின்றன. இதன் தாக்கம் நமது சந்தைகளின் துவக்கத்தில் தெரியும்.

இன்றைய சந்தையில்…

தேசிய நிஃப்டி 4700 – 4920 க்கு இடையில் ஊடாடுமென எதிர்பார்க்கிறேன்.

மும்பை சென்செக்ஸ் 15540 – 16400 க்கு இடையில் ஊடாடலாம்.

நீண்டகால முதலீட்டாளர்கள் இந்த குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும்.

தினவர்த்தக குறிப்புகள் இங்கே…..


மறுவினைகள்

  1. thank you sir.

  2. Thank you

  3. Will it be prudent to buy large caps to average out the cost price of a few large cap stocks like tata motors, tcs, rel com etc. now at this level?

  4. thank you sir,

  5. Hi, Ur blog is really usefull. Thanks.
    btw, am not able to find the long term recommendations. the page is empty.
    pls luk into it.

    thanks again.


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்