11, சனவரி 2012
கடைசியில் நாம் ஆவலாய் எதிர்பார்த்திருந்த நிலைகள் உடை பட்டு சந்தைகள் வலுவான காளைகளின் கட்டுப் பாட்டில் வந்திருக்கிறது. கடந்த வாரத்தில் எதிர்பார்த்த இந்த கட்டுடைப்பு நேற்றைய சந்தையில் சாத்தியமாகி இருக்கிறது. முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டதைப் போலவே தற்போதைய உயர்வுகள் 4918 வரையில் நீடிக்கும் சாத்தியங்களை எதிர்பார்க்கிறேன்.
இன்றைய சந்தைகளைப் பொறுத்த வரையில், நாளின் துவக்கத்தில் 4830 முக்கியமான நிலையாக இருக்கும். நாளின் துவக்கத்தில் இந்த நிலைகளை சந்தைகள் எவ்வாறு கையாளுகின்றன என்பதைப் பொறுத்தே நாளின் நெடுகில் சந்தையின் நகர்வுகள் அமையும்.
மேல் நிலையில் 4918 வலுவான த்டை நிலையாக இருக்கும். இந்த நிலைகளில் சந்தைகள் தேங்கும் வாய்ப்பினை எதிர்பார்க்கிறேன். கீழ் நிலையில் 4772 முக்கியமான தாங்கு நிலையாக இருக்கும்.
தற்போது முடிவடைந்துள்ள அமெரிக்க சந்தைகள் நம்பிக்கையோடு முடிவடைந்திருக்கின்றன.கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத உயர்வு நிலையில் இருப்பது சர்வதேச சந்தைகளில் நம்பிக்கையை தக்க வைக்கும். மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெளியாகத் துவங்கி இருக்கும் இந்தச் சூழலில் நாளை வெளியாக இருக்கும் HDFC, INFOSYS நிறுவன முடிவுகள் சந்தை நகர்வின் அடுத்த கட்டத்தினை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கிறேன்.
மறுமொழிகள் இட இயலாது.