18, சனவரி 2010


இந்திய கம்யூனிசத்தின் மாபெரும் தலைவர் தோழர் ஜோதிபாசுவுக்கு பங்குவணிகம் தனது அஞ்சலிகளை சமர்ப்பிக்கிறது.

தொடர்ச்சியாய் இரண்டாவது வாரமாய் சந்தைகள் பக்கவாட்டில் நகர்த்தப் பட்டிருக்கின்றன. இதை சந்தையின் இயல்பான போக்காய் கருத இயலவில்லை. வலுவான காரணிகள் (எதிர்பார்ப்புகளை ஒட்டிய அல்லது மிஞ்சிய IIP குறியீட்டு எண்கள்,நிறுவனங்களின்  காலாண்டு முடிவுகள்,தொடரும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்களின் பங்களிப்பு, அரசின் Disinvestment அறிவிப்புகள்) ஒவ்வொன்றாய் வந்து சேர்ந்து கொண்டிருக்கும் வேளையில் இத்தகைய பக்கவாட்டு நகர்வுகளுக்கு அவசியமே இல்லை.

எனவே நீண்டகால முதலீட்டாளர்கள் ஒவ்வொரு பின்னடைவின் போதும் தங்களின் முதலீட்டினை அதிகரித்துக் கொள்ளலாம். குறுகிய கால முதலீட்டாளர்கள் மற்றும் தின வர்த்தகர்கள் மட்டுமே இம்மாதிரியான சுணக்கச் சூழலில் கவனமாய் இருத்தல் அவசியம்.

இரண்டாவது வாரமாய் தேசிய நிஃப்டி 5300 நிலைகளை மீற இயலாத நிலையில் சிறிய அளவிளான பின்னடைவுகளுக்கான சாத்தியங்களை மறுக்க இயலாது. வாரத்தின் நெடுகில் தேசிய நிஃப்டி 5158 நிலைகளுக்கு கீழ் முடிவடையும் பட்சத்தில் இம்மாதிரியான பின்னடைவுகளுக்கு வாய்ப்புகள் உருவாகும்.  அதுவரையில் சிறிய முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் பெரிதாய் கவலைகொள்ள ஏதுமில்லை.

இன்றைய தினத்தினை பொறுத்தவரையில் தேசிய நிஃப்டியில் 5258 மிகவும் முக்கியமான நிலையாக இருக்கும். இந்த நிலைகளுக்கு மேல் மட்டுமே உயர்வுகளை எதிர்பார்க்க இயலும். கடந்த வெள்ளியன்றைய அமெரிக்க சந்தைகள் கணிசமாய் பின்னடைந்திருப்பதும், இன்றைக்கு அமெரிக்க சந்தைகளுக்கு விடுமுறையுமாகையால் ஆசிய சந்தைகளே நமது சந்தையை வழிநடத்தும்.

பொதுவில் துவக்கம் பலவீனமாகவே இருக்கும். மேலே சொன்ன 5258 நிலைகளை சந்தைகள் எவ்வாறு கையாளுகின்றன என்பதை பொறுத்தே நாளின் நெடுகில் சந்தையின் போக்கு அமையும். இன்று மேல் நிலையில் 5297 வலுவான தடை நிலையாக அமையும். கீழ் நிலையில் 5218 வலுவான தாங்கு நிலையாக இருக்கும்.

தேசிய நிஃப்டியில் நாளின் நெடுகில் பின்வரும் நிலைகளை கவனியுங்கள்…

5178 – 5203 – 5218 - 5231 – 5258 – 5280 - 5296 – 5313 – 5339 – 5371

இன்று காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் நிறுவனங்கள்….

GAIL
JAIPRAKASH ASSOCIATES
Sesa Goa
Infotech Enterprises
IL and FS Investment Managers
Shriram Transport Finance
ZEE Entertainment
GTL Infrastructure
Sterlite Technologies
Ajmera Realty
Somany Ceramics
State Bank of Mysore
HT Media

About these ads