panguvaniham எழுதியவை | ஜூலை 3, 2009

பதிவு எண் 800/ 03, ஜூலை 2009

நண்பர்களே….

இரண்டரை வருடங்கள், சற்றேறக்குறைய 980 நாட்கள்….800 வது பதிவு….

இத்தனையும் விளையாட்டாய் எதிர்பார்ப்புகள் இல்லாது துவங்கிய முயற்சியே….

அப்போது தமிழில் யாரும் செய்யாத ஒன்றை செய்வதாக உணர்ந்த பெருமிதம்…

இன்றைக்கு தமிழில் என்னை விடச் சிறப்பாய் பதிவிட பலர் வந்து விட்ட நிதர்சனத்தில் நானும் அவர்களுடன் ஓடிக்கொண்டிருக்கிற பெருமிதம்….

இடையிடையே தளர்ந்தாலும், ஓய்வெடுத்து எழுத ஆலோசனையும் கொடுத்து எனக்காய் காத்திருந்த, காத்திருக்கிற ஆயிரத்துக்கும் மேற்பட்ட நட்புகளை தக்கவைத்திருக்கும் பெருமிதம்…

இரண்டரை வருடத்தில் சிலருக்கேனும் இந்த தளம் பயனுள்ளதாயிருந்ததும், அவர்கள் தங்களின் வெற்றிகளை என்னோடு பகிர்ந்து கொண்டபோது உணர்ந்த  பெருமிதம்….

இப்படி நிறைவான உணர்வுகளோடு இந்த பதிவினை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

குறைகள் இல்லாமலில்லை, பட்டியலிட நிறையவே குறைகள் இருக்கின்றன.

எனது தொழில் ஒன்றில் பங்குதாரகளால் ஏமாற்றப்பட்டு சற்றேறக்குறைய இருபது லட்சத்திற்கும் மேல் கடன் என் தலையில் கட்டப்பட்ட போது,அதை அடைக்க போராடிய தருணத்தில் நான் தளர்ந்து போனதென்னவோ உண்மைதான். கவனக்குவிப்பு இல்லாது தினமும் பதிவெழுதுவது சாத்தியமில்லை என்பதால்தான் பதிவுகளை இடைநிறுத்த வேண்டி வந்தது. ஒரு கட்டத்தில் பங்குவணிகம் தளத்தினை வேறு யாரும் தொடர்ந்து நடத்த முன்வந்தால் அவர்களிடம் ஒபப்டைத்துவிடவும் தயாராக இருந்தேன்.

கட்டண சேவையொன்றினை ஆரம்பித்த நிலையில், எனது பிரச்சினைகளின் தீவிரத்தினால் சேவையினை தொடர்வதில் அர்த்தமில்லை என்பதால் அந்த முயற்சியினை ஒரே மாதத்தில் நிறுத்தியது பெரிய அளவில் பின்னடைவு, என்னை பெரிதாய் நம்பியிருந்தவர்களுக்கு உதவ முடியாது போன குற்ற உணர்ச்சி இன்னமுமிருக்கிறது.

பின்னூட்டங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்காத குறையுமிருக்கிறது. வரும் நாட்களில் இதை நிவர்த்திக்க முயற்சிக்கிறேன்.

இறுதியாக ஒன்று…

நண்பர்களே ! இத்தனையும் உங்களால் மட்டுமே சாத்தியமானது…

அத்தனை அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி என்கிற ஒற்றைச்சொல் சிறிய வார்த்தையாகவே இருக்கும்…என்னில் அதன் அர்த்தமும், ஆழமும் பெரிது.

நன்றி….

-சரவணக்குமார்.

 


இனி இன்றைய சந்தைகளை கவனிப்போம்…

வாரத்தின் கடைசி நாள்,மத்திய நிதி நிலை அறிக்கை வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது.

இன்றைக்கு மத்திய ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்ப்டுகிறது.

இந்த இரு நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே சந்தைகள் தெளிவான திசையொன்றினை எடுக்கும். தினவர்த்தகர்கள் இயன்றவரையில் இன்றைய சந்தையினை தவிர்த்துவிடுவது நல்லது.

தேசிய் நிஃப்டியில் 4283 மிக முக்கிய தாங்கு நிலையாக இருக்கும் இந்த நிலைகள் உடைபடும் பட்சத்தில் 4222 வரையில் சந்தைகள் கீழிறங்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. மேல் நிலையில் 4366 வலுவான தடை நிலையாக இருக்கும்.


மறுவினைகள்

  1. Hearty congrates & wishesssssss to my dear guru ji :) :) :)

  2. Hearty congrats & wishes to my dear Saravanan…. Keep it up your good and dedicated work….

    :) :) :)

  3. மீண்டும் ஒரு புது உணர்வுடன் மற்றும் முடிவுடன் பதிவை நீங்கள் எழுதியதாக கருதுகிறேன். சரோ சார் வருடங்கள் ஓடினால் வயது ஏறும் என்பது மனித வாழ்வுக்கே. பங்குவணிகத்தை பொறுத்தவரை, ஒவ்வொரு வருடமும் இளமையாகிக்கொண்டே வருகிறது.

    எத்தனை பதிவுகள் வந்தாலும், அனைத்திற்கும் ஆலமரம் எங்கள் பங்குவணிகம் தான் என்பதில் மற்றட்ட மகிழ்ச்சி.

    1000 is not so for…..

  4. Hearty Congrats for your hardwork..

  5. அன்புள்ள சரோ அண்ணா,
    8000 வது பதிவிற்கு advance என் வாழ்த்துக்கள் ,800 வது பதிவிற்கு என் வாழ்த்துக்கள்.எங்களின் நட்பை பெருமை படுத்தியமைக்கு மிக்க நன்றி .எங்களின் அன்பும் ,நட்பும் என்றும் தங்களை பின்தொடரும். என்றும் நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் ,வாழ்க பல்லாண்டு ,
    திருச்சிற்றம்பலம் ,,,,,,,,

  6. Hello Saro Sir,

    My Best Wishes for this dedicated work doing for us. I pray the god to give more happiness in your life as well as energy to continue this service. I would like to say Thanks to you and God for this selfless great service.

    My Hearty Congratulations again and again.

  7. வாழ்த்துக்கள் சார்
    எண்ணூறாவது பதிவை எட்டிய,நமது பங்குவணிகம் வலைப்பதிவு
    இன்னும் பல்லாயிரம் பதிவுகளை ,எட்டிட எங்களது வாழ்த்துக்கள்
    எத்தனை பதிவுகள்..எழுதிஉள்ளீர்கள்..என்பதைவிட,எத்தனை
    பேரின் வாழ்கையில்,ஒளி தீபம் ஏற்றயுள்ளது ,உங்களது இந்த வலை பதிவு
    என்பதை எண்ணும்போது….உங்களது தன்னலமற்ற, சேவையை
    எண்ணி உள்ளம் பூரிக்கிறது.
    ” நடுக்கடலில் துடுப்பு இல்லாமல் வழி தெரியாமல் தத்தளிக்கும் ,படகை போல,
    இந்த பங்கு சந்தையில்..சிக்கி தவித்த….எங்களுக்கு..ஒரு துடுப்பை ..போல வந்து
    எங்களுக்கெல்லாம் கலங்கரை விளக்கமாய் திகழ்ந்து ” …தங்களது
    பல நாள் தூக்கத்தை ….எங்களுக்காக…விட்டு…technical….மூலம்
    பங்குவர்த்தகம்…..செய்யலாம்…அதை எப்படி செய்யலாம்?
    என்று…நாங்கள் ஒவ்வொருவரும்..தனி தனியாகக் கேட்கும்
    சந்தேகங்களுக்கு…மிக பொறுமையாகப் பதிலளித்து…நாங்கள்
    இன்று, ஒவ்வொருவரும் தனி தனியாக வர்த்தகம் செய்யும் அளவிற்க்கு
    எங்கள் தகுதியை உயர்த்திய பெருமை தங்களுக்கே உரித்தானது.

    வாழ்க பல்லாண்டு! வளர்க உங்கள் மகத்தான தன்னலமற்ற சேவை!

    அன்புடன்,
    Ram(Raji)

  8. வாழ்த்துக்கள் அண்ணா

    எண்ணூறாவது பதிவை எட்டிய,நமது பங்குவணிகம் வலைப்பதிவு
    இன்னும் பல்லாயிரம் பதிவுகளை ,எட்டிட எங்களது வாழ்த்துக்கள்
    எத்தனை பதிவுகள்..எழுதிஉள்ளீர்கள்..என்பதைவிட,எத்தனை
    பேரின் வாழ்கையில்,ஒளி தீபம் ஏற்றயுள்ளது ,உங்களது இந்த வலை பதிவு
    என்பதை எண்ணும்போது….உங்களது தன்னலமற்ற, சேவையை
    எண்ணி உள்ளம் பூரிக்கிறது.
    ” நடுக்கடலில் துடுப்பு இல்லாமல் வழி தெரியாமல் தத்தளிக்கும் ,படகை போல,
    இந்த பங்கு சந்தையில்..சிக்கி தவித்த….எங்களுக்கு..ஒரு துடுப்பை ..போல வந்து
    எங்களுக்கெல்லாம் கலங்கரை விளக்கமாய் திகழ்ந்து ” …தங்களது
    பல நாள் தூக்கத்தை ….எங்களுக்காக…விட்டு…technical….மூலம்
    பங்குவர்த்தகம்…..செய்யலாம்…அதை எப்படி செய்யலாம்?
    என்று…நாங்கள் ஒவ்வொருவரும்..தனி தனியாகக் கேட்கும்
    சந்தேகங்களுக்கு…மிக பொறுமையாகப் பதிலளித்து…நாங்கள்
    இன்று, ஒவ்வொருவரும் தனி தனியாக வர்த்தகம் செய்யும் அளவிற்க்கு
    எங்கள் தகுதியை உயர்த்திய பெருமை தங்களுக்கே உரித்தானது.

    வாழ்க பல்லாண்டு! வளர்க உங்கள் மகத்தான தன்னலமற்ற சேவை!

    அன்புடனும் நன்றியுடனும் ,

    முருகன்

  9. Mr. Saraavanan Sir,

    First, My Hearty Congratulations to you. I would like to say Lot of Thanks to for this great service.

    Keep continue this dedicated service.

    thanks,
    BABU.

  10. தமிழில் அளப்பரிய சேவையினை அளித்து வரும் தங்களுக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம,
    இன்னும் நன்றாக வளர்ச்சி பெற வாழ்த்துகள்,
    என்றும் நட்புடன்,
    ஜி ஆர் சந்திரகுமார்……………..

  11. dear sir
    hearty congratulations for your writings insspite of ypur lo9ss.
    thanks for your advise for the day traders.
    k.natarajan

  12. Dear saro sir,

    VAZHALTHUKKAL………..

  13. CONGRATULATIONS

    SARAVANAN SIR.

    KEEP IT UP

  14. waw 800, வாழ்த்துகள், சேவை செய்வதில் கூட சாதனைகள், தமிழ் பங்கு உலகம் என்றும் உங்களை மனதை விட்டு நீங்கா மனிதராக பாவிக்கும்,

  15. Good morning Saravanan sir…
    Hearty congratulations for your writings…

  16. CONGRATULATIONS

    SARAVANAN SIR.

    KEEP IT UP

  17. Dear sir,

    nice to hear to know about the 800-th edition.

    Keep it up and we are expecting 10000+.

    We are always with you.

    Thanks.

    - Vimal

  18. வணக்கம் சார்,

    தாங்களின் 800வது பதிவிற்கு எனது இனிய வாழ்த்துக்கள்.

    தாங்களுடைய வளைத்தளம் சிலருக்குமட்டும் இல்லாமல் பலருக்கும் உபயோகமாகவே இருக்கிறது. தாங்கள் எவ்வளவு சோர்வடைந்தாலும் தாங்களின் வளைத்தள வாசகர்களை தாங்கள் சோர்வடையச் செய்ததில்லை. பிரதிபலன் எதிர்பார்க்காமல் தாங்கள் இந்த வளைத்தளத்தை தொடர்வது தாங்களின் பெருந்தன்மையை காட்டுகின்றது.

    தாங்களுடைய பங்குதாரர்களால் தாங்கள் ஏமாற்றப்பட்டாலும், தங்களால் அவர்கள் வாழ்க்கையில் நன்றாக இருந்தால் தாங்கள் சந்தோசப்பட வேண்டிய விசயம் தான்.

    தாங்களுடைய எல்லா பிரச்சினைகளில் இருந்தும் தாங்கள் விடுபட்டு வளமாய் வாழ இறைவனை மனதார பிரார்திக்கின்றேன்.

    நன்றி

  19. Dear Saravanakumar Sir,

    We are very happy to see your 800th article today. Hearty congrats and god gives you all the plessure and healthy life.

    You are guiding us very well for last two end half years. Reading your article in daily morning has become an unavoidable habit for all of us.

    Among your busy schedule, You write this article for all of us. This is really amazing job sir.

    Thanks a lot.

    Good Morning. Have a nice day.

    with Regards,
    S. Karthikeyan

  20. வணக்கம் குரு,
    இவ்வளவு நீண்ட சாதனையிலும் எளிமையை கடைபிடிப்பதை உங்களிடம் தொடர்ந்து கற்று வருகிறேன்.பகுத்தாய்வு பட்ட பட்டபடிப்புபோலும்னு நினைசுட்டு இருந்த எனக்கு
    கற்பித்து வழிநடத்தி செல்வது நீங்க தான் எப்பவும் ,,,,,,,விவேகமாகவும் வேகமாகவும்
    செயல்படுற கலையை கையாள்வதை உங்ககிட்ட இருந்து தான் கற்றுக்கொண்டு வருகிறேன்…இது போன்ற புகழ்ச்சி [உண்மைனாலும் ]உங்களுக்கு பிடிக்காதுன்னு தெரியும் .
    மேலும் நாளை பிறந்தநாள் கொண்டாடும் உங்களுக்கு அனைத்து பயன்களும் வாழ்வில் கிடைத்திட என்றும் இறைவனிடம் இறைஞ்சும் ,,,,,,,

    உங்கள் மாணவன்
    பாலா, கோவை

  21. வாழ்த்துகள் . உங்கள் பதிவை படித்தவுடன் நிறைய எழுத நினைத்தேன் , ஆனால் ஏன் என்று தெரியவில்லை எழுத முடியவில்லை .

    என்றும் நட்புடன் ,
    ராஜன் , சென்னை.

  22. Good morning sir…

    Hearty congratulations for your writings…

    எண்ணூறாவது பதிவை எட்டிய,நமது பங்குவணிகம் வலைப்பதிவு
    இன்னும் பல்லாயிரம் பதிவுகளை ,எட்டிட எங்களது வாழ்த்துக்கள்.இன்னும் நன்றாக வளர்ச்சி பெற வாழ்த்துகள்.

    அன்புடனும் நன்றியுடனும்…

    தாமஸ் ரூபன்.

  23. CONGRATULATIONS

    SARAVANAN SIR.

    KEEP IT UP

  24. சரவணக்குமார்,

    உங்களுக்கு நன்றிகள் ஆயிரம்….!!!

    அன்புடன்,
    வரன்

  25. தாங்களின் 800வது பதிவிற்கு எனது இனிய வாழ்த்துக்கள் அன்பும் ,நட்பும் என்றும் தங்களை பின்தொடரும். என்றும் நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்

  26. அன்பு சரவணக்குமார் அவர்களுக்கு

    தாங்கள் எழுத தொடங்கிய காலம் முதல் பங்குவணிகத்தினை படித்து வருகிறேன் ஒவ்வொரு பதிவினையும். பலனும் அடைந்திருக்கிறேன்.

    கடவுள் நல்லவர்களை சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார் கவலைகொள்ளாதீர்கள். கடவுள் அனுக்கிரகம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

    உங்கள் தொடர்சேவை தொடர வாழ்த்துக்கள்.

    நட்புடன்

    நாகு

  27. test

  28. தங்கள் பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
    மேலும் தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    நம் சரவணன் சாரின் பிறந்தநாள் வாழ்த்து பதிவு இந்த சுட்டியில் …

  29. தங்கள் 800 th பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
    மேலும் தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    நம் சரவணன் சாரின் பிறந்தநாள் வாழ்த்து பதிவு இந்த சுட்டியில் …

  30. CONGRATULATIONS Sir,

    KEEP IT UP !!!

  31. உங்களின் இத்தனை தடைகளையும் தாண்டி எங்களுக்கு உதவி செய்துகொண்டிருப்பதற்க்கு மிக்க நன்றி சரவனண் சார்… உங்களின் பிரச்சனைகள் அகலவும், உங்கள் அனைத்து பணிகளும் சேவைகளும் இனிதே தொடர வேண்டும் என நாங்கள் இறைவனை வேண்டுகிறோம்!

  32. Dear saro sir,

    VAZHALTHUKKAL………..

  33. இன்னும் பல்லாயிரம் பதிவுகளை ,எட்டிட எங்களது வாழ்த்துக்கள் :) :):)

  34. Congrates , Advance birth day wishes to u sir, All ur dream must cme true in forth coming years. i will pray to god to give u a health and wealthy life

  35. இன்னும் சில மணித்துளிகளில் பிறந்தநாள் கொண்டாடப்போகும் எங்கள் தலைவர், வருங்கால இந்தியாவின் எதிர்காலம், வியாபர காந்தம், சாந்த சொரூபி, எளிமையின் சிகரம், ஏலைப்பங்காலன், தனது குடும்பத்துடன் சேர்த்து எங்களை போல் உள்ளவர்களையும் கரைசேர்க்க, கட்டி இழுத்துக்கொண்டிருக்கும், எங்கள் அண்ணன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் எண்டு எல்லாம் வல்ல

  36. முருகப்பெருமானை பாதம் பணிந்து வேண்டுகிறேன்.

  37. எங்கள் குரு திரு .எம் .சரவண குமார் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!:)

    மேலும் எல்லா வளங்களும் பெற்று
    எவ்வித நோய் நொடியுமின்றி பல்லாண்டுகள் வாழவேண்டுமென உளமார வாழ்த்துகிறோம்!வணங்குகிறோம்:)

  38. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..by batcha

  39. தாங்களின் 800வது பதிவிற்கு எனது இனிய வாழ்த்துக்கள்.

  40. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

  41. அன்பு சரவணக்குமார் அவர்களுக்கு

    வாழ்த்துக்கள் சார்…..

    எங்கள் குரு திரு .எம் .சரவண குமார் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!:)

    எங்கள் குரு திரு .எம் .சரவண குமார் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!:)

  42. தாங்களின் 800வது பதிவிற்கு எனது இனிய வாழ்த்துக்கள்.

  43. Congratulations and All The Best…

  44. Congratulations and wish you all the best….

  45. hi sir u r great”””””””””””””””””””””””””””””


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்