panguvaniham எழுதியவை | செப்டம்பர் 9, 2009

கட்டண சேவையில் கலக்கும் தமிழர்கள்….

சமீப நாட்களில் இந்த பதிவின் பின்னூட்டங்களிலும் சரி, தனி மின்னஞ்சலில் வரும் கோரிக்கைகள் சந்தை வர்த்தகம் குறித்தான உதவி மற்றும் ஆலோசனைகளை பற்றியதாக  இருப்பதால் இந்த பதிவின் மூல சில விதயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பங்கு வர்த்தகத்தில் மற்றவர்களுக்கு தமிழர்களும் சளைத்தவர்கள் இல்லையென்கிற மாதிரி தமிழகத்தில் நிறைய வல்லுனர்கள் இருக்கின்றனர். அதில் பலரும் இனையம் மூலமாய் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கட்டணச்சேவைகளையும் அளித்து வருகின்றனர். இனையத்தில் நான் பார்த்தவரையில் சிறப்பாய் செயல்பட்டுவரும் சில வல்லுனர்களையும் அவர்களின் சேவைகளையும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புக்றேன்.

திரு.ரமேஷ்ராஜா

இவரைப் பற்றி சொல்வது….சூரியனுக்கு முகவரி சொல்வதைப் போல….இந்தியாவின் மிகச்சிறந்த வல்லுனர்களில் ஒருவர். உலகத்தரம் வாய்ந்த வல்லுனர் என்று சொன்னாலும் மிகையில்லை. தனிப்பட்ட முறையில் இவருடன் எனக்கு தொடர்பில்லையென்றாலும், எனது மரியாதைக்குறிய மானசீக குருமார்களில் இவரும் ஒருவர். தனது இனைய தளத்தின் மூலமாய் தினவர்த்தக சேவையினை அளித்து வருகிறார். பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு இவரது தளம் ஒரு வரபிரசாதம்.

http://www.greatcalls.in/

திரு. வீரப்பன்

சந்தையில் இருபது ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் உள்ளவர். இவருடன் தொலைபேசியிருக்கிறேன்., இனியவர்…மனதில் பட்டதை ஒளிவுமறைவின்றி பேசும் வெள்ளை மனசுக்காரர்.  சந்தை குறித்த இவரின் அனுமானங்கள் தடாலடியாக இருந்தாலும் அவற்றில் நிறையவே உண்மையிருக்கும். மிகவும் வெற்றிகரமான வர்த்தகர். ichart  போன்ற தளங்களில் இவர் பெயர் நிரம்ப பிரசித்தம். தற்போது எங்களுக்குள் தொடர்பில்லாவிட்டாலும் நல்லெண்ணங்களை தக்க வைத்திருக்கிறோம்.

http://www.livecalls.in/

திரு. சாய்கனேஷ்

காரைக்குடியை இருப்பிடமாய் கொண்டவர். நான் பார்த்த வகையில்அருமையான Option Trader. கடந்த இரண்டு ஆண்டுகளாய் இவரின் தினசரி பதிவுகள் பிரசித்தம். ஏறத்தாழ மூன்று லட்சம் பார்வையிடல்களை கண்ட மிகச்சில தமிழ் வலைப்பதிவுகளில் இவரது பதிவும் ஒன்று. அதேவகையில் கடந்த காலங்களில் இவரது  குறுகிய மற்றும் நீண்ட கால  தெரிவுகள் நல்ல லாபங்களை கொடுத்திருப்பது இவரின் திறமையை பறை சாற்றும்.

http://top10shares.wordpress.com/

திரு. ரவிக்குமார்

சேலம் மாவட்டம் ஆத்தூரை இருப்பிடமாய் கொண்டவர். வழக்குரைஞர், முழு நேர வர்த்தகர் மற்றும் ஆலோசகர். சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் அநேக முதலீட்டாளர்கள் இவரின் வாடிக்கையாளர்கள். FNO வர்த்தகத்தில் இவரின் அனுமானங்கள் சிறப்பாய் அமைந்திருக்கிறது. எல்லாவகையான வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான சேவையினை இவரது  நிறுவனம் வழங்கி வருகிறது.

http://jumpingoption.blogspot.com/

திரு.  சரவணபாலாஜி

மயிலாடுதுறையினை இருப்பிடமாய் கொண்டவர். மிகவும் தேர்ந்த நுட்ப ஆய்வாளர் (Technical Analyst). இவரது நிறுவனம் தஞ்சை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பிரசித்தமான ஒன்று. எல்லா தரப்பு வாடிக்கையாளர்களையும் கையாள்வது இவரின் சிறப்பு. பல இனைய தளங்களில் தொடர்ச்சியாக  நுட்ப ஆய்வுகளை பற்றிய கட்டுரைகளை எழுதி வருபவர். நுட்ப ஆய்வு கற்க விரும்புவோருக்கு தனியான பயிற்சியும் அளிக்கிறார். தமிழில் பங்கு வர்த்தகம் குறித்த இவரின் தினசரி பதிவு இன்னமும் அநேகருக்கு சென்றடையவில்லை. இவரின் தொலைபேசி எண் இவரது பதிவில் காணக்கிடைக்கும்….பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

http://mayashare.blogspot.com/

திரு. அருண்

திருப்பூரை இருப்பிடமாய் கொண்டவர். இவரை அடையாளம் காட்டுவதில் எனக்கு தனிப்பட்ட முறையில் நிறையவே பெருமை உண்டு. இவரின் வளர்ச்சியில் எனக்கும் துளி பங்குண்டு என்கிற மகிழ்ச்சியுடன் இவரைப் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  இளையவர்….வரும் நாட்களில் தேர்ந்த நுட்ப ஆய்வாளராய் மிளிரும் தகுதியினை தன்னுள் கொண்டுடிருக்கிறார். ஆப்ஷன் வர்த்தகத்தில் இவரது கவனம் பொதிந்திருக்கிறது.

http://marketcallz.blogspot.com/

இவர்களை தவிர்த்து இன்னமும் பலர் இருக்கிறார்கள்….நான் அறிந்தவகையில் உள்ளவர்களை பற்றி மட்டுமெ இங்கே பகிர்ந்திருக்கிறேன். தகவல் தேவைப்படுவோர் மேலே சொன்னவர்களின் இனைய தளத்தில் இருந்து விவரங்களை பெறலாம். இந்த பதிவின் பின்னனியில் எவ்வித வர்த்தக நோக்கமும் இல்லை, தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியே….


மறுவினைகள்

  1. It is a great work which will be useful for intradaytraders/investors like me.

    your service is excellent.

    keep it up.

  2. Mikka Nandri

  3. i need to tell one thing all are money minded but you are not so i respect uuuuuuuuuu saravanan sir keep help us god helps uuuuuuuuu and i ask all traders to follow their own way because i think most of the site publised by saravanan sir are operators
    so be careful our market in correction mode up to 4700 (THE IMPORTANT MATTER IS NO ONE CAN MAKE MONEY FOR ANY THINK) SO BE CARE FULL PEOPLE OF INDIA I LOST LAKHS OF MONEY BY WATHING SUCH A BLOODY SITES but in my experience one guy who never expect money is great saravanan sir that is truth
    but some time his view may wrong thats all in the part of game
    so please try to study the technical of market that is the one helps u why am telling this means i lost seven lakhs with the help of such great sites
    and any one need to comment on this well wishes post comment i give u the answer
    thank u
    saravanan sir this is just my view now indian market is in my hand

  4. நல்ல அறிமுகப் பதிவு….இதை எத்தன பேர் படிசாங்கன்னு தெரியலையே… பின்னூட்டம் கம்மியா இருக்கே?…ஹ்ம்ம்ம்ம்… பின்னூட்டம் போட்டாதானே..படிச்சு பயனைடைஞ்சாங்களான்னு தெரியும்…அது தானே இந்த பதிவின் நோக்கம்…

  5. mangai madam i try to save Innocent traders because lot of people never trade in their own mind so they lost money, losing money is not a matter why they lose because they never have faith on them they just follow other tips that is what am UN happy because Indian money are taken my fii investors easily because indian people dont have steady mind that is because of lack of knowledge in this share market in my experience i tell one think any one can sucess when he obey his own mind

  6. Hello saro sir,

    It’s my pleasure to have my blog name in your article.. I am proud to say I am one of your student…

    More over i am not that much worthy to be in the list of senior members and i am not doing any paid service and all.. It’s just like sharing my personal trade sir…

    Thank you once again..

  7. Excellent help Saro Sir. Thanks for this.

  8. மிக்க நன்றி நண்பர் திரு சரவணக்குமார் அவர்களுக்கு

  9. எல்லோருக்கும் பயனுள்ளது….

  10. will you tell me who is best online trader interms site spped ,online tips,low brokerage and prompt service ?Among online trader like Sharhkan, Geojit,DBS Chloa,India infoline,Religare. etc Who is best online trader in all terms ? Or if you know anyother brokerage can you tell me ? I am new and plan to open online trading account ?.

  11. Dear Saravanakumar Sir,

    No one come forward to give the details like this. You are very amazing and we are very happy to read your blog.

    Above details are very useful for all of us.

    Thank you very much Sir. Good Morning. Have a smiling day.

  12. Thanks sir..

  13. Dear Saro sir,

    In the competitive world, no one want to mention others name & other details in their blog. you are only one to mention that details and helping others without any profit for you.

    That’s saravanan sir.

    Thanks.

  14. என்னுடைய மானசீக குருவே உங்களுக்கு நன்றிகள் கோடி. நான் உங்களிடம் டெக்னிக்கல் வகுப்புகள் எடுப்பது பற்றி பின்னுட்டம் அளித்திருந்தேன். மாறாக நீங்கள் நான் கேட்ட சிறுதுளிக்கு பெறுவெள்ளமாக மேற்கண்டோின் முகவாிகளை தந்துள்ளீர்கள்.

    என்றும் உங்களின் மாணவன்,
    வேலு

  15. Good Morning……… Sir.

    Its a purely helping mind works

    Thanks

    Manoj.R

  16. Thanks for your service

  17. அண்ணே நான் கம்பனிக்கு ரெம்ப புதுசு. கணக்க ஆரம்பிச்சிட்டு கன்னத்துல கைய வச்சு உக்காந்து இருக்கேன். என்ன பண்றதுன்னு நீங்க தான் ஒரு வழிய காமிக்கணும். என் மெயில் முகவரி karthik.designer@gmail.com

  18. vbs reliance money is the only broker charging low brokerage use it and enjoy

  19. மதிப்பிற்குரிய குரு திரு.சரவணன் சார்,
    அவர்களுக்கு வணக்கம்.
    சகோதரர் விமல் கூறியதை போல,போட்டி மிகுந்த
    இந்த உலகில் மற்றவர்களின் முகவரிகளை கொடுத்து,
    அதன் மூலம் எங்களை போன்ற வர்த்தகர்களும்,
    பயன்பெற செய்த தங்களது தன்னலமற்ற சேவையை
    புகழ எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.

    நீங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை
    பிரார்த்திக்கிறேன்.
    //நல்ல அறிமுகப் பதிவு….இதை எத்தன
    பேர் படிசாங்கன்னு தெரியலையே… பின்னூட்டம் கம்மியா இருக்கே?…ஹ்ம்ம்ம்ம்… பின்னூட்டம் போட்டாதானே..படிச்சு பயனைடைஞ்சாங்களான்னு தெரியும்…அது தானே இந்த பதிவின் நோக்கம்…//
    தோழி மங்கை அவர்களே,
    நிச்சயம் இந்த பதிவின் நோக்கம் நிறைவேறும்.

  20. அப்படி அப்படி போடு அப்படி அப்படி போடு தன்னால….
    மனசு உடுத்தின கவலை துணி எதற்கு இனி அவிழ்த்து எறி….
    மனசை இரும்பாக்கனும் மலையை துரும்பாக்கனும்… …எதிலும் பொதுவே சங்கதி ….
    ஏதுமில்லாதது நிம்மதி …..புரியவில்லையா என்னை என்ன பண்ண சொல்லுறீக நமக்கு இப்படித்தானையா பேச வருது…

    வீரப்பன்
    சென்னை.

  21. உடல் நல குறைவினால் பதிவினை மேம்படுத்த இயலவில்லை….திங்கட்கிழமை முதல் வழமைபோல பதிவினை தொடர முயற்சிக்கிறேன்.

    சிரமத்திற்கு வருந்துகிறேன்….

    -சரவணக்குமார்.

  22. Saravanan sir,

    Take care.

    Good morning to everybody and wish you all successful trading.

  23. This proves your helping tendency and affection with Tamil people. It is beyond comparable.

    Take care of your health and continue to contribute to us.

    Thanks a lot for your unselfishness post.

  24. Thanks sir..

  25. Thanks sir…

  26. Dear Saravanakumar Sir,

    Please take care of yourself and take medicines well.

    Have a peaceful day.

    Good Morning. Have a nice day.

  27. விரைவில் நலம் பெற வாழ்த்துகிறோம்……

  28. saro sir lot of indian people always jalrors

  29. people dont jalra

    • வாடா ஜால்ரா, வஞ்சிஸ்வரா,

      நீ எல்லாம் விலங்கமட்டேய்…….ஏண்டா நல்ல விசயம் உனக்கு பிடிக்காதா……

  30. [...] மிக்க நன்றி – பங்குவணிகம் [...]

  31. மிக்க நன்றி.

    அலங்காரம் செய்யலாம்

    http://alangaram.wordpress.com

  32. thankyou sir your information is very useful

  33. Wonderful information ,
    Thank you sir !!!

  34. It is a wonderful blog. Not only in providing stock market info but also your classic writing style in Tamil is great.
    Continue the good work.

    http://www.jobathome.in

  35. [...] ‘கட்டண சேவையில் கலக்கும் தமிழர்கள்‘ என்கிற பதிவில் திருப்பூரைச் [...]

  36. Hi,
    Friends,

    visit this site

    http://bullmarketindia.wordpress.com/


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்