panguvaniham எழுதியவை | அக்டோபர் 6, 2008

அக்டோபர் 06, 2008

கொஞ்சம் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பதிவு…

மாறுதலுக்காய் தலைப்பு வைக்கப்போய் பதிவின் நிறம் மாறிவிட்டதைப் போன்றதொரு தோற்றம், புதிய வாசகர்களை மனதில் கொண்டு செய்ய்யப்படாவிட்டாலும் புதிய வாசகர்கள் பலர் இந்த பதிவிற்குள் வந்திருக்கின்றனர்.

இனி சந்தைகளை கவனிப்போம், சந்தையின் மோசமான வாரங்கள் என்கிற பட்டியலில் கடந்த வாரத்திற்கு நிச்சயமாய் ஓரிடம் உண்டு. அமெரிக்க அரசியல்வாதிகள் தங்கள் தேசத்தின் பொருளாதார சீர்குலைவினை முட்டுக்கொடுக்க எடுத்த முயற்சிகள் தந்த குழப்பம் சந்தையில் மேலதிக பீதியினை கிளப்பிவிட்டதுதான் மிச்சம். தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டம் கூட எந்த அளவுக்கு செயலாக்கம் பெருமென்பதில் நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன.

கடந்த மாதங்களில் சர்வதேச சந்தைகளின் வேகமான சரிவுகளோடு நமது சந்தைகளின் சரிவினை ஒப்பிடும்போது, நமது சந்தைகள் மெதுவாகவே செயல்பட்டிருப்பது தெரியும். இது இரண்டு வித ஊகங்களுக்கு வழிவகுக்கும். ஒன்று நமது சந்தைகளில் அடிப்படைகள் வலுவாய் இருப்பதாகவும், சர்வதே சந்தைகள் மீளும் போது நமது சந்தைகள் இன்னமும் விரைவாக மீட்சியடையும் வாய்ப்புகளை எதிர்நோக்கலாம். மற்றது, கூடிய விரைவில் நமது சந்தைகள் சர்வதேச சந்தைகளில் சரிவு விகிதத்தோடு வேகமாய் ஓடிப்போய் சேர்ந்து கொள்ளும் வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம்.

மேலே சொன்ன வாதம் சந்தைகள் குறித்தான ஒரு விழிப்புணர்வுக்காகவே தந்திருக்கிறேன். குழப்புவதற்காய் இல்லை. இனி கீழே இருக்கும் இரண்டு Chart கவனியுங்கள். முன்னது வாராந்திர Chart, பின்னது Daily Chart. இரண்டிலும் Head and Shoulder Patterns உருவாகியிருப்பது தெரியும். வாராந்திர சார்ட்டினை குறுகிய மற்றும் நீண்ட கால சந்தைகளின் தலையெழுத்தை கணிப்பதற்கு கொள்வோமாயின்; நமது சந்தைகளின் தற்போதைய பலவீனமும், எதிர்வர இருக்கும் ஆபத்தும் புலனாகும். பெரிய அளவிளான சரிவுகள் இன்னமும் மிச்சமிருப்பதை வாராந்திர Chart புலப்படுத்துகிறது. துல்லியத்துக்கு அருகாமையில் கணக்கிட்டோமானால் வரும் மாதங்களில் தேசிய நிஃப்டி 2300-2500 வரை சரியும் வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம்.

இரண்டாவது Daily Chart லும் Head and Shoulder pattern உருவாக்யிருப்பதை கவனியுங்கள். ஆனால் இதில் என்ன வித்தியாசமென்றால், இந்த Pattern முழுமையாக செயல்பட்டுவிட்டதாக்வே தோன்றுகிறது. அநேகமாய் அடுத்தவாரத்திலிருந்து சந்தைகள் மீள்வதற்கான வாய்ப்புகளை நிறையவே எதிர்பார்க்கிறேன். எனவே, நீண்ட கால முதலீட்டாளர்கள் சந்தையில் உள் நுழைய இது சரியான தருண்ம் இல்லை. குறுகிய கால முதலீட்டாளர்கள், இம்மாதிரியான ஒவ்வொரு உயர்வினையும் பயன் படுத்திக் கொள்ளவும்.

இந்த வார சந்தைகள் எப்படி…..?

கடந்த வாரத்தில் தேசிய நிஃப்டியின் கீழ் நிலையான 3715, இந்த வருடத்தின் கீழ் நிலையென்பதை நினைவில் வையுங்கள். இந்த நிலைகளே இந்த வாரத்தின் மிக முக்கியமான நிலைகளாயிருக்குமென எதிர்பார்க்கிறேன். இந்த நிலைகள் உடைபடாத வரையில் பெரிதான சரிவுகளுக்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். அதே வகையில் 3940 நிலைகள் வலுவான Resistance level ஆக இருக்கும். இந்த நிலைகளை சந்தைகள் எவ்வாறு கையாளுகின்றன எனபதை பொறுத்தே இந்த மாதத்தின் சந்தை நகர்வுகளை கணிக்க இயலும்.

ஒரு வேளை வருடத்தின் கீழ் நிலையான 3715 இன்றைய சந்தையில் உடைபடுமாயின், 3650 நிலைகள் இந்த வாரத்தின் கடைசி Support level ஆக இருக்கும். இதற்குக் கீழ் சந்தைகள் மளமளவென சரிவதை வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இன்றைய சந்தைகள் எப்படி…?

இன்றைய சந்தைகள் முழுக்க முழுக்க ஆசிய சந்தைகளின் அடியொற்றியே துவங்குமென எதிர்பார்க்கிறேன். கடந்த வாரயிறுதியில் வெளியான பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருப்பதும், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தள்ளிப்போனாலும் பெரிய அளவில் பின்னடைவுகள் ஏதுமிருக்காது போன்ற சாதகமான செய்திகள் நாளின் நெடுகில் சந்தைகளின் பின்னடைவினை தடுக்கும் காரணிகளாயிருக்கும். பொதுவில் காளைகளுக்கும் கரடிகளுக்குமான போராட்டம் மிகுந்த தினமாயிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இன்றைய சந்தையில் தேசிய நிஃப்டியில் பின் வரும் நிலைகளில் கவனமாயிருங்கள்.

3710 – 3798 – 3849 – 3863 -3940


மறுவினைகள்

  1. kaalai vanakkam sir.

  2. super sir heat shoulderpattern this is fist time. nan pargum thelivana pattern thanking u sir.

  3. Good Morning – Thank You sir

  4. நன்றி சார் ஆங்கிலத்தில் அரைகுறையாக புரிந்துகொண்டிருந்த எனக்கு தங்களின் தமிழ் பதிப்பு பெரிதும் உதவியாக உள்ளது.நன்றி நன்றி நன்றி

  5. Good Morning and thank you very much for your views sir. Markets will trade between 12500-14000 level for next few days. This is my prediction.

  6. Good Morning – Thank You sir

  7. THANK YOU SIR.

  8. Dear Saravanakumar,

    Your today’s article clearly explains the market’ mood.

    We are all expect little uptrend now. Let’s wait and watch…….

    Good Morning and Have a nice day,,,,,,,,

  9. //பொதுவில் காளைகளுக்கும் கரடிகளுக்குமான போராட்டம் மிகுந்த தினமாயிருக்கும் என எதிர்பார்க்கலாம்.//
    ம்றுபடியும் சுழல் !

  10. சார்ட் போட்டு அசத்திட்டிங்க சார்….

    இன்னும் அசத்துங்க……சூப்பர்………

  11. Thanks for your come back

  12. //துல்லியத்துக்கு அருகாமையில் கணக்கிட்டோமானால் வரும் மாதங்களில் தேசிய நிஃப்டி 2300-2500 வரை சரியும் வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம்//

    என்று கூறி இருப்பது என்னைப்போன்று சந்தையில் நீண்ட கால முதலீடு செய்து இருப்பவர்களுக்கு வயிற்றில் புளியை கறைக்கின்றது….

    பொறுமை காப்போம்…..

  13. //துல்லியத்துக்கு அருகாமையில் கணக்கிட்டோமானால் வரும் மாதங்களில் தேசிய நிஃப்டி 2300-2500 வரை சரியும் வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம்.//

    பட விளக்கம் மிகவும் அருமை. சரவணன் சார் நீங்கள் கொடுத்துள்ள கணிப்பு ஜீரணிக்க கஷ்டமாக இருந்தாலும், அதுவே உண்மை. கசப்பான உண்மை. அதற்கு இன்று காலையில் இருந்து நடந்த வணிகமே அருமையான உதாரணம். அடிப்படை ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது என்பது நிதர்சனமாகிவிட்டது.

    மிக நீண்ட இடைவெளிக்கு பின் நீங்கள் கொடுத்துள்ள நீண்ட பதிவு. புது பொலிவு.

    நன்றி சரவணன் சார்.

  14. hello sir

    pls continue ur valuble info

    regards
    senthil k

  15. Hi,

    I used to be a regular reader of your blog and lost track in between. You used to provide karuppu kuthirai and stock picks earlier. I do not see them coming in the recent posts. Should I look for that in any other link of yours, or you have stopped because trading is not a wise thing in current circumstances.

    Can you suggest stocks for investors with a long term horizon atleast 1-2 yrs, things to invest in.

    Best regards,
    Magesh

  16. தங்களின் தமிழ் பதிப்பு பெரிதும் உதவியாக உள்ளது.
    நன்றியுடன்
    முருகன்

  17. வரைபடதுடன் மிக அருமை தங்களின் தமிழ் பதிப்பு பெரிதும் உதவியாக உள்ளது.
    நன்றி

    கலா

  18. சார் வணக்கம் . மார்க்கெட் 9500 நிஃடி 2000 வரை வரலாம் என்பதெல்லாம் சரியா ? வாய்புல்லதா சார்

  19. thank u your come back

  20. ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா தான் !

    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

    மாறுதலுக்காய் தலைப்பு வைக்கப்போய் பதிவின் நிறம் மாறிவிட்டதைப் போன்றதொரு தோற்றம்

    dont care about others , We are in back of you.

    மாற்றம் என்பது மட்டுமே மாறாதது .

    what u like u can do.
    ONCE AGAIN WE ARE BACK OF U ..

    with regards
    etty
    ettyramasamy@yahoo.com

  21. what next sir/

    After 11800 ?

  22. sir ok. enough down,
    i know very well that much more downside is possible still and must, சார் நான் ஒரு நீண்ட கால முதலீட்டாளர், தங்களுடைய உதவி தற்போது எனக்கு தேவைப்படுகிறது, என்னவென்றால் தற்போதைய நிலைமையில் நாம் கண் வைத்திருக்க வேண்டிய கம்பெனி எவை என ஒரு லிஸ்ட் தரப்பட்டால் அதை பயன்படுத்திக்கொண்டு மார்கெட்டை கவனிக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். பணிவுடன் வேண்டுகிறேன் .

  23. sir…………………………….. =))


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்