பொருளடக்கத்திற்கு தாவுக

16, சனவரி 2012

ஜனவரி 16, 2012

கடந்த வாரத்தின் முடிவில் சந்தைகள் முந்தைய வாரத்தினை விடவும் 2% விழுக்காடுகள் வரை உயர்வடைந்திருக்கின்றன.சந்தைகள் கணிசமான உயர்வுகளோடு முடிவடைந்திருந்தாலும் கூட தேசிய நிஃப்டி 4917 நிலைகளை மீறாமல் போனதில் கொஞ்சம் ஏமாற்றமே!.

இரண்டாவது வாரமாய் உயர்வடைந்திருக்கும் சந்தைகளின் உயர்வு இந்த வாரமும் தொடருமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். தொடரும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பொருளாதாரர நெருக்கடி நிலமைகள் சந்தையின் திசையினை எப்படியும் மாற்றி விடும் என்பதை மனதில் கொள்ளவும்.

இந்த வாரத்தினை பொறுத்தவரையில் தேசிய நிஃப்டியில் இரண்டு நிலைகள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். கீழ் நிலையில் 4747 வ்லுவான தாங்கு நிலையாக இருக்கும். மேல் நிலையில் 4972 முக்கியமான தடை நிலையாக இருக்கும். அநேகமாய் சந்தைகள் இந்த இரண்டு நிலைகளுக்குள் ஊடாடும் வாய்ப்புகளையே எதிர்பார்க்கிறேன்.

இவற்றில் ஏதேனும் ஒரு நிலை உடைபட்டால் அந்த திசையில் அதிக பட்சம் 100 புள்ளிகள் வரையிலான நகர்வுகளை எதிர்பார்க்கலாம். இது வாராந்திர நிலைகளுக்கு மட்டுமே.

இன்றைய சந்தைகளைப் பொறுத்தவரையில் நாளின் துவக்கத்தில் 4840 முக்கியமான நிலையாக இருக்கும். இந்த நிலைகளை சந்தைகள் எவ்வாறு கையாளுகின்றன என்பதைப் பொறுத்தே சந்தையின் திசை மற்றும் தின வர்த்தகம் அமையும்.

இன்று காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் நிறுவனங்கள்…

Auto Stampings,Dewan Housing,ING Vysya Bank,Magma Fincorp,Morarjee Text,Motilal Oswal F,South Ind Bk,Tata Elxsi,Tata Inv Corp

மறுமொழிகள் இட இயலாது.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 71 other followers