ஏப்ரல் 11, 2008


 • வாரத்தின் கடைசி நாள்
 • தொடர்ச்சியாக மூன்று நாள் விடுமுறை
 • செவ்வாயன்று வெளியாகும் Infosys முடிவுகள்
 • இன்று வெளியாக இருக்கும் பணவீக்க விகித விவரங்கள்
 • குறைவான Volume
 • ஒன்றுக்கொன்று தொடர்புடைய காரணிகள் இவற்றை இனைத்துப் பார்த்தாலே இன்றைய சந்தை நிலவரங்களை ஓரளவிற்கு அனுமானித்து விட முடியும்…..ஆனால்

  ஒரு கட்டத்தில் நமது சந்தைகளை அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் வழிநடத்தினார்களென்றால் தற்போதைய சந்தைகளை ஆப்பரேட்டர்களே தீர்மானிக்கின்றனர் என்பதுதான் உண்மை. ஒரு உதாரணத்திற்கு க்டந்த இரண்டு தினங்களில் சந்தையின் கடைசி ஒரு மணி நேரத்தினை கவனித்தால் இது உங்களுக்கு புலனாகலாம்.

  வெறும் Nifty heavy weights எனப்படும் பங்குகளை வைத்து தங்கள் இஷ்டம் போல சந்தையை வளைக்கும் சாதுர்யத்தை பார்க்க முடியும். நேற்றைய சந்தையில் பெரும்பாலான பங்குகள் கீழ்முகமாய் இருந்த போதும் ரிலையன்ஸ் பங்கை மட்டுமே வைத்துக்கொண்டு(1 – 2.30 வரை) சந்தையை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்ததையும் கடைசி ஒரு மணி நேரத்தில் அதே பங்கினை வைத்து சந்தையை சரிய வைத்ததையும் எத்தனை பேர் கவனித்திருப்பீர்களென தெரியவில்லை.

  இன்றைய சந்தையை பொறுத்தவரையில் நேற்றைய போக்கே தொடர வாய்ப்புகள் இருக்கின்றன, நாளின் முற்பாதியில் சந்தை Nifty heavy weights உதவியுடன் தேசிய நிஃப்டி 4800 கள் வரை உயர வாய்ப்பிருப்பதாகவே நினைக்கிறேன். பணவீக்க விகிதம் ஏமாற்றமளிக்கும் பட்சத்தில் நாளின் பிற்பாதியில் 4675 வரை சரியவும் நிறைய வாய்ப்பிருக்கிறது. இந்த போக்கு தலைகீழாக மாறும் (முற்பாதியில் சரிந்து பின்னர் உயரும்)வாய்ப்புகள் மிகக்குறைந்த அளவில் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. எனவே முதல் அரை மணிநேரத்திற்கு நிதானித்து தினவர்த்தக முடிவினை எடுக்கவும்.

  தொடர்ந்து ஐந்தாவது நாளாக அமெரிக்க சந்தைகள் பக்கவாட்டில் தங்களை நிலை நிறுத்திக்கொண்டிருக்கின்றன. Dow ல் 12600 வலுவான Resistance level ஆக தொடர்கிறது. தற்போது துவங்கியிருக்கும் ஜப்பானிய சந்தைகள் மேல் முகமாய் இருக்கின்றன.பிற் ஆசிய சந்தைகளும் இதே போக்கினை தொடரும் பட்சத்தில் மேலே சொன்ன சாத்தியங்களுக்கு வாய்ப்பிருக்கிறது.

  இன்றைய சந்தையில்…

  தேசிய நிஃப்டி 4700 – 4920 க்கு இடையில் ஊடாடும்.

  மும்பை சென்செக்ஸ் 15300 – 16400 க்கு இடையில் ஊடாடும்.

  நீண்ட கால முதலீட்டு குறிப்புகள் இங்கே….


  விளம்பரம்

  Get $6.00 Welcome Survey After Free Registration!

  About these ads

  11 thoughts on “ஏப்ரல் 11, 2008

  1. sir,
   you are 100% correct about the connection -Reliance and yesterday’s market fluctuation
   natarajan

  2. Hi,
   Good work. Im regularly looking your site in the morning at 7:15 and it is very much refreshing me since the thinking are same for you and me.

   Thanks,
   Senthil Kumar G.

  3. iam new to ur site…i like ur technical analysis of market

  4. Sir,

   Please give me your views on infosys..is this the right time to buy?

  5. அன்பரே
   எப்பதான் NIFTY உயரும்
   S பஷீர்

  6. Hi,
   Good work. Im regularly looking your site

  7. SIR, nifty next week and in the settlement date up site 5000 and upsite or 4700 and down site where is going?

  8. Dear sir,

   Thanks for u r ideas

  9. Hi SaravanaKumar,

   I have posted the below queries in top10shares blog also

   I am satheesh from chennai. I have 2 questions for you.

   1. I am interested in learning TA. Can you suggest me some good books to know about TA? and where can i get in chennai?

   2. Right now i am using Geojit’s Platinum account which works like ‘brokers terminal’…. But the brokerage is high (.3% delivery and .03% on either side of trading)… is there any other brokerage which is offering less brokerage than geojit?… Do we have office for RK Global solutions in Chennai?

   eagerly waiting for ur response… Thanks u so much,

   Regards, Satheesh.

  10. “INIYA TAMIZH PUTHANDU VAZHTHUKKAL” to you and to all who visit your site. hope the new year “sarvadari” will bring all round happiness in trading

   natarajan

  11. Dear sir
   How the buy today sell tomorrow strategy works. is this advantageous than day trading

  Comments are closed.