21, ஏப்ரல் 2010


மேலே நீங்கள் பார்ப்பது தேசிய நிஃப்டியின் தினசரி சார்ட்.  நேற்றைய சந்தையில் திங்கட் கிழமையின் கீழ் நிலைகள் உடைபடவில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஆக தற்போதைக்கு இந்த நிலை உடைபட்டால் மட்டுமே சந்தைகள் மேலதிக சரிவுகளை எதிர்பார்க்கலாம். இது காளைகளுக்கு ஆறுதலான செய்தி.

மத்திய ரிசர்வ் வங்கியின் நேற்றைய அறிவிப்புகள், எதிர் பார்ப்புகளை ஒட்டியே அமைந்ததனால் சந்தையில் பெரிதான சலசலப்புகள் ஏற்படவில்லை .தற்போதைக்கு பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வருவதுதான் அவர்களின் பிரதான நோக்கமாய் இருக்கிறது.

இன்றைய சந்தைகளைப் பொறுத்த வரையில் தேசிய நிஃப்டியில் 5204 வலுவான தாங்கு நிலையாக இருக்கும். மேல் நிலையில் 5262 வலுவான தடை நிலையாக இருக்கும். இந்த நிலைகளில் ஏதேனும் ஒரு நிலைக்கு மேல் அல்லது கீழே சந்தைகள் முடிவடைந்தால் மட்டுமே சந்தைகளின் அடுத்த கட்ட நகர்வு சாத்தியமாகும். இல்லையேல் பக்கவாட்டு நகர்வுகளை தவிர்க்க இயலாது.

ரிலையன்ஸ் பங்குகள் நேற்று பக்கவாட்டில் நகர்ந்தன. அடுத்த இரு தினங்களில் முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில் இம்மாதிரியான நகர்வுகளையே எதிர்பார்க்க இயலும். தற்போதைய நிலையில் 1055 வலுவான தாங்கு நிலையாக இருக்கும்.

SBI  பங்குகள் நேற்று மிகவும் வலுவான தடை நிலைகளில் முடிவடைந்திருக்கின்றன. தற்போதைய நிலையில் 2059 முக்கியமான தாங்கு நிலையாக இருக்கும். இன்றைய சந்தையின் முடிவில் 2115 நிலைகளுக்கு மேல் முடிவடையும் பட்சத்தில் வார இறுதிக்குள் 2225 வரையில் உயர்ந்திடும் வாய்ப்புகள் இருக்கின்றன….பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

BEL பங்குகளை கவனியுங்கள், கடந்த ஒரு மாத காலத்தில் 15% வரையில் சரிந்திருக்கிறது. நேற்றைய கீழ் நிலையான 1875 நிலைகளை(Stop loss) நஷ்ட்டத்தை நிறுத்து நிலையாக கொண்டு Swing trade செய்யலாம். 2000 வரையில் உயரும் சாத்தியங்கள் இருக்கின்றன.

நாளின் நெடுகில் தேசிய நிஃப்டியில் பின் வரும் நிலைகளில் கவனமாய் இருங்கள்.

5088 – 5122 – 5161 - 5188520552335262 – 5286 – 5305

இன்று முடிவுகளை அறிவிக்கும் நிறுவனங்கள்…

HCL TECHNOLOGIES
Infotech Enterprises
Polaris Software
United Spirits
Piramal Healthcare
TVS Motor
Hindustan Zinc
State Trading Corporation
Aries Agro
Zee News

About these ads