25, சனவரி 2012
மத்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளின் எதிரொலியாக நேற்றைய சந்தையில் தேசிய நிஃப்டியானது நமது வாராந்திர தடை நிலையை தொட்டு மீண்டிருக்கிறது. வங்கித் துறை பங்குகளில் தொற்றிக் கொண்டிருக்கும் உற்சாகம் தொடருமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இன்று FNO expiry
தேசிய நிஃப்டியின் வாராந்திர தடை நிலையான 5133 உடைபட்டு விட்ட நிலையில் அடுத்து 5223 தடை நிலையாக இருக்கும். எனினும் நேற்றைய உயர்வுகள் ஒரு செய்தியினால் உந்தப் பட்டு உண்டான உயர்வுகள் என்பதை மனதில் கொள்ள வேண்டுகிறேன். செய்தியின் தாக்கம் தணிந்து விட்ட நிலையில் கணிசமான பின்னடைவுகள் உண்டாவது இயல்பே.
இன்றைய சந்தைகளைப் பொறுத்தவரையில் 5145 முக்கியமான தடை நிலையாக இருக்கும். இந்த நிலைகளை மீறினால் மட்டுமே இனி உயர்வுகள் சாத்தியமாகும். கீழ் நிலையில் 5058 முக்கியமான தாங்கு நிலையாக இருக்கும். நாளின் துவக்கத்தில் இவ்விரு நிலைகளில் ஏதேனுமொன்று உடைபட்டால், அந்த திசையில் சந்தையின் வேகம் அதிகரிக்கும். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இன்று காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் நிறுவனங்கள்….
AP Paper Mills,BEML,Bank of Baroda,Deepak Fert,Himatsingka Sei,IRB Infra,JB Chemicals,JSW Holdings,Jayshree Tea,Kirloskar Ind,Kirloskar Oil,L&T Finance,Marg,Mirc Electronic,Oracle Financ,Patni Computer,Rural Elect Cor,Sterlite Techno,Supreme Ind,Surana Corp,Tata Comm,Tata Global Bev,Union Bank,Vijaya Bank,WABCO India
மறுமொழிகள் இட இயலாது.