panguvaniham எழுதியவை | நவம்பர் 16, 2009

16, நவம்பர் 2009

புதிய வாரம்…

கடந்த வாரத்தைய  நிகழ்வுகள் சிலவற்றை இங்கே  பட்டியலிட விரும்புகிறேன்….

கடந்த வாரத்தில் தேசிய நிஃப்டி 4% உயர்ந்திருக்கிறது.

அமெரிக்க சந்தைகள் உட்பட பெரும்பாலான சந்தைகள் அக்டோபர் மாத மேல் நிலைகளைஉடைத்திருக்கின்றன.

பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் சந்தைக்கு வருகின்றன.

நிதியமைச்சகம் புதிய பொருளாதார சீர்திருத்தங்களை அறிவிக்கும் முனைப்பில் இருக்கின்றன.

IIP குறியீட்டு எண் எதிர்பார்ப்புகளை மிஞ்சியிருக்கிறது.

FII தங்கள் நிலைகளை அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

Monthly Chart ல் கடந்த பத்து ஆண்டுகளில் ஒன்பது முறை தேசிய நிஃப்டி நவம்பர் மாதத்தில் அக்டோபர் மாத உயர் நிலைகளை உடைத்திருக்கிறது.

மேற்சொன்ன காரணிகள் சந்தையில் எத்தகைய தாக்கத்தை கொண்டு தருமென்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

இந்த வாரத்தினை பொறுத்தவரையில் தேசிய நிஃப்டியில் கீழ் நிலையில் 4866 வலுவான தாங்கு நிலையாக இருக்கும். இந்த நிலைகள் உடைபடாத வரையில் காளைகள் பெரிதாய் கவலைப் பட ஏதுமில்லை என்றே கருதுகிறேன்.மேல் நிலையில் தேசிய நிஃப்டியில் 5089 வலுவான தடை நிலையாக இருக்கும். இந்த நிலைகள் உடைபடும் பட்சத்தில் சந்தைகளுக்கு திரும்பி பார்க்க நேரமிருக்காதென்றே நினைக்கிறேன்.

இன்றைய சந்தைகளை பொறுத்தவரையில் நாளின் துவக்கம் ஆசிய சந்தைகளையொட்டியே அமையும்.  தேசிய நிஃப்டியில் 5044 நிலைகள் வலுவான தடை நிலையாக இருக்கும் .இந்த நிலைகள் உடைபடும் பட்சத்தில் உயர்வின் வேகம் அதிகரிக்கும். கீழ் நிலையில் 4966 நிலைகள் தாங்கு நிலையாக இருக்கும். இது அத்தனை வலுவான தாங்கு நிலையாக இருத இயலாது. எனவே கவனம் தேவை.

கடந்த சில வாரங்களாய் வலியுறுத்தி வரும் ஒரு கருத்தினை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். நீண்டகால முதலீட்டாளர்கள் ஒவ்வொரு பின்னடைவிலும் தங்கள் முதலீடுகளை அதிகரித்துக் கொள்ளலாம். பெரிய அளவிலான லாபங்கள் காத்திருக்கின்றன.

இன்றைய சந்தையில் பின்வரும் நிலைகளில் கவனமாயிருங்கள்…

 4866 – 4897 – 4926 – 4966 – 4984 – 5011 – 5044 – 5089 – 5108 – 5164


மறுவினைகள்

  1. GOOD MORNING SIR…….

  2. Good morning sir and thank you very much for your views sir.

    Your nifty levels are useful for intraday traders.

  3. Yes, correct Sir, But I have the doubt- Who is the deside this movement Bull and Bear ????( Apart from Technical chart)

    Kannan

  4. காலை வணகக்ம்.


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்