panguvaniham எழுதியவை | நவம்பர் 13, 2009

13, நவம்பர் 2009

எதிர்பார்ப்புகளை மீறிய IIP விவரங்களினால் கூட  நேற்று தேசிய நிஃப்டியில் முக்கிய தடை நிலையான 5033 நிலைகளை மீற இயலவில்லை. காளைகள் கிடைத்த வாய்ப்பினை பயன் படுத்திக் கொள்ளவில்லை என்றே கருதுகிறேன்.

தற்போதைய நிலையில் தேசிய நிஃப்டி 5044 நிலைகளை கடந்திடாத வரையில் பக்க வாட்டு நகர்வுகளே சாத்தியமாகுமென எதிர்பார்க்கிறேன். இன்று வாரத்தின் கடைசி நாளாகையால் பெரும்பாலானோர் தங்களை நிலைகளை முடிக்க முனையும் பட்சத்தில், நாளின் நெடுகில் பதட்டமான ஒரு சூழலையே எதிர்பார்க்கிறேன்.

இன்றைய சந்தைகளை பொறுத்தவரையில் மேல் நிலையில் 5044 வலுவான தடை நிலையாக இருக்கும். கீழ் நிலையில்  4860 கடைசி வலுவான தாங்கு நிலையாக இருக்கும். இந்த நிலையில் இருந்து வலுவான மீட்சியினை எதிர்பார்கிறேன். வரும் வாரத்தில் சமீபத்தைய உயர் நிலையான 5181 உடைபடும் வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது.

தொடர்ந்து ஆறேழு நாட்கள் உயர்வுக்குப் பின்னர் ஆசிய சந்தைகள் இன்றைக்கு லாபத்தினை உறுதி செய்யும் வாய்ப்புகள் இருப்பதால் நமது சந்தைகளின் உயர்வுகள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதை மனதில் கொண்டு தினவர்த்தகம் புரிந்திட வேண்டுகிறேன்.

நாளின் நெடுகில் பின்வரும் நிலைகளில் கவனமாய் செயல்படுங்கள்….

4828 – 4862 – 4897 – 4927 - 4966 – 4983 – 5011 – 5033 – 5044 – 5087 – 5111


மறுவினைகள்

  1. Good Morning Saro Sir.

  2. Please update Panguvanihan blog with your recommendations.

  3. Good morning saravanan sir and thank you very much for your market views sir.

    Try to give levels for top volume traded nifty stocks for day trading.

  4. Good Morning Sir.

  5. GOOD MORNING SIR…..

  6. காலை வணக்கம்…!

  7. தாங்கள் ஏன் இந்திய மற்றும் சர்வதேச சந்தைகளை பற்றி வாராந்திர ஆய்வு கட்டுரைகள் எழுத கூடாது?

  8. dear sir

    i am read your blog daily it is very usefull,please sir try to write about currency market and how to open forextrading account


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்