இன்றைய சந்தைகள் இப்படித்தானிருக்கும், அல்லது வரும் நாட்களில் இன்ன மாதிரியான நகர்வுகள் இருக்கும் என்பது மாதிரியெல்லாம் இன்றைக்கு எழுதப்போவதில்லை.அதில் அர்த்தமும் இல்லை.மான்புமிகு மத்திய நிதியமைச்சர் தனது நிதிநிலை அறிக்கையின் கடைசி வாசகத்தினை வாசித்து முடிக்கும் வரையில் தின வர்த்தகர்களுக்கு சந்தையில் வேலையில்லை என்றே கருதுகிறேன்.
வழமைக்கு மாறாக இன்றைக்கு சில விரவங்களை உங்களின் பார்வைக்கு வைத்திடலாமென நினைக்கிறேன்.
தேசிய நிஃப்டி சனவரி 2008 ல் 4500களில் தரையிறங்கியிருந்ததும், அடுத்த பத்து மாதங்களில் 2300 நிலைகளுக்கு சரிந்ததும், அக்டோபர் 2008 முதல் மார்ச்2009ன் முதல் வாரம் வரையிலான காலகட்டத்தில் 2500 க்கும் 3000 த்திற்கும் இடையில் தத்தளித்ததையும் அறிவோம்.
மார்ச் மாதவாக்கில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புகள் வெளியான பின்னர் 2500 களில் இருந்து புறப்பட்டு தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாளான மே மாதம் 14ம் தேதிகளில் 3500 களில் மையம் கொண்டிருந்த சந்தைகள்…தேர்தல் முடிவு வெளியான பின்னர் தடைகளை உடைத்துப் பாயும் புது வெள்ளமெனெ 4700 கள் வரையில் உயர்ந்து கடந்த வெள்ளியன்று 4400 களில் முடிவடைந்திருக்கிறது.
மேலே சொன்னவைகள் அனைத்தும் நீங்கள் அறிந்த ஒன்றே…இதன் பின்னனியில் எனக்குள் எழும் சில கேள்விகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இதனை அலசும் வாய்ப்பினையும் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
- கடந்த ஆறு மாத காலகட்டத்தில் சர்வதேச சந்தைகள் நமது சந்தைகளுடன் ஒப்பிடுகையில் எவ்வாறு செயல்பட்டிருக்கின்றன?
- கடந்த ஆறு மாதங்களில் நமது பொருளாதாரம் உண்மையில் சீரடைந்திருக்கிறதா?
- நாட்டின் பணவீக்கம் முற்றிலுமாய் ஒழிந்து பணவாட்டம் வந்துவிட்ட நிலையில் விலைவாசிகள் கொஞ்சமாவது குறைந்திருக்கிறதா?
- மத்திய ரிசர்வ் வங்கி வட்டிவிகிதத்தினை குறைத்த பின்னரும் பெரும்பான்மையான வங்கிகள் ஏன் வட்டி விகிதத்தினை குறைக்க முன் வரவில்லை.?
- கடந்த ஆறுமாதங்களில் சந்தைகள் 100% க்கும் மேல் உயர்ந்திருக்கின்றன. இதற்கு இனையாகவோ அல்லது எதிர்பார்ப்புகளுக்கு மேலாக நமது நிறுவனங்களின் லாபத்தொகை அதிகரித்திருக்கிறது என கருதுகிறீர்களா?
- வேலையிழப்புகள், சம்பளக்குறைப்புகள் அதிகரித்து வருகிறதா அல்லது முற்றாக நிலமை சீரடைந்துவிட்டதா?
- பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு நமது பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தும்?
- தாமதமாகும் பருவமழையினால் உணவு உற்பத்தியில் ஏற்படும் பாதிப்புகள் எத்தகையதாக இருக்கும்?
- சந்தையின் தற்போதைய உயர்வுகள் அரசியல் நோக்கங்களுக்காக உயர்த்தப்பட்டிருக்கிது என நினைக்கிறீர்களா?
- அன்னிய நிறுவன முதலீடாளர்கள் நம்பகமானவர்களா? அல்லது சிறு முதலீட்டாள்ர்களை திட்டமிட்டு உறிஞ்சும் தந்திரக்காரர்களா?
- நமது சந்தைகளின் தற்போதைய உயர்வுகள் முற்றாக எதிர்பார்ப்புகளின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது, இது சீட்டுக் கட்டு கோபுரம் போன்றதென நினைக்கிறேன் …நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
- இந்த கேள்விகளுக்குப் பின்னால் உங்களுக்குத் தோன்றுவதென்ன….தற்போதைய உயர்வுகள் நம்பகமானவையா?
நண்பர்களே…
பங்குவணிகம் வலைத்தளத்தின் பரிட்சார்த்த முயற்சியாக உரையாடி ஒன்றினை இனைத்திருக்கிறேன். இந்த இனைப்பினை சொடுக்குவதன் மூலம் நீங்களும் அந்த அறையில் பங்கேற்கலாம். சந்தை நேரங்களின் எனது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் தளமாக இதை செயல்படுத்த எண்ணியிருக்கிறேன்.
வணக்கம் ,
இங்கு உள்ள கேள்விகள் அனைத்தும் எங்கள் அனைவர் மனதில் உள்ள கேள்விகளே, வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் இந்த மாயயை நம்ப யாரும் தயாராக இல்லை.
எழுதியவர் S.S.Arunkumar நாள் ஜூலை 6, 2009
நேரம் 12:53 மு.பகல்
wow.. chat room is backkkkkkkk !!!
எழுதியவர் krvijayganesh நாள் ஜூலை 6, 2009
நேரம் 8:05 மு.பகல்
GOOD MORNING SIR……..
எழுதியவர் GR CHANDHRAKUMAR நாள் ஜூலை 6, 2009
நேரம் 9:14 மு.பகல்
Good morning sir
thanks your’s chat room
எழுதியவர் Thomasruban-Bangalore நாள் ஜூலை 6, 2009
நேரம் 10:05 மு.பகல்
GOOD MORNING
எழுதியவர் முருகன் நாள் ஜூலை 6, 2009
நேரம் 11:07 மு.பகல்
pl add me at ur chat room
எழுதியவர் T.V. Rajendra babu நாள் ஜூலை 6, 2009
நேரம் 12:27 பிற்பகல்
உங்கள் கேள்விக்கு எங்களை போன்ற சாதாரனமாக உள்ளவர்களிடம் பதில் இல்லை என்பது மட்டும் உண்மை…
இது போன்ற கேள்விகள் எங்கள் மனதில் தோன்றினாலும்… எத்தனை கேள்விகள் அணைத்தும் சிந்திக்க தோன்றும் ஏழுச்சியான கேள்விகள்…
உண்மையை சொல்லப்போனல் இது போன்று கோர்வையாக சிந்திக்க எனக்கு தோன்றியதும் இல்லை…
பதில் உங்களை போன்ற பகுத்தறிந்தவர்களால் மட்டும்மே கூற முடியும் முடிந்தால் உங்கள் பதிலையும் பதிவு செய்யுங்கள் நாங்கள் தெரிந்து கொள்கின்றேம்… நன்றி சரவணன்….
எழுதியவர் Faizal நாள் ஜூலை 6, 2009
நேரம் 1:57 பிற்பகல்
dear sir , can you pls adv your yahoomessanger or mail id plsssssssss…………………
எழுதியவர் natarajan நாள் ஜூலை 6, 2009
நேரம் 5:32 பிற்பகல்
all these ups and downs are due to FIIs.
Govt. has to do something for small retail investors particularly indian small investors.
otherwise these people will lost their faith/interest in stock market. Then indian stock market will depend only on FIIs in future.
எழுதியவர் V.SURESH, SALEM 9842551176 நாள் ஜூலை 6, 2009
நேரம் 8:11 பிற்பகல்