நேற்றைய பதிவில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு சந்தைகள் உங்களுக்கு சரியான பதிலை தந்திருக்குமென நம்புகிறேன்.
”திருடனுக்கு தேள் கொட்டியது போல….”
இதுதான் நேற்றைய சந்தைகளின் நிலமை. மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் மத்திய நிதி நிலை அறிக்கையினை பாராட்டிக் கொண்டிருக்கும் சந்தை வல்லுனர்களுக்கும் இதுதான் நிலமை.
கடந்த சில நாட்களாய் ஊடகங்களின் வாயிலாக சந்தைகளுக்கு சாதகமாய் அறிவிப்புகளை தர மத்திய நிதியமைச்சகத்தின் மீது அளவிலா அழுத்தம் தரப்பட்டது. இது ஒரு வகையான ஊடக வன்முறை என்றே சொல்லலாம். ஆனால் எவ்வித நிர்பந்தங்களுக்கும் வளைந்து தராமல் இந்தியா என்பது பங்குச்சந்தைகள் மட்டுமே அல்ல என்பதை மத்திய நிதியமைச்சர் பொட்டில் அடித்தாற்போல உணர்த்தியிருக்கிறார்.
ஊரகப் பகுதிகள் வளராது நகரங்கள் மட்டுமே கொழித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்பதை புரிந்து கொண்ட அரசு இவற்றின் இடைவெளியினை குறைக்கும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கையினை தயாரித்திருக்கிறது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இது காலத்தின் கட்டாயம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இனி சந்தைகளுக்கு திரும்புவோம். எதிர்பார்ப்புகளின் மீதான சந்தைகள் இப்படி சீட்டுக்கட்டு கோபுரம் போல சரிவதை தவிர்க்க இயலாதுதான். எனினும் நுட்பங்களின் அடிப்படையில் சந்தைகளை அணுகினால் புலப்படும் விதயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
தேசிய நிஃப்டியினை பொறுத்தவரையில் 4141 என்கிற நிலை வலுவான தாங்கு நிலைகளில் ஒன்றாக இருந்து வந்தது. நேற்றைய சரிவில் இந்த நிலைகள் உடைபட்டாலும் நாளின் முடிவில் இந்த நிலைகளுக்கு மேல் முடிவடைந்திருப்பதை கவனிக்கவும்.
தற்போதைய நிலையில் மீதமிருக்கும் ஒரேயொரு தாங்கு நிலை 4093 ஆகும். இந்த நிலைகள் உடைபடுமாயின் ஒரு பெரிய Head and Shoulder Pattern செயல்படத்துவங்கி சந்தைகள் 3700 கள் வரையில் சரியும் அபாயமிருப்பதை புரிந்து கொள்ளுங்கள். என்வரையில் சந்தையின் உண்மையான நிலை, இந்த நிலைகளில் இருப்பதாகவே கருதுகிறேன்.
எனினும் தற்போதைய சூழலில் தேசிய நிஃப்டியில் 4093 நிலைகள் உடைபடாதவரையில் சந்தையின் மேல் நோக்கிய நகர்வுகளுக்கு பாதிப்பிருக்காதென்றே தோன்றுகிறது. புதிய நிலையெடுக்க நினைப்பவர்கள் தேசிய நிஃப்டியில் 4141 நிலைகளை Stoploss ஆக கொண்டு களத்தில் இறங்கலாம்.
நாளின் துவக்கத்தில் கடைசி தாங்கு நிலையான 4093 உடைபடும் பட்சத்தில் தினவர்த்தகர்கள் ஆகக்கூடிய கவனத்துடன் வர்த்தகம் செய்ய வேண்டியதிருக்கும்.
அரசியல் மற்றும் பட்ஜெட் மாயைகள் உடைந்துவிட்ட நிலையில் இனி வரும் நாட்களில் நமது சந்தைகள் சர்வதேச சந்தைகளோடு இனைந்து செல்லத் துவங்குமென எதிர்பார்க்கிறேன்.
வரும் நாட்களில் இனி Commodities பற்றிய எனது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.
“வரும் நாட்களில் இனி Commodities பற்றிய எனது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.”
Anivarum kathirukkirom.
Raji
எழுதியவர் raji நாள் ஜூலை 7, 2009
நேரம் 12:11 மு.பகல்
இனிய காலை வணக்கம்
//“வரும் நாட்களில் இனி Commodities பற்றிய எனது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.”//
அனைவரும் காத்திருக்கிறோம்.
நன்றி.
எழுதியவர் முருகன் நாள் ஜூலை 7, 2009
நேரம் 12:18 மு.பகல்
வரும் நாட்களில் இனி Commodities பற்றிய எனது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.”
நன்றி.
எழுதியவர் Senthil Kumar நாள் ஜூலை 7, 2009
நேரம் 12:31 மு.பகல்
Hello sir,
”திருடனுக்கு தேள் கொட்டியது போல….”
exact phrase to match the day sir.. these media ppl fully responsible for this. They have created over expectation with this budget.
FM also said, i got a request… i got a request from.. like. But to i am sure, the fall that happened today is just a trial.
You have mentioned this yesterday, in your previous article. That was excellent and hope some of our ppl will be prevented from a possible blood bath.
எழுதியவர் marketcallz நாள் ஜூலை 7, 2009
நேரம் 12:54 மு.பகல்
Good morning Saravanan sir…
எழுதியவர் kumar நாள் ஜூலை 7, 2009
நேரம் 8:09 மு.பகல்
இந்தியா என்பது பங்குச்சந்தைகள் மட்டுமே அலல
இனிய காலை வணக்கம்………
எழுதியவர் GR CHANDHRAKUMAR நாள் ஜூலை 7, 2009
நேரம் 9:02 மு.பகல்
Good morning and thank you very much for your views sir.
எழுதியவர் V.SURESH, SALEM 9842551176 நாள் ஜூலை 7, 2009
நேரம் 9:06 மு.பகல்
NO ONE IS RESPONSE FOR MARKET FALL, EVERY RETAIL INDIVIDUAL INVESTORS /TRADERS SHOULD EXIT ON FRIDAY. GREED PEOPLE SUFFERED LOT YESTERDAY. AT THE SAME TIME WHO ARE IN SHORT POSITION MARKET GAVE HUGE PROFIT.
OVERVIEW BUDGET WAS NOT SO BAD AS MARKET REACT . EXCEPT RECOVERY SOON.
எழுதியவர் RAJAN நாள் ஜூலை 7, 2009
நேரம் 9:15 மு.பகல்
Good morning sir
எழுதியவர் ThomasRuban-Bangalore நாள் ஜூலை 7, 2009
நேரம் 9:16 மு.பகல்
Dear Sir,
Your article is simply superb. and the nifty level of 4141 is very helpful to decide the trend.
Thank you very much for your views.
Good Morning. Have a nice day.
எழுதியவர் S. Karthi, Karur நாள் ஜூலை 7, 2009
நேரம் 9:39 மு.பகல்
//வரும் நாட்களில் இனி Commodities பற்றிய எனது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.//
நன்றி! நன்றி! நன்றி!
மங்களகரமாக தங்கத்திலிருந்து ஆரம்பிக்கலாமா?
எழுதியவர் தமிழ் அமுதன் நாள் ஜூலை 7, 2009
நேரம் 11:34 மு.பகல்