23, சனவரி 2012
தொடர்ச்சியாக மூன்றாவது வாரமாக சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்திருக்கின்றன. கடந்த பதினைந்து மாதங்களாய் தொடரும் சரிவுகள் முடிவுக்கு வந்து விட்டதைப் போல ஒரு தோற்றம் ஊடகங்களால் உருவாக்கப் படுகிறது. இது எத்தனை தூரத்திற்கு நிஜம் என்பதை புரிந்து கொள்வது அவசியம்.கீழே உள்ள படத்தைப் பாருங்கள். இது தேசிய நிஃப்டியின் வாராந்திர வரைபடம். கடந்த பதினைந்து மாதங்களுக்கானது.
கடந்த பதினைந்து மாதங்களில் சந்தைகள் தெளிவான ஒரு சரிவுப் பாதையில் பயணிப்பதை பார்த்தவுடன் புரிந்து கொள்ள முடியும். இந்த கால கட்டத்தில் சந்தைகள் ஐந்து முறை மேலே Trend line ஐ உடைக்கும் முயற்சியில் தோல்வி அடைந்திருப்பதை அவதானிக்கலாம்.ஆறாவது முறையாக இந்த வாரம் மேல் நிலைகளை எட்டும் வாய்ப்புகள் உருவாகி இருக்கின்ற்ன.இந்த நிலையில் இதை வாங்கிடுங்கள், அதனை வாங்கி வையுங்கள் என்பதாக செய்யப் படும் ஊடக பரிந்துரைகளின் பின்னாலிருக்கும் நம்பகத் தன்மை கேள்விக்குரியதே.
இந்த வார சந்தைகளை பார்ப்போம்…..
தொடர்ச்சியான மூன்று வார உயர்வுகள், ஏமாற்றத்தை தந்த ரிலையன்ஸ் முடிவுகள், நாளை எதிர்பார்க்கப் படும் மத்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள், நாளை மறு நாளைய FNO expiry, வியாழனன்றைய சந்தை விடுமுறை இத்துடன் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும் காலாண்டு முடிவுகள் என கலவையான காரணிகளை முன்வைத்து இந்த வாரச் சந்தைகள் துவங்குகின்றன.
கடந்த வாரத்தில் குறிப்பிட்டவாறே தேசிய நிஃப்டியில் 5064 முக்கியமான தடை நிலையாக இருக்கும். இந்த நிலைகளுக்கு மேல் இன்றைய சந்தைகள் முடிவடையும் பட்சத்தில் வாரத்தில் நெடுகே 5133 வரையில் உயரும் வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். இந்த நிலையில் கடுமையான Selling Pressure உருவாகும் என எதிர்பார்க்கிறேன். கீழ் நிலையில் 4933 முக்கியமான தாங்கு நிலையாக இருக்கும். என்னளவில் தற்போதைய உயர்வுகள் தற்காலிகமாய் 5064 நிலைகளில் முடிவடையும் என்றே எதிர்பார்க்கிறேன்.
இனி இன்றைய சந்தைக்கான வர்த்தக உத்தி…..
ரிலையன்ஸ் முடிவுகள் நாளின் துவக்கத்தில் சலசலப்பினை உண்டாக்கும் என எதிர்பார்க்கலாம். FNO expiry காரணமாக சந்தையில் நிலையற்ற தன்மை நிலவும்.
நாளின் துவக்கத்தில் 5033 மிக முக்கியமான நிலையாக இருக்கும். இந்த நிலைகளை சந்தைகள் எவ்வாறு கையாளுகின்றன என்பதைப் பொறுத்தே இன்றைய சந்தையின் திசைகள் தீர்மானிக்கப் படும். மேல் நிலையில் 5089 தடை நிலையாக இருக்கும். கீழ் நிலையில் 4991 தாங்கு நிலையாக இருக்கும்.
இன்று காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் நிறுவனங்கள்….
Ashoka Buildcon,Cera Sanitary,Colgate,Coromandel Int,DB Corp,Electrosteel,Federal Bank,GAIL,Gandhi Spl Tube,Geometric,Idea Cellular,Jyothy Labs,KPIT Cummins,Kotak Mahindra,Lakshmi Machine,Onward Tech,Phoenix Mills,RPG Life,Saksoft,Shree Cements,Smartlink Net,Sterlite Ind,Super Sales,Torrent Pharma,Vardhman Text

வரு தடங்களும் வரு பிங்குகளும்
மறுமொழிகள் இட இயலாது.