வாராந்திர நிலைகளைப் பொறுத்த வரையில் தேசிய நிஃப்டியில் மேல் நிலையில் 4931 வலுவான தடை நிலையாக இருக்கும். கீழ் நிலையில் 4607 வலுவான தாங்கு நிலையாக இருக்கும். இந்த இரு நிலைகளில் எது உடைபட்டாலும் அந்த திசையில் சந்தையின் வேகம் அதிகரிக்கும். பயன்படுத்திக் கொள்ளுங்கள்….
மேலேயிருக்கும் பத்தி கடந்த திங்களன்றைய பதிவில் இந்த வார நிலவரம் தொடர்பானது. ஆக, வாராந்திர தடை நிலையான 4931 க்கு மேல் சந்தைகள் முடிவடைந்திருப்பது, காளைகளின் நம்பிக்கையினை தக்க வைத்திருக்கிறது. இந்த நிலைகள் உடைபடாத வரையில் காளைகள் பெரிதாய் கவலைப்பட ஏதுமில்லை என்றே கருதுகிறேன்.
இன்றைய சந்தைகளை பொறுத்த வரையில் தேசிய நிஃப்டியில் 5033 முக்கியமான் தடை நிலையாக இருக்கும். சந்தையின் துவக்கத்தில் இந்த நிலையினை சந்தைகள் எவ்வாறு கையாளுகின்றன என்பதை பொறுத்தே சந்தையின் போக்குகள் அமையும்.
கீழ் நிலையில் 4966 வலுவான தாங்கு நிலையாக இருக்கும். நாளின் நெடுகில் சந்தைகள் இந்த நிலைகளுக்கு கீழ் நழுவும் பட்சத்தில் வலுவான Selling pressure ஒன்று உருவாகும் வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன்.
நாளின் துவக்கம் பிற ஆசிய சந்தைகளை ஒட்டியே அமையும்…
நாளின் நெடுகில் பின் வரும் நிலைகளில் கவனமாயிருங்கள்..
4882 – 4903 – 4966 – 4985 – 5033 – 5062 – 5111
நண்பர்களே !
நேற்றைய பதிவு, எனது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொள்ளும் ஒரு பதிவாக அமைக்க விரும்பியதன் விளைவாகவே வர்த்தக குறிப்புகள் எதனையும் பதியவில்லை. திரு.கார்த்திக் என்பவர் முக்கியமான தினங்களில் நான் கருத்துச் சொல்லாமல் நழுவி விடுவதாகவும், பின்னூட்டமிடும் மற்றவர்களை ”ஜால்ரா” என ஏளனம் செய்து கடந்த இரு தினங்களாய் பின்னூட்டம் மூலம் கருத்திட்டு வருகிறார்.
நண்பரே !
நழுவும் எண்ணமோ, அல்லது எனது திறமை மீது நம்பிக்கையோ இல்லாதிருப்பின் இத்தனை நாட்கள் இந்த பதிவுகளை எழுதியிருக்க முடியாது. இருப்பினும் தாங்கள் நினைக்கும் அளவிற்கு நான் பெரிய நுட்ப ஆய்வாளனோ வர்த்தகனோ இல்லை….சந்தையில் மிக சாமான்ய பார்வையாளன் மட்டுமே.
கடந்த மூன்றாண்டுகளில் சந்தையின் வர்த்தக தினங்களை விட நான் எழுதிய பதிவுகளின் எண்ணிக்கை அதிகம். இதுவே நான் எழுதியிருக்கிறேனா அல்லது நழுவியிருக்கிறேனா என்பதை தங்களுக்கு உணர்த்தும்.
இது போக…..
எனது தனிப்பட்ட வர்த்தக குறிப்புகளை தமிழில் பொதிந்து வைக்கும் தளம் இது என்பதால் இங்கே எந்த விதமான வாத விவாதம் நடத்துவது இந்த பதிவின் வேலையோ, நோக்கமோ இல்லை…எனக்கு அதற்கான நேரமும் இல்லை.
தங்களுக்கு எனது பதிவுகள் திருப்தி அளிக்காத பட்சத்தில் சந்தை குறித்து ஆங்கிலத்தில் அநேக தளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு பின்னூட்டம் கூட தமிழில் எழுதும் வகை அறியாத உங்களை போன்றவர்களுக்கு அங்கே நிறையவே இடமிருக்கிறது.
என்னுரையில் குறிப்பிட்டிருப்பதைப் போல இந்த பதிவுகள்….”ஒரு சாமானியனின் பார்வையில் ஒரு சாமானியனுக்காக மட்டுமே….”
எனவே வரும் நாட்களில் உங்களின் பொன்னான நேரத்தினை இம்மாதிரியான சாமானியர்களின் பதிவுகளில் வீணடிக்க வேண்டாமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
-சரவணக்குமார்.
Good Morning sir and thank you very much for your market levels sir.
எழுதியவர் v.suresh salem 984255117 நாள் நவம்பர் 12, 2009
நேரம் 4:59 மு.பகல்
GOOD MORNING SIR……..
எழுதியவர் GR CHANDHRAKUMAR நாள் நவம்பர் 12, 2009
நேரம் 7:39 மு.பகல்
yes ,u right sir . indeed a web page in tamil for analysing market is very much essential for a new entrants like me and also mother tongue plays a vital role in easy understanding and executing .
As i am writing this because , i everyday analyse many of the other web pages related to the market.
regards,
dhanuyaar
எழுதியவர் dhanuyaar நாள் நவம்பர் 12, 2009
நேரம் 7:42 மு.பகல்
yes ,u right sir
எழுதியவர் gkm நாள் நவம்பர் 12, 2009
நேரம் 8:02 மு.பகல்
yes ,u right sir
இந்த பதிவுகள்….”ஒரு சாமானியனின் பார்வையில் ஒரு சாமானியனுக்காக மட்டுமே….”
எனவே வரும் நாட்களில் உங்களின் ( திரு.கார்த்திக் )பொன்னான நேரத்தினை இம்மாதிரியான சாமானியர்களின் பதிவுகளில் வீணடிக்க வேண்டாமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த பதிவுகள்….”ஒரு சாமானியனின் பார்வையில் ஒரு சாமானியனுக்காக மட்டுமே….”
எனவே வரும் நாட்களில் உங்களின் பொன்னான நேரத்தினை இம்மாதிரியான சாமானியர்களின் பதிவுகளில் வீணடிக்க வேண்டாமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
எழுதியவர் gkm நாள் நவம்பர் 12, 2009
நேரம் 8:04 மு.பகல்
கரடி, காளை…என்று பதிவில் குறிப்பிடுவதால் சில சமயம் இதுபோல் ஐந்தறிவு ஜீவன்களும் அவப்போது வந்து பின்னூட்டமிட்டுச் செல்கின்றன என்று நினைக்கிறேன்!!
இந்தச் சொல்லடிகளைப் பொருட்படுத்தாது எங்களைப் போன்ற சாமான்யர்களுக்காக தொடர்ந்து பதிவிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்!!
எழுதியவர் skarthee3 நாள் நவம்பர் 12, 2009
நேரம் 9:00 மு.பகல்
சரவணன் சார்,
சூரியனை பார்த்து நாய் குலைத்தால் சூரியனுக்கு என்ன நஷ்டம் ?
உங்கள் தன்னலமற்ற சேவையை புரிந்து கொள்ளும் சக்தி இவர்களுக்கு இல்லை.
விட்டு தள்ளுங்கள் சார் இந்த அற்ப பதர்களை.
- விமல்
எழுதியவர் vimal நாள் நவம்பர் 12, 2009
நேரம் 9:47 மு.பகல்
Don’t bother about this persons.
we are with you,
with love,
daytrading prince
எழுதியவர் day trading prince நாள் நவம்பர் 12, 2009
நேரம் 3:45 பிற்பகல்
Dear Saravana kumar ,
saw ur remarks about Karthicks comments . Least bothered about those things keep posting ur views . People like me never trade in markets without reading ur website. keep going ………..Regards
எழுதியவர் Dr. Kay நாள் நவம்பர் 12, 2009
நேரம் 3:49 பிற்பகல்
சரோ சார்,
கீழ்த்தரமான மனிதர்கள் எப்பொழுதும் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சாம்பிள். இவர்களை பற்றி கவலை மட்டுமல்ல நினைக்க கூட வேண்டாம்.
உங்களின் இந்த தன்னலமற்ற சேவையினை தொடரவும். வாழ்த்துகள்.
நன்றி
கண்ணன்
எழுதியவர் கண்ணன் நாள் நவம்பர் 12, 2009
நேரம் 9:07 பிற்பகல்
பொன்னான நேரத்தினை இம்மாதிரியான சாமானியர்களின் பதிவுகளில் வீணடிக்க வேண்டாமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்…தயவு செய்து ஓரு blog ஆரம்பிகவும்…. mr வேலை வெட்டி இல்லாத கார்த்தி….
எழுதியவர் jumpingoption, நாள் நவம்பர் 12, 2009
நேரம் 10:49 பிற்பகல்
தங்களின் தன்னலமற்ற சேவையினை தொடரவும்.நாங்கள் அனைவரும் உங்கள் பக்கம். நன்றி
எழுதியவர் டேவிட் ராஜா நாள் நவம்பர் 14, 2009
நேரம் 4:42 பிற்பகல்