இந்த வாரம் பல வகையில் முக்கியமானது. அடுத்த இரு வாரங்களுக்கு தொடர்ச்சியாக வெளிவர இருக்கும் ஆண்டிறுதி முடிவுகள் சந்தையின் போக்கில் கணிசமான மாறுதலை உண்டாக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. கடந்த நான்கு மாதங்களாய் சந்தையி தொடரும் இறுக்கம் தளர இந்த முடிவுகள் உதவுமென எதிர்பார்க்கலாம்.
வரும் வெள்ளியன்று சந்தை விடுமுறையாதலால் அடுத்த மூன்று நாட்களில் பெரிதாய் சந்தையில் மாறுதல்கள் வந்துவிடுமென எதிர்பார்க்க இயலாது. இன்று வெளியாகும் இன்ஃபோசிஸ் முடிவுகள் இன்றைய சந்தையின் துவக்கத்தினை நிர்ணயிக்கும். வெள்ளியன்று அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்ட சரிவுகள் நேற்றைய ஆசிய சந்தைகளில் பிரதிபலித்தது, விடுமுறையானதால் நமது சந்தைகள் தப்பின.
சந்தையின் Technical நிலவரங்களில் எவ்வித மாற்றமும் இல்லை….தேசிய நிஃப்டி 4940 நிலைகளை தாண்டாதவரையில் காளைகளுக்கு வாய்ப்பில்லை,5600 கடக்கும் பட்சத்தில் காளைகளின் ஆதிக்கம் உறுதி செய்யப்படும். கடந்த வாரத்தில் ஏற்பட்ட உயர்வுகள் பெரும்பாலும் ரிலையன்ஸ் பங்குகளை வைத்து ஆப்பரேட்டர்களால் உருவாக்கப்பட்ட தற்காலிக உயர்வென்பதையும் நினைவில் வையுங்கள். தற்போதைய நிலையில் ரிலையன்ஸ் பங்குகள் 2570 நிலைகளில் Selling pressure உருவாவதை தவிர்க்க இயலாது. இம்மாதிரியான கட்டங்களில் பிற Heavy weight (ONGC, INFOSYS)பங்குகள் உதவினால் தற்போதைய போக்கு தொடரும் இல்லையேல் பெரிய அளவில் Selling pressure உருவாவதை தரிவ்க்க இயலாது.
குறுகிய கால முதலீட்டாளர்கள் RPL, APTECH போன்றபங்குகளை கவனிக்கவும்.
அமெரிக்க சந்தைகள் பலவீனமாய் முடிவடைந்திருக்கின்றன.தற்போது துவங்கியிருகும் ஆசிய சந்தைகள் Flat ஆக இருக்கின்றன.
இன்றைய சந்தையில்
தேசிய நிஃப்டி 4720 – 4940 க்குள் ஊடாடும்
மும்பை சென்செக்ஸ் 15300 -16400 க்குள் ஊடாடும்.
தினவர்த்தக குறிப்புகள் இங்கே…
thanks for your info.
எழுதியவர் saamanyan Siva நாள் April 15, 2008
நேரம் 7:07 பிற்பகல்
thank you
எழுதியவர் SAMYUKTHA நாள் April 15, 2008
நேரம் 9:39 பிற்பகல்
market(operator) plays with us sir.
எழுதியவர் doss நாள் April 15, 2008
நேரம் 9:43 பிற்பகல்