panguvaniham எழுதியவை | ஜூலை 8, 2009

08, ஜூலை 2009

இன்றைய சந்தைகளை குறித்து பெரிதாய் அலசிட ஏதுமில்லை என்றே நினைக்கிறேன். சந்தையின் பலவீனம் தொடர்கிறது. தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக முக்கியமான தாங்கு நிலைக்கு மேல் சந்தைகள் முடிவடைந்திருந்தாலும் சந்தைகள் பெரிய அளவில் சரியும் வாய்ப்புகளை இன்னமும் தக்க வைத்திருக்கிறது என்றே கருதுகிறேன்.

தேசிய நிஃப்டியில் 4093 நிலைகளுக்கு கீழ் இன்றைய சந்தைகள் முடிவடையுமானால் எதிர்பார்க்கும் பெரிய சரிவுகள் துவங்கும். இன்றைய சந்தையின் துவக்கத்தினை ஆசிய சந்தைகளே நிர்ணயிக்கும். பெரும்பாலான ஆசிய சந்தைகள் பின்னடையும் நிலையில் இருப்பது காளைகளுக்கு பாதகமான செய்தி.

ரிலையன்ஸ் பங்குகள் சந்தைகளை காப்பாற்றுமென எதிர்பார்க்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம். இன்றைக்கும் சந்தைகள் 4093 நிலைகளை தக்கவைக்கும் பட்சத்தில் வரும் நாட்களில் அதிவேகமான மீட்சியினை எதிர்பார்க்கலாம்.

தேசிய நிஃப்டியில் பின்வரும் நிலைகளில் கவனமாயிருஙகள்.

4092, 4141, 4173, 4194, 4225, 4253

திரு.விஜய்கனேஷ் அவர்கள் Andrew’s pitchfork பற்றி ஒரு ப்திவினை எழுதியிருக்கிறார். அதனை இந்த இனைப்பில்  காணலாம். தமிழில் இம்மாதிரியான எழுத்துக்கள் ஊக்குவிக்கப் படுதல் அவசியம்.


மறுவினைகள்

  1. Good morning Saravanan sir…

  2. Dear Saravanakumar Sir,

    Thank you very much for your views. Nifty levels are simply superb and rocking.

    Good Morning. Have a nice day.

  3. GOOD MORNING SIR……


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்