ஏப்ரல் 21, 2008


 • FNO Expiry
 • CRR விகிதங்கள் அதிகரிக்கப் பட்டிருப்பது
 • குறைய துவங்கியிருக்கும் பணவீக்க விகிதம்
 • தொடரும் திருப்திகரமான ஆண்டிறுதி முடிவுகள்
 • நம்பிக்கையளிக்கும் அமெரிக்க சந்தைகள்
 • சாதகமான பருவமழை எதிர்பார்ப்புகள்
 • விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள்

மேற்சொன்ன காரணிகளே இந்த வார சந்தையினை வழிநடத்தும். எதிர்வரும் 29 ம் தேதிய கூட்டத்திற்கு பின்னர் அறிவிக்கப்படுமென எதிர்பார்த்த CRR உயர்வுகளை முன்னதாகவே அறிவித்தது ஆச்சர்யமே, உயர்வினை இரண்டு கட்டமாய் அமல் படுத்த முனைந்திருப்பது, 29ம் தேதி மேலதிக கட்டுப்பாடுகளை அறிவிக்கும் சாத்தியங்களை மத்திய ரிசர்வ் வங்கி முன் வைக்கிறது என்றே கருதுகிறேன்.

தொடர்ச்சியாக இரண்டாவது வாரமாய் நம்பிக்கையுடன் முடிவடைந்த சந்தைகளுக்கு இந்த அறிவிப்பு பின்னடைவினை ஏற்படுத்துமென்றாலும், பிற காரணிகளால் தற்போதைக்கு இதன் தாக்கம் குறைவாகவே உணரப்படும் என நினைக்கிறேன். வங்கித்துறை பங்குகளில் சலசலப்புகள் உருவாகலாம்.

FNO expiry ஐ முன்னிட்டு வாரத்தின் நெடுகில் சந்ந்தைகள் மேடுபள்ளங்களுடன் நிலையற்றதாய் தொடரும் வாய்ப்புகள் இருக்கின்றன. பொதுவில் சந்தையின் மேல்நோக்கிய பயணம் தடைபடுமென்றாலும், உயர்வுகள் தொடரவே வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாய் தேசிய நிஃப்டி 5030 களை தாண்டும் பட்சத்தில் அடுத்த இலக்குகளான 5370 – 5545 களை அடைவதில் பெரிதாய் சிரமம் இருக்காதென்றே நினைக்கிறேன்.

குறுகிய கால முதலீட்டாளர்கள் பின்வரும் பங்குகளை கவனிக்கவும்.

BRFL – GTL – ITC – PATNI – Penninland – MTNL

வெள்ளியன்று முடிவடைந்த அமெரிக்க சந்தைகளும் சரி, தற்போது துவங்கியிருக்கும் ஆசிய சந்தைகளும் காளைகளின் கட்டுப்பாட்டில் இருப்பது நமது சந்தைகளில் எதிரொலிக்கும். துவக்கத்தில் ஏற்படும் தற்காலிக பின்னடைவினை நாளின் நெடுகில் நமது சந்தைகள் சரி செய்துவிடும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் காரணமாய் இன்றைய நமது சந்தைகள் GAP DOWN ஆக துவங்கும் வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் மிக விரைவாக மீளும் வாய்ப்புகளும் இருக்கின்றன. சந்தையின் முதல் ஒரு மணி நேரத்திற்கு தினவர்த்தகர்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியிருக்கும். சிறிய தவறு கூட பெரிய இழப்புகளை உருவாக்கிடும் வாய்ப்பிருப்பதால் இதை சொல்கிறேன்.

இன்றைய நமது சந்தையில்….

தேசிய நிஃப்டி 4875 – 5130 க்கு இடையில் ஊடாடும்.

மும்பை சென்செக்ஸ் 16200 – 17070 க்கு இடையில் ஊடாடும்.

நாளின் முற்பகுதியில் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது….

About these ads

8 thoughts on “ஏப்ரல் 21, 2008

 1. Thank you

 2. Thank you for your real picture

 3. Thank for your market informations, its very use ful to me.

 4. Thank you very much

 5. nice thanks

 6. நன்றி…. சரவணக்குமார். முடிந்தால் கேப்பிடல் கெயின் tax சம்மந்தமாக எழுதவும்.

 7. இன்று மதியம் 3.00 மணியளவில் Reliance முடிவுகள் வெளியாகிறது. இதனையொட்டி இன்றைய சந்தைகள் நிலையற்றதாகவே இருக்கும். தினவர்த்தகர்கள் விலகியிருக்கவும்.

  குறுகிய கால முதலீட்டாளர்கள் நாளின் மத்தியில் விலை குறையும் போது HDIL பங்குகளை வாங்கலாம்.

 8. எங்கே ??? என் தேவதை

Comments are closed.